என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

விருப்பம் இணையும் போது

காமத்தை மறந்தவரும் இல்லை,
காதலை மறுத்தவரும் இல்லை...
விரும்பும் விருப்பம் இணையும் போது...

வாழ்க்கை

குளுகுளு இரவு,
இதமான மனது,
தழுவிடும் கனவு,
அழைத்திடும் நினைவு,
அணைத்தது இமைகள்,
துவண்டது தேகம்,
உருண்டது நேரம்,
நிம்மதி உறக்கம்,
கனிந்தது காலை,
விரைந்திடும் மீண்டும்..
வாழ்க்கையை நோக்கி...
மனம் வலித்தாலும் வாழ்க்கை ஓட்டம் நிற்பதில்லை...
கூடவே ஓடவேண்டி இருக்கு.....

அலைப்பேசி

அலைபேசி ஒலிக்கும்போது....
சிலநேரம் சந்தோசம்,
சிலநேரம் படபடப்பு,
சிலநேரம் சங்கடம்,
சிலநேரம் எரிச்சல்,
சிலநேரம் அழுகை,
எடுத்து முத்தமிடுவது ஒருநேரம்
விட்டு தூர எறிவது ஒருநேரம்,
தொடுவதற்கே அஞ்சும் பார்வைநேரம்,
இப்படியாய் நம்முடனே .....
உற்றதோழனாய்.... அலைப்பேசி....

இதமாகுமடி....

குடைக்குள் இழுத்தாய்,
கருணையா காதலா ?..
மழைத்தூரல் அழகடி,
நனைந்திடவும் ஆசையடி,
உணர்வுகளை மறைத்தே
பொய்யுரைத்தேன் நானடி..
மூச்சுக்காற்றும் தனலானதடி ,
தொண்டைகுழியும் விக்குதடி,
இடைத்தீண்டல் இம்சையடி,
முத்தமிடதுடிக்குதடி,
வார்த்தைகள் ஒலியிழந்ததடி,
சிறுதீண்டலும் சிதைமூட்டுதடி,
உச்சந்தலை வெடிக்குதடி,
உன்மழை ஓவியம் கிறக்குதடி,
காமம் கட்டுக்குள்இல்லையடி,
விழிமோதும் நொடிப்பொழுதில்
மின்னலும் தோற்க்குமடி...
ஏன் இந்த கொடுமையடி,
தவிர்க்கவிரும்பா தவிப்படி...
விரல்தீண்டலில் முகம்பார்கிறாய்,
சிறுபுன்னகையில் புரிவேனடி,
மழைசாரல் இதமாகுமடி....

- கவிதை பூக்கள் பாலா

புகைப்படம்

மின்னல் வெட்டியது
நிழலாகி போனேன் ....
- புகைப்படம்

தண்டணை

தூண்டுதலுக்கு தண்டணை உண்டாமே !
பார்க்க தூண்டும் உன் அழகிற்கு ????.....

பனித்துளி

புல்நுனி பனித்துளி
பரவசத்தில் இளங்கதிர்...
ஒளிர்ந்திடும் வானவில்
ஓராயிரம் கற்பனையில்
உருகிடும் வார்த்தைகள்
உருவாகிடும் கவிதைகள்
அவளின் கருணை விழிகள்
போலவே குளுமையானதோ....

- கவிதை பூக்கள் பாலா

' 'மழை ''

கருவானம் கண்கலங்குது,
நிலவுக்காதலியை தொலைத்துவிட்டு....
' 'மழை ''

துணையற்றவர்

விதவை என்ற சொல்லெடுத்து
வீதியில் வீசி போகிக் கொண்டாடுங்கள்...
துணையற்றவர் என்றே இருபாலருக்கும்
பொதுவாய் அழைத்திடுங்கள்...
புதுவாழ்க்கை தொடங்கியே
இழந்த வாழ்வை மீட்டெடுங்கள்...
சிறிய வாழ்வும் சிறப்படையும்....

''கனவு''

கனவு பொய் இனிமை
நிகழ்வு உண்மை கசப்பு
நிஜத்தை மறந்து
மாயையில் மனிதயினம்..
வலி ஒடிக்கும் பிடியோ..
''கனவு''

தாலாட்டு

சிறகுகள் சிறைப்படுமோ
வானவெளி கனவாகுமோ
வாழ்வும் காட்சியாகுமோ
(ஏன் பிறந்தாய் )
பிறந்த கிளிக்கு - இப்படியும்
தாலாட்டுமோ தாய்பறவை...
Like

மார்பகம்

அழகூட்டும் உறுப்பாக்கி
அறுத்து சீராக்க தயங்காத
அற்ப கவச்சியில் ஆனந்தமோ...
மானுடம் தொடர பாலூட்டும் அங்கம் ,
ஆராயிச்சி கூடமாக்கிய காமகண்கள்,
காட்சிப்படுத்தி பொருளீட்டும் ஊடகங்கள்,
பாலூட்ட மறந்துபோன நவீன தாய்கள்....

படைப்பின் பொருள் மறந்து,
போதையில் சொக்கிபோகும்
இச்சையின் கச்சையாய்
மாறிப்போனதோ மார்பகம் இன்று...
- கவிதா பூக்கள் பாலா
விரட்டி வரும் துன்பம் ,
பிடித்துவிடாது ஓடும் இன்பம்,
வாழ்க்கை வட்டத்தில்,
கோகோ விளையாடு..
கனவும் கைவிட்டது
காதல் கசந்ததால்,
உழைப்பு உயர்த்திவிடும்
காணும் கனவும் கைக்கூடும்..

கடற்கரை மீதமர்ந்தோம்

கடற்கரை மீதமர்ந்தோம்
காற்று காதோடு பேசி செல்கிறது
மொழிதான் புரியவில்லை
கவனம் களவுபோனதே காரணமோ !
நண்டாக விரல்மாறி புரியாத கோலமிட,
மழலைகளின் மணல் விளையாட்டில்
தன் வாரிசின் முகம் கண்டிடுமோ !
எதிர்காலம் தெரிந்துக்கொள்ள
கைநீட்டும் இளவட்டங்கள் நடுவில்
இளமைகாலம் தொலைத்துவிட்ட
முதுமைகளும் கைநீட்டும் கொடுமை,
விரச விளையாடும் அரங்கேறும்
விரத்தியில் வசைபாடும் நடந்தேறும்,
மசாலாக்களின் நெடி இழுக்கும்
சுகாதாரத்தை முற்றிலும் சூறையாடும்,
கழுதையான குதிரைகளில்
தேசிங்குராஜாக்களின் எல்லைதாண்டா பாச்சல்,
சுட்டு வீழ்த்தும் பலூனில்
சூரனாகி நெஞ்சைநிமிர்த்தும் மாவீரர்கள்,
திரைமாயைகளின் மயக்கத்தில்
சேர்ந்தெடுக்கும் புகைப்பட புன்னகைகள்,
ஆர்பரிக்கும் அலைநடுவே கால்நனையா
கரைமுழுங்கும் தொடர்போராட்டம்,
தொடுவானம் தொட்டுவிடும்
மனபறவைகளின் தொடர்முயற்சி,
மீளா உறங்கிப்போன தலைவர்களை
காலமுழுக்க சுற்றிசெல்லும் மனிதகூட்டம்,
லயித்து போன மனரசனை
கண்ணை கட்டும் அவள் விரல்களில்
கலைந்துதான் போனதே,
என்னடா காதலா எவள் பார்வைப்பட்டது
என் வருகைக்குமுன் நையாண்டி செய்கிறாள்...
அசடுவழியும் அனிச்சை செயல் தானாகவே !...


- கவிதை பூக்கள் பாலா

ஓ மை காட்

வீரத்தின் வடிவமே ! ,
அசகாயசூரனே !,
வீச்சருவாள் வீரனே !
துப்பாக்கியின் தோட்டவே !
கருணையின் மறுவுருவே !
அன்பின் பிறப்பிடமே !
எல்லாம் பேனருக்கு மட்டும்தானே !

உள்ளுக்குள்ள கதறல்,
சுற்றியும் எப்பவும் பதறல்,
எதுக்குடா இந்த வாழ்க்கை....
இரத்தத்தை ரசிப்பவனுக்கு
கருணை எங்குட்டிருக்குடா...
ஒரே காமெடியா இருக்குப்பா
பேனர்களை பார்க்கும் போது...
உடனே நம்ம சுனா பானா
நினைவுக்கு வரத நிறுத்தமுடியலிங்கோ..
ஓ மை காட்

காதல் நினைவுகள்

உன் இதயத்தில் உறங்கிப்போன நம் காதல் நினைவுகள்,
இன்றும் உறங்காமல் செய்கிறதடி என்னை....

காகம்

விரட்டிடும் காகம் வத்தல் காயிது,
கூவி அழைக்கும் காகம்,
விரதத்துல வயிறு காயிது...

மஞ்சள் பூசுது வானம்..

முடிந்து போகும் இரவும்,
மலரபோகும் விடியலும்,
சந்திக்கும்போது மயங்கிடுமோ
வெட்கி சிவந்து மஞ்சள் பூசுது வானம்..

வாழ்வின் சுவாரசியம்

எதிர்பார்க்கா நிகழ்வு எதிர்பாராமல் நடப்பதும்,
எதிர்பார்க்கும் தருணம் நிகழாமலும் போவதே ,
மனித வாழ்வின் சுவாரசியம்...

'' தந்தை ''

கருவாக்கி, கரம்பிடித்து வளம்வந்து,
உன் நிழலாகி, நிழல்தந்து,
தேய்ந்து, நீ தேயாது புன்னகைக்க,
தோள்சுமக்கும் சன்மானமற்ற
கடவுளடா '' தந்தை ''

இதுவே மனித வாழ்க்கை..

காற்றிலே கலந்துவிட்ட உயிரும் உடலும் ,
நேற்றுவரை மனிதனாக உருவகம்,
இன்று உடல்மட்டுமே பிணமென்ற பெயரோடு,
இனி நினைவுகளில் மட்டுமே ....
இதுவே மனித வாழ்க்கை.

மனிதன் பயணம் :

எப்படியோ எப்பொழுதோ இழந்திட்ட உணர்வுகள்
தனக்குள்ளே புதைத்தே தான் கடக்கின்றோம்
விளைவாய் விபரீதமாய் மன உலைச்சல்கள்,
வடிந்திடும் கனவுகள், உலவிடும் நினைவுகள்,
அசைத்துப்போடும் உணர்வுகள் தான் மனிதன்,
பயணிக்கு வாழ்க்கையில் சிலபிடிப்புகள் சில்லிடும்,
சிறகடிக்கும் மனது மீண்டும் பிறக்கும் மனிதனாய்,
மனம் மலர்ந்திடும் மகிழ்வாய் மாற்றிடும் கடமைகளை,
தொலைந்த மகிழ்வு தொடங்கிடும் கடமையோடு..
வாழ்க்கை மகிழ்வுக்கு பல பயணங்களாய் தொடரும்,
மனிதன் பயணம் ஒரு சுழச்சியே...

அடைமழை

அடைமழையில் ஆனந்தமானது,
சோம்பல் முறிக்கும் உடல்
மெத்தையில் சுகம்காணுது
ஓடாமல் ஓய்வுக்கொள்ளுது,
ஜன்னலோர மழைசாரல் கவிதையாகுது,
சூடான தேனீரும் செர்க்கமாகிறது,
சூரியனின்றி நேரம் கடிகாரமானது,
காலநேரங்கள் காலம்கடத்துது....

சற்றே தணிகிறது ..

சில்லென்ற மழைச்சாரல்
சிலிர்த்திட்ட காலைவேளை ,
காற்றோடு செல்ல சண்டையிடுகின்றது
மனங்களில் தண்ணீர் கவலை
சற்றே தணிகிறது ..
இரவென்றால் துணையாகும் உறக்கமும் கனவும் ,
விடிந்தால் விட்டு விலகிச்செல்லும் காரணம் யாதோ !

மழைகுளியல்:


தொடுவானம் தொட்டிலாக்கி,
அன்னைபூமியின் விரல்பிடித்து
சுற்றிவரும் நிலவுமகள்..
கிலுகிலுப்பை இடிகலாக்கி,
புன்னகைத்து மின்னலாக்கி,
வருணனை நீர்ச்சாரலாக்கி( ஷவர்)
மண்வாசனை களிம்பு பூசி
குளித்தெழுகிறாளோ வெண்மதியாள்..

- கவிதை பூக்கள் பாலா
Like

என்னவளே !

இலைகளின் நடுவே பூத்திடும் மலரை போல்
உந்தன் இருப்பிடம் எளிதில்
விழிகள் கண்டிடும் மாயமென்ன ?
உந்தன் புன்னகைதானே !
என்னவளே !

மழை...

இடைவிடாது அழுகிறாய் ,
இடையிடையே ஏங்கி விசும்புகிறாய்,
உன் கண்ணீரில் நாங்கள் மிதகின்றோம்,
தவறிழைத்தது நாங்கள் அல்லவோ !...

மேகமூட்டம்..

கறுப்பு திரையிட்டே நடிக்குது வானம்,
அழுகை(சோக) காட்சியாம்...

நிர்வாணமாய் அலைகிறது

நிர்வாணமாய் அலைகிறது எங்கள் வாழ்க்கை
நிவாரணங்களை தேடி...
- ஏழைகளின் மனக்குமுறல்

ஓடி ஒளிந்தான் சூரியன்

புன்னகைத்த நிலவுபெண்,
சூரியனின் காம பார்வையில்
நிலைக்குலைந்து அழுது வடிக்கிறாள் ,
ஆறுதல் சொல்ல யாருமில்லாமல்,
பயத்தில் ஓடி ஒளிந்தான் சூரியன்..

என்னன்பே !...

இதயத்தில் கீறிவிட்ட உன்சொல்லம்பு,
இரத்தத்தில் மிதக்குது நினைவலைகள்,
படக்கோட்டியாய் எனை மீட்டுடுவாயா
என்னன்பே !...

மழை...

மழையை வரவேற்று
மக்களுக்கு சேர்த்து வைக்காமல்
உப்புகரிக்க கடலில் சேர்த்திடும்
அரசின்(மக்களும்தான்) செயலற்ற நிலைக்கு
தூ தூ என்று காரி
துப்பிக்கொண்டிருக்கிறதோ மழை...

காதல் மலரும் மட்டும்...

கொட்டும் மழை கொடைஎன்பதா?
இல்லை கொடுமை என்பதா ?
வருணா நீ இன்னும் அழுவது சரியா ?
அவள் இல்லை வரமாட்டாள் அழாதே
எங்களையும் அழவைக்காதே !
அமைதிக்கொள் அடுத்த காதல்
மலரும் மட்டும்...

மக்களை நம்பாமல் இயற்கை...

இயற்கை,
தனக்குண்டான ஆபத்தை
தானாக சரிசெய்துக்கொண்டிருகின்றது,
மக்கள் செய்த
இயற்கை வன்கொடுமைகளை
அசுத்தங்கங்களை அகற்றி,
தன் இருப்பிடங்களை தேடி,
கொள்ளைக்கொண்டவர்களுக்கு அறிவுப்புகட்டி,
தன்னை அழியாமல் பார்த்துக்கொள்கிறது
மக்களை நம்பாமல் இயற்கை...


- கவிதை பூக்கள் பாலா

இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா...

சொல்லாத துயரங்களில் சென்னை அழுவுதடா,
சூடான சென்னை என்ற பெயரும் மாறுதடா,
குடித் தண்ணீருக்கே அன்று குழாயடி சண்டையடா,
தண்ணீர் பிடிப்பதற்கே இன்று பாத்திரம் இல்லையடா,
நீரில் மிதந்தாலும் குடிக்க நல்ல தண்ணியில்லையடா,
குடிமக்கள் குதுகலிக்க சரக்கு தட்டுபாடில்லையடா
சூழும் தண்ணீரிலும் சுருட்டும் ஜென்மங்களடா,
சுற்றிக்கொஞ்சம் பாரடா நம்மக்கள் பாவமடா,
முடிந்த உதவிகள் செயலில் இறங்கி செய்திடுடா,
இடைஞ்சல் செய்யாமல், இயற்கையை வையாமல்,
இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா....


- கவிதை பூக்கள் பாலா
Like

தோழமைகளே !


மீண்டும் உங்களுடன் இணைகிறேன்....
மழையின் பிடியில் சென்னை...
எனக்காய், எங்களுக்காய் ...
வாடிய , வேண்டிய அன்பு நெஞ்சங்களே !
நெகிழ்ந்தே போனோம் உங்கள் அன்பிலே...
மனிதம் இறந்ததாய் நானே பலமுறை எழுத்தி இருக்கிறேன்
ஆனால் அது நம் மண்ணின் மகிமை ...
உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லி
தனிமை பட விரும்பவில்லை..
சந்தோசம் உங்கள் அன்பிலே விரைவில் 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மீண்டுவிடும்...

- உங்கள் கவிதை பூக்கள் பாலா
தொடுவானமும் பயப்படுகிறது
தன்னை தொட்டுவிடுமோ !
இந்த மழை வெள்ளம் என்றே....


Thursday, December 24, 2015

கூறுபோடும் ஈனபிறவிகளே

மின்மினி பூச்சிகளாய்
வெள்ள அறிக்கைகள் வெற்றுகூப்பாடுகள்,
ஊசலாடும் உயிரையும் உதாசினபடுத்திய
உயர்அதிகார மமதை வர்க்கங்களே...
மின்னாத ஏழ்மையின் வாழ்க்கை இன்றும்,
மெழுகுவர்த்தி துணையோடு
மெழுகாய் கரைகின்றதே...
கரம்கொடுக்கும் கரங்களுக்கு
கறைப்படுத்தி நீ முகம் காட்டுகிறாய்,
போலியான உன்வேஷம்
மழை வெளுத்துகாட்டியதே....
நீலிக்கண்ணீரும் காட்சிகளும்,
பொய்ஆடையின்றி நிர்வாணமாய்
அரங்கேற்றியதும் மழைவெள்ளமே...
குதறிப்போட்ட எங்கள் வாழ்க்கையை
கூறுபோடும் ஈனபிறவிகளே,
ஈமசடங்கிலும் ஈக்களாய்
மொய்க்கின்றாயே இனிப்பைதேடி...
விடியுமோ வாழ்க்கை என்றே
ஏக்கத்திலேயே ஏமாற்றமாய் ,
எரிமலையாய் எரிகிறதே
வயிறும், நினைவுகளும்....
- கவிதை பூக்கள் பாலா
LikeComment

மாற்றத்தில் கரம்கொடுத்து காவியம் படைப்போம்:வீருநடைபோடு விடியலை நோக்கி,
விடிந்திடும் என்றே நம்பிக்கைக் கொள்ளு,
நாட்டின் நிலையறிந்து வீதியில் இறங்கு,
உன்நலம் காக்கவே கருத்தினில் கொள்ளு,
கொள்ளையே கொள்கையாய் அடிமைகளின் நிலையில்
கொடுமைகளை கண்டே களத்தினில் நில்லு,
ஒற்றுமை இங்கே முழுமையாய் கூடு,
கொட்டமடிக்கும் கூடாரங்களை ஒழித்திட எண்ணு
மாற்றதின் நிலைகளை கூவியே சொல்லு,
நடிப்பில் திளைத்து நாட்டை பிளக்கும்
நயவஞ்சக அரசியலை நடுவீதியில் கொல்லு,
நாட்டின் நலமே நமதென மனம்பொங்கு,
மாற்றத்தில் கரம்கொடுத்து காவியம் படைப்போம்...
வென்று தமிழகம் காத்திட்டேன் என்ன சொல்லு,
நெஞ்சை நிமிர்த்து போராட்டம் தொடங்கு...

- கவிதை பூக்கள் பாலா
இதமான மனநிலை இல்லாதபோதும்,
இருப்பதாய் நினைக்கும் மனமிருந்தால்,
வாழ்க்கை சுமூகமாய் கடந்துவிடும்...
சில்லென்றகாற்றும்,
சிலித்திடும் தேகமும்,
சினமழிக்கும் வேலையாய்,
சிந்தையில் குடிக்கொள்ளட்டும்....

குழந்தையின் அன்பு...

உடைத்திட நினைக்கும் உறவையும்
உயிரோட்டமாய் வைக்கும் சக்தியே

குழந்தையின் அன்பு...

ஞானம் பிறக்குது:கனமான இதயம் கவிதை படிக்குது,
காரணம் அறியாது பரித்தவிக்குது,
காணாமல் எதையோ எதிர்பாக்குது,
விலகிடும் அன்பு உருகுலைக்குது,
அளவெடுத்த வார்த்தையில் அறுத்தெறிக்குது,
ஆடிய மனமிங்கு அழுது வடியுது,
மதியாத அன்பு இப்போ மதிப்பாகுது,
இழந்தபின்பே ஞானம் பிறக்குது....

- கவிதை பூக்கள் பாலா

அன்மென்றே உணர்ந்ததால்...

மலர்ந்ததும் பூக்களாகிறாள்,
பூத்ததும் மனம்(வாசம்) வீசுகின்றாள்,
வாசம் அன்மென்றே உணர்ந்ததால்...

நீண்ட இரவொன்று..

நிலவு காணாமல் ஏங்கும் மனதுடன்
நீண்ட இரவொன்று..
நினைவில் நீண்ட கனவொன்று
விடியும் வரை தொடர்கிறது..
விட்டுவிட்டு அவள் நினைவு
தூவானமாய் விடுவதாய் இல்லை..
விழிகளில் வினவிய காதல்கணைகள்
கபரிதம் செய்கிறது சுயநினைவுகளை..
சுட்டும் சுடாத வெப்ப சலனம்
வியவையாய் தேகத்தில் சிலிர்கிறது..
உயிருடன் உறவாடும் நேரங்களில்
வார்த்தைகள் மௌனமாகின்றது ..
உணர்வின் உந்துதல் காதல்
நம்பிக்கையின் நரம்பியல் செயல்பாடு..
கனவொன்றும் பொய்க்கவில்லை
விடியலுக்கு முன்அவள் கைபேசியில் முத்தங்கள்
அவள் நினைவுகளோடு உறங்கிபோனேன்....

- கவிதை பூக்கள் பாலா

ஒரு தோழியின் வரிகள்

ஒவ்வொரு இதயத்துடிப்பும்
உன் பிரிவின் வலியை
உணர்த்திக்கொண்டே இருக்கும்,
என் நெஞ்சத்தில் நம் காதல் வாழும் வரை..

''நம்பிக்கை பொய்த்ததால்''

நமக்கான தேடலில்
நடுவீதியில் இன்று...
''நம்பிக்கை பொய்த்ததால்''

காதலில் நாணுகிறது தன்னை மறந்தே !

நாம்மென்று சொல்வதில் நளினம் இருக்கிறது,
நம்மில் நம்பிக்கை பிறக்கிறது,
நெஞ்சோடு முகம் புதைத்து,
கரங்களால் தேச் சிறையிட்டே
காதலில் நாணுகிறது தன்னை மறந்தே.....
- கவிதை பூக்கள் பாலா

Thursday, January 29, 2015

இன்று உலகை ஆளுது...


நோயும் நொடியும் இல்லமா
வாழனுன்னு ஆசைதான்..
கொசுக்களும், கெமிக்கலும்
கெட்ட சுற்றுசூழலும் பிணிய(நோய்)
வாவான்னு கூப்பிடுது...

உடலுல பாதுகாப்பற்று
எதிர்க்க இல்லாது தவிக்குது..
அழையா விருந்தாளியா
ஆளைக்கொல்லுது
முடங்கிபோகத்தான் வைக்குது....
மருத்துவம் வளருது..
அதைவிட நோய்கள் பலமா ஆகுது,
பணமும் விரையம் ஆகுது,
மனிதனை வென்று
இன்று உலகை ஆளுது...
- கவிதை பூக்கள் பாலா

''மாதம் மும்மாரி பொழிகிறதா''


ண்ணில் விதையிட்டு
காத்திருக்கும் விவசாயி...
நீத்துளி வேண்டி வர்ணனுக்காய்
ஆகாயம் நோக்கும் விவசாயி..
காலம் அறியா கண்ணைதிறக்கும்
இயற்கையின் அழிவு( மாற்றங்கள்),
அழிக்கும் வேதிநச்சுகளுக்கு
முளைக்கும் குதிரைகொம்புகள்..
அரசுகள் மாமனர்களாய்,
''மாதம் மும்மாரி பொழிகிறதா''
வெட்கங்கெட்ட வினவல்கள்...தைக்கும் அந்நியனிடம்
அன்டிபிழைக்க வைக்குதடா,
ஆகாயம் தொலைந்து, பூமியும்
அண்டை மாநிலமும் கதவடைக்கிறதடா,
காய்ந்த வைற்றோடு
காக்காணி நிலத்தையும், காடுமேட்டையும்,
கட்டாந்தரையாக்கி கோடுபோட்டு
கலர்கலரா விற்பனை என்றார்களடா....
வி


மான்னியத்த வெட்டுவாங்க,
அப்புறம் எங்களையும் கொட்டுவாங்க.
மீத்தேன்னு முடிச்சி வச்சிடுவாங்க...
சேத்துக்கு அலைவீங்க,
கழுவ காகிதமும் பழகுவீங்க,
அதுக்கு காட்டையும் அழிப்பீங்க,
உங்கள வனவிலங்கும் அழிக்கும்,,
மனித சண்டை போய். மீண்டும்
மிருக சண்டை ஆரம்பம்...
அப்போ காட்டுல, இப்ப நாட்டுல...


வருத்தத்தோட எச்சரிக்கும் :
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 27, 2015

என்னுள் தஞ்சமிடு :--


ன்னியரின் கலங்கரையோ
காளையரின் இழுவிசையோ....
கயல்விழியால் ஆள்பவளோ ..
ஆகாயத்தில் தவழ்பவளோ...
கருவியால் என்னை வென்றவளோ..

டல் அன்னையின் முத்துமகளோ..
காற்றிலும் இளந்தென்றலானவலோ...
கவிதைகளின் கருப்பொருளோ..
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சியோ..
கற்பனைகளின் முகவரியோ...
கற்சிலைகளின் நிச உருவமோ..
காவியங்களின் கதாநாயகியோ....

வள் என்னவளோ, பேரழகியோ..
விழியம்பில் காதல் கனைதொடுத்தவளோ..
விடையறியா வினவுகின்றேன்..
விரைவில் என்னுள் தஞ்சமிடு
தலைசுமந்து காத்திடுவேன்,
உனதன்பில் திளைத்திடுவேன்....

- கவிதை பூக்கள் பாலா

Wednesday, January 14, 2015

தன்மானம் உயிரென திமிர்பிடித்த ஒரு தமிழன் :-தரணி போற்றும் தமிழனே
தலைநிமிந்து நில்லடா.....
எதிப்போனை துச்சமாய்
மனதில் கொள்ளடா !


வாழ வைப்பவன் தமிழனடா
தன்மானம் உள்ளவன் நாமடா!
வீரம் செறிந்தவன் தமிழனடா!
வீண்பழி சுமப்பவனும் தமிழனடா

சுற்றி வளைத்தாலும் ,
வஞ்சகம் செய்தலும்,
சுரண்டி தின்றாலும் ,
மீண்டு எழுபவன் நாமடா...

சுயஅறிவு உள்ளவன் தமிழனடா
அதனாலேயே ,
ஒற்றுமை அழிவதும் வீனடா,
நடிப்பில் ஏமாறுவது ஏனடா,
குடியில் உன்னை அழிப்பது
சரியோ சிந்திப்பாயாடா....

அரசியல் அறம்கொன்று
வாழ்பவனை அரியணையில்
விடுவது முறையோ முழிப்பாயடா...
சுற்றி வளைத்து நின்றாலும்
வாள்சுற்றும் தீரனடா..
பொருளுக்காய் புகழ்பாடு
பரதேசிகளை சுற்றி பாரடா..
மயக்கம் இன்று ஏனடா
மறதமிழன் என்றும் நாமடா....


சூதுசெய்பவன் தலைவீழும்
காலம் கனியுதடா- இன்னும்
கலக்கம் நெஞ்சில் வீனடா
வாழ்வோம் நாம் தமிழரென்றே
காப்போம் என்றும் ஒற்றுமை
எழுவோம் வீறுக்கொண்டு
விடியல் நம் விரல் நுனியில்....

தன்மானம் உயிரென திமிர்பிடித்த ஒரு தமிழன்
- கவிதை பூக்கள் பாலா

''பொங்கலோ பொங்கல் ''

''பொங்கலோ பொங்கல் ''
வாழ்த்துக்களோடு உங்கள்
  கவிதை பூக்கள் பாலா
-------------------------------------------

பழையன கழிதலும், புதிய புகுதலும்
போகிப்பண்டிகையாய் அன்று. ....
கொண்டாட்டத்திற்கு எரித்தலும்,
ஓசோனில் ஓட்டையுமாச்சி இன்று...

கொண்டாட்டம் வேண்டும்
வடிவம் மாற்றலாமே !
வீதியை ஊரை நாட்டை
தூயமையாக்கலாமே இன்று
சேர்ந்து கொண்டாட்டம்
போடலாமே நன்று....

தமிழனில் திருநாள்
உழைப்பவன் பெருநாள்
விவசாயின் பொன்னாள்
விளைச்சலின் திருநாள்
கதிரவன் மகிழும்நாள்
வணங்கி போற்றும்நாள்

பொங்கலோ பொங்கல் என்றே
மனதிலும் சந்தோசம் பொங்கும் நாள்..
தமிழனின் கொண்டாட்டங்களில்
என்றும் முதன்மையான
பொங்கல் திருநாள்......

பொங்கலோ பொங்கல் என்று
ஆனந்தம் பொங்கட்டும்
தமிழன் தலை நிமிரட்டும்
விடியல் பிறக்கட்டும்
புதுப்பானை படையலும் போல
புதுமைகள் சிறக்கட்டும்,
குடும்பங்கள் தழைக்கட்டும்
சந்தோசம் பெருகட்டும்..........

வாழ்த்துக்களோடு உங்கள்
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 13, 2015

புதுமை பெண்

சுயம் கொண்ட மனதிற்கு காயங்கள் தான் பரிசா !
சூம்பி போன இதயங்களே விடை தாருங்கள் !
தவறாமை என்றிருக்க நிமிர்ந்துதான் நானிருப்பேன் !
சீண்டி பார்த்தால் சிலிர்ந்து தான் நானேழுவேன் !
விலக நினைத்து விட்டால் ஒதுங்கிச் சென்றிடுவேன் !
திறமை கொண்டிருக்கேன்  கூனி குறுகமாட்டேன் !
ஆதிக்க ஆணவம் செய்தால் இம்மியும் அசையமாட்டேன் !
தலைகனம் என்கென்ரெண்ணினால் கவலையுறமாட்டேன் !
என்னிலை  நானறிவேன் எந்தேவை  நான்புரிவேன் !
கடமை நன்கறிவேன் கண்ணியம் நான்மறவேன்  !
மனச்சாட்சி என் கட்டுப்பாடு என்றே நானறிவேன் !
உண்மை பாசமென்றால் உயியோடு உருகிப்போவேன் !
நட்பின் பொருளறிந்தால் கைக்கேர்க்க தயங்கமாட்டேன் !
முடியும்மட்டும் உறுதியாய் உதவிகரம் கொடுப்பேன் !
உதாசீனம் படுத்தினால் உதறிதான்  சென்றிடுவேன் !
 நேர்கொண்ட பார்வை , நிமிந்த நன்னடை 
தீரம் வீரம் தன்னம்பிக்கை சுயபுத்தி சுற்றம் சுழலும் 
பாரதியின் 
புதுமை பெண்களடா !

 இன்று  ஓங்கி எழுந்தோம்மடா  !

 - கவிதை பூக்கள் பாலா

Sunday, January 11, 2015

தெரியா வலிகள்:-இதயம் ஏன் தவிக்கிறது,
மனமும் ஏனோ கனக்கிறது
புரியா உடலும் சோர்கின்றது,
பொருளற்று மூளை இயங்குகிறது
வலிக்கொண்டு நெற்றி சூடாகிறது,
கண்களில் ஏக்கம் தெரிகிறது,
உதடுகள் வேலையற்று மௌனமாகிறது,
செவிகளின் வேலை வீணாகிறது.
கரங்கள் குரங்காய் மாறுகிறது,
கால்கள் செயலற்று போகிறது,
தெரியா வலிகளால்
மனம் தாக்குறும் போது........- கவிதை பூக்கள் பாலா

மனிதத்தை தேடுகிறேன்...

விந்தைகள் நிறைந்த உலகில்
விரைந்து தான் நிகழ்வுகள் அரங்கேற்றம்...
இமைக்கும் இடைவெளியில்
இல்லாமல் போகும் மனித உரியினம்....
கண்விழிக்கும் விடியல் முனே
கண்ணாடி சில்லுகளாய் கனவுச்சிதைவுகள் ..
நடக்க பழகும் முன்னே குழந்தை மனம்
மாற்றுதிரனாளியாய் மாற்றப்படும் கொடுமைகள்..
தவறென்று அறிந்தபின்னும் , தன்மானம்
அடகு வைக்கும் கோழைகளின் கூடாரங்கள்...
பொருள்மட்டும் இருந்துவிட்டால்
பொய்யுரைத்து பெருமைபேசும் அடிமைகள்...
அராஜகம் அகங்காரம் நிறைந்துவிட்டால்,
ஆட்சி அதிகாரம் கிடைத்துவிடும் அநீதிகள்..
பிஞ்சிகளை பிழையான கண்ணூடே..
காமுகன்கள் நடமாடிடும் நரகங்களாய் கூடங்கள்..
ஜாதி மதம் தீண்டாமை பலமுகமூடிகள்
தலைமையேற்கும் தரங்கெட்ட தீவிரவாதங்கள்..
கொடுமைகளாய் மாறிப்போன மயான
பூமிப்பந்தின் மீதினிலே மனிதத்தை தேடுகிறேன்.....- கவிதை பூக்கள் பாலா

வார்த்தைகளும் இனிக்குதடி

இதயக்கூட்டில் ஓருணர்வு,
உருளாத உருண்டையாய்
சிக்கித்தான் தவிக்குதடி....
ஏன் என்ற கேள்விக்கணை
எட்டி எட்டி உதைக்குதடி...


உளறாமல் சொல்லெடுக்க
முடியுமா என்னவளே !
உன் வார்த்தை செவிமடுக்க
இடைவிடாது செவி தவித்ததடி....காகிதங்கள் கதைத்த காலம்
கடந்தேதான் போனதடி..
கண்ஜாடை காட்டுவதையும்
கண்ணெதிரே காட்டிடும் யுகமடி...


ன்நினைவை திரையிட்டு
நிமிடங்கள் கடந்ததடி...
காட்சியெல்லாம் நிழலாக
நிசம் காண துடிக்குதடி...


லியற்ற கனவுகளும்
உன்குரல் கேட்கத் தூண்டுதடி
ஓயாத உன்நடையும் இப்போ
ஓய்வெடுக்க வைத்ததடி..


புரிந்து தான் தெளிகிறது
புலம்பிய இதயம் இப்போ...
வந்துவிட்டேன் உன்னிடத்தில்
இதழ் சொட்டிய தேனாக
வார்த்தைகளும் இனிக்குதடி

- கவிதை பூக்கள் பாலா

Saturday, January 3, 2015

இயற்கை :-


பிறவி தாய்க் கொடுத்ததடா !,
வாழ வைப்பது நாங்களடா !,
இதை புரிந்துக்கொள் மானிடா !,
இல்லை சிதைந்து நீபோவாயடா !


- கவிதை பூக்கள் பாலா

என்னுள் துளிர்க்க வா :-விழிகளின் ஓரம் ஈரம்,
உன் நினைவுகள் தரும் பாரம்,
கனவுகளைத் தொடும் மாற்றம்,
தரும் வலிகளில் இதய போராட்டம்.....நினைவுகள் கெக்கிலிட்டவித்துக்களாய்
பிழிந்து விழிகளில் கசியுதடி....
மழைத்துளி மண்தொட்ட மாற்றமாய்
மனம் கலங்கித்தான் போகுதடி......

ன் ஒளித்தந்த நிலைக்கண்ணாடி
பிம்ப நிழலுமற்றுப்போனதடி....
உன் உருவான தலையணையும்
எனை தவிக்கத்தான் வைக்குதடி...

ன்னுள் அன்பின் நீரூற்றாய்
இதயம் நிறைக்க வா...
வீழ்ந்திட்ட உணர்வு விதையை
விருச்சமாக என்னுள் துளிர்க்க வா....
- கவிதை பூக்கள் பாலா