என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, January 31, 2011

நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........



















டற்கரை
ஓரம் எங்க வீடு ,
கடலுக்குள்ளே எங்க வாழ்வு ,
கட்டுமரம் எங்க வாழ்வோடு ,
நித்தம் கடலில துடுப்போடு ,
கடலுக்குள்ளே எங்க சோறு ,
கரைச் சேர்த்ததான்
வாழும் சான் வயிறு ,

டலில தெரியல எல்லை கோடு
காற்று அடிப்பதில் தெரியுதா? அண்டைநாடு,
உயிருக்கு பயந்தே படகுல பயணம் ,
சிங்களவன் காளானா வருவத நினைத்து ,
மனிதத்த தின்னும் சிங்கள பேய்கள் ,
நித்தம் பசிக்கு தின்ன தமிழன் உயிரா !

ரையில உயிர்கள் சொந்தத்த எதிர்ப்பார்க்குது ,
கொடுமையின் அழுக்குரல்கள் கரையேறி சாகுது ,
நடுக்கடலில மிதக்கும் எங்களின் தீரம் ,இப்ப
கரைதட்டி போனதே சிங்கள நாய்களின் வெறியலே!
வழிப்பறி செய்யுது சிங்கள கடற்படை கடலிலே !
பிழைக்க வழியேது தெரியாம துடிக்குது மீனவ குடும்பமே !
விஷத்த கக்கி ஈழத் தமிழன கொன்ன சிங்கள் பாம்பு ,
நாக்க நீட்டி தமிழக மீனவன கொன்னு நோட்டம் போடுது .

மிழினம் காப்போம் தாளுல மின்னுது ,
தரம்கெட்ட தமிழக அரசியல் சவக்குழிய தேடுது ,
வோட்டுக்கு மட்டுமே தமிழக மீனவன், அவன்
சடலத்தைக் காட்டி வோட்டு வேட்டையும் நடக்குது ! ,
உறவுகளை இழந்த உணர்வற்ற தமிழகம்,
இன்னமும் முழிக்கல டாஸ்மார்க் மயக்கத்துல,
உணர்வுகள் தள்ளாடுது மானாட மயிலாட ,
இலவசங்கள் பல்லிளிக்குது பிணத்துக்கு வாய்கரிசி போட.

த்தியில சீட்டு இல்லைன்னா தன் சீட்டுதான் தங்கள ,
நடவண்டிய தள்ளிகிட்டு டெல்லியில பிசைஎடுக்க பறக்குது ,
தமிழன் பிணவாடை அடிச்சாலும் , மூர்ச்சையாகி நின்னாலும்,
விதவிதமா அறிக்கை விட்டே தினம் ஆளத்தான் கொல்லுது .
தமிழா! நீ முழிக்கலன்னா மண்ணோடு மண்ணாயிடுவ ,
நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........
- கண்டன குரலோடு கவிதை பூக்கள் பாலா

கண்ணீர் பெருகும் மீனவன் பாடல் :


.... கண்டிப்பாக வீடியோவை ஒருமுறையாவது பார்க்கவும்...
...

4 comments:

  1. எதிர்ப்புத்தீ பரவட்டும்...

    ReplyDelete
  2. தமிழினம் காப்போம் தாளிலே மின்னுது
    அனைத்து அரசியல் அவலங்களையும்
    அந்த ஒரு சொற்றொடரே அழகாய் சொல்லுது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Philosophy Prabhakaran @
    பரவட்டும் எதிர்ப்புத்தீ , நெரிக்கட்டும் சிங்களவன் (கொலை)இனவெறி

    ReplyDelete
  4. Ramani sir,@
    உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சார்

    ReplyDelete