என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, August 15, 2011

என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்

நண்பன் ஈரோடு சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :

நட்புக்கு இன்று பிறந்த நாள் ,
துளிர் விட்ட நாள் முதலாய்,
பல கொண்டாட்டங்கள் கண்டிருந்தாலும்,
என் தோழமைக்கு இன்று பிறந்த நாள் , என்
தேசமே கொண்டாடும் விடுதலை நாளுமல்லவோ !
மறக்க கூடியதோ இந்த நாளும் ,
என் தோழமையின் குரல் கேட்ட
நாளும் அல்லவோ இன்று எனக்கு,
சினிகிட்ட அலைபேசி,
சிலகித்ததோ மனம் முழுக்க ,
துள்ளி குதித்து ,ஆவி அனைத்து,
வாழ்த்து சொல்ல விழைந்து - முடியாமல் போனாலும்
அனைத்தையும் நினைத்தே வாழ்த்து கூற நினைத்து
என் எண்ணங்கள் வார்த்தை இன்றி திக்கு முக்கட
ஒற்றை வரி வார்த்தையை அந்நிய மொழியில் சொல்லி விட்ட
வருத்தத்தோடு இம்மடலையும் வடிக்கின்றேன்.
என் தோழமைக்கு ........

நல் எண்ணம் உனக்குண்டு
உன் நட்பிற்கும் பொருளுண்டு ,
சிந்தனைகள் சிறகடிக்கும்
கலை ரசிக்கும் சிறப்புண்டு,
பொறுமைக்கும் எல்லை இல்லை
நகைசுவைக்கும் வறுமை இல்லை
வாழ்வினில் என்றும் உனக்கு குறைவில்லை
உனை வாழ்த்துவதிலும் என்றும்
என் மனம் சுனங்க போவதுமில்லை
என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்........
வாழ்த்துகளோடு ..........
கவிதை பூக்கள் பாலா..

6 comments:

 1. பாலா சார்........என் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவாக தெரிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்......................நன்றி....அதேசமயம் இதை பதிவாக போட்டதால் உங்களூடய பதிவுகள் நேற்று இடம் பெறாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது....

  ReplyDelete
 2. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தோழா

  ReplyDelete
 3. நண்பா ! நான் முன்பே ! அறிந்திருந்தால் இன்னும் அழகிய கவிதை வந்திருக்கும் முன்னதாகவும் வந்திருக்கும் , வேலை அதிகரித்து விட்டதால்
  ஆன்லைன் வருவதும் குறைந்து விட்டது . இருந்தாலும் தெரிந்த பிறகும் அமைதியாக இருப்பது சரி அல்ல என்று என் மனம் எண்ணும், அவசரத்தில் எழுத பட்டதால் பிழைகளும் அதிகம் இருக்கும் மன்னிக்கணும் , இத நீ சகிச்சிகலன்னா வேற யாரு சகிச்சிக்க போறா என்ற தைரியம் தான் . இதுவும் பதிவு நட்புக்காக . சமீபமாக எழுதாமல் இருந்த என்னை எழுத வைத்ததற்கு நன்றி நண்பா !

  ReplyDelete
 4. தங்கராஜ் @
  தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் தோழா

  உங்கள் வருத்தம் புரிகின்றது நண்பா , நான் வருத்த படவில்லை காரணம் நட்பிக்கு கால நேரம் முக்கியம் அல்ல சொல்லும் வாழ்த்து தான் முக்கியம் . இருந்தாலும் தவறுதான் மன்னிக்கவும்

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி..... குறிப்பாக பால சாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்

  ReplyDelete