என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, February 14, 2012

காதல் இனிமையானது
உலக காதலர்கள் அனைவருக்கும் காதலர்
தின வாழ்த்துக்கள்...காதல்
......
உலகம் முழக்க ஒற்றை சொல்
ஒலிக்கும் விதங்கள் வேறாகலாம்,
ஆனால் உணர்வுகள் ஒன்றன்றோ .

விழிகளின் வழியோ !
செவிகளின் வழியோ !
எழுத்தின் வழியோ !
நினைவுகள் வழியோ !
கேட்காமல் வருவது
காதல் ....

றவு என்றோ !
நட்பென்ரோ !
உணர்வென்றோ
உயிர் என்றோ !
வழிதேடி
உள்புகும் காதல் .....

பிடிப்பதை மட்டும் யோசிக்கும்
கண்டதை எல்லாம் யாசிக்கும்
சுயம் மறந்து வாழ்விக்கும்
வாழ்வின் நாட்களை கொன்ழழிக்கும்
உள்ளம் ஏதும் புரியா பூரிக்கும்
வாழ்வின் உச்சம் தொட்டதாக
எண்ணி கொண்டாடும்
வலிகள் இல்ல காதல் இருக்கும் வரை ......

காதல் இனிமையானது .....

- கவிதை பூக்கள் பாலாSunday, February 12, 2012

என்றும் வாழ்வில் நிச்சயம் .........

வந்ததும் போவதும் நம்மிடம் இல்லை ,
வாழும் இடமும் நமக்கு நிரந்தரமில்லை ,
உறவுகள் எல்லாம் காலத்தின் பகுதிகள் ,
அதில் உண்மையும் பொய்மையும் 
யாதென்று அறிய முடிவதும்மில்லை ,
நம்பிக்கை மட்டுமே  வாழ்வின்  உச்சம் ,
அப்படி அனைத்திலும் இருந்தால் 
சந்தோசம் என்றும் வாழ்வில் நிச்சயம் ..........

- கவிதை பூக்கள் பாலா

Wednesday, February 8, 2012

நீ வந்ததால் ........உனை கண்ட நாள் முதலாய் 
கனவுகள் வருவதில்லை,
நிஜத்தில்  என் முன்னே 
நீ வந்ததால் ...........

- கவிதை  பூக்கள்  பாலா 

Sunday, February 5, 2012

உலகின் அதிஷ்டசாலி


ஆழ் மனதின் உணர்வுகளை  
வெளிகாட்டா  முகமிருந்தால் 
நீதான் உலகின் அதிஷ்டசாலி,
உலகின் உயர்த்த மனிதனாவாய்  
விரோதிகூட விரும்பி வருவான்    ,
நட்பும் நம்மை நாடி வரும் ,
காதல் கடைக்கண் காட்டும் ,
உறவுகள் உளமார பாராட்டும் ,
வாய்ப்புகள் உன்னை வலம்வரும் ,
சுக்கிரவன் உனக்கு சொந்தமாவன் ,
குபேரன் வட்டி இல்ல கடன்கொடுப்பான் ,
மனைவி கணவனை தலை சுமப்பாள்,
பெற்றோர் பெருமை பாராட்டுவர் ,
சமூகம்  நல்லவனாய் சித்தரிக்கும் ,
நல்லவன் இவன் என்றேதான்  
நட்திசையும் பறைசாற்றும் .
ஆனால்,
நீ உன் சுயத்தை  இழப்பாய் , 
விலையில நிம்மதி விட்டு விலகும் ,
மனசாட்சி தினம் கொல்லும்,
மரணித்த நடைப் பினமாவாய் ..............

உலகம் இதைதானே விரும்புகிறது ?
 - கவிதை பூக்கள் பாலா