என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, March 20, 2013

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!
வெடித்துச் சிதறும் ஒவ்வொரு கங்கிலும்...
ஓராயிரம் தீச்சுவாளைகள் உருவாகும்...!!

தகப்பனுக்கு முன்பு நிர்வாணமாக பெண்பிள்ளைகளும்...
பெற்ற பிள்ளைகளுக்கு முன்பு நிர்வாணமாக தாய்களையும்...
நடந்து வந்து சரணடையச் சொன்ன இலங்கை நட்பு நாடா?

ஏய் காங்கிரஸ்-ஸே ஒன்றைப்புரிந்து கொள்... உலகை உலுக்கிய ஹிட்லரையும் இந்த காலம் கெட்டவன் என்று தான் கிரகித்து வைத்து இருக்கின்றது.

மானுட வரலாற்றிலே மண்ணிக்க இயலாத தவறிழைக்க ராசபக்சேவுக்கு உதவிய நீங்கள் வீழும் காலம் விரைவில் வரும்....!

நெஞ்சை உறைய வைக்கும் இது போன்ற படங்களைப்பார்தபின்னும் தி.மு.க வின் தலைமைக்கு எதுவும் வரவேண்டாம்... கோகுல் போன்ற இளைஞர்களுக்குமா எதுவும் வரவில்லை...

அய்யகோ... பேருந்துப்பயணத்தின் போது பாதிக்கப்படுவர்களுக்காககூட நெஞ்சு கனத்து கண்ணீர் வடிக்கும் தமிழா... நம் ரத்த சொந்தங்களுக்கு ஈழத்தில் நடத்ததைப் பார்த்த பின்புமா அமைதி. காக்கின்றாய்?

காங்கிரஸ்ஸையும் அதன் கூட்டணிகளையும் தமிழகத்தில் வேரருப்போம்...!

Tuesday, March 5, 2013

உன் விழிகள்


என் விழிகளின் நாட்டியதையும் ,
உதட்டசைவையும் , இதய துடிபையும் கூட ,
வார்த்தைகளாய்  வடிக்கும் உன் விழிகள்
என்ன கவிஞ்சனா  !.........

கவிதை பூக்கள் பாலா

என் உதடுகள்

உன் இதழ்கள் வடிக்கும் ,
வியர்வை துளிகளை
துடைக்கும் கர்சிப் தானோ !
என் உதடுகள் !!!.........

கவிதை பூக்கள் பாலா 

Monday, March 4, 2013

வெடித்திடுமோ இதயம் !


என்றும் நானிருப்பேன் உன்னுடனே !
என்னுரும்,வாழ்வும்  நீதானே !
 என்றவள், இன்று   !
அவன் தான் என் காதலன் ,
என்னை தாங்க பிறந்தவனும், 
என்னுரிரும், சந்தோசமும்  அவன்தானே !
என்றேதான் என்னிடம் வினவுகிறவளே !
என்னை கொன்றுவிட்டு போ,
என் அன்பை , உணர்வை கொன்றுவிடதே !
இது கொடுமையன்றோ என்னவளே !
இதற்கு வெட்டி கூரிட்டிருகலாம் என் இதயத்தை !
நீ செய்யா விட்டாலும் உன் வார்த்தைகள்
அதை முடிதிடுகின்றது தினம் தினம் ,
 இரும்பால் அரண்  அமைத்தாலும்
வெடித்து  சிதரிடுமோ என் இதயம்  ..........

 -கவிதை பூக்கள் பாலா 
இதழோடு தஞ்சமானேனடி

என் விழிகள் பேசிடும் வார்த்தைகளுக்கு
உன் சிறுபுன்னகை சொல்லிடும் பதிலுரையில்
என் உதடுகள் செய்யும் சேட்டைகளினால் 
உன் கன்னத்தில் பாயும் ரத்த நாணல்களால்
மயங்கி உன் இதழோடு  தஞ்சமானேனடி ........

- கவிதை பூக்கள் பாலா