என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, February 15, 2011

தொடர்வண்டியில் துடித்த இதயம் - துடிப்பு - 2

தொடர்வண்டியில் துடித்த இதயம் - துடிப்பு -1


கண்களாலே
கவிபடித்த என் இதயம் ,
புரியாத இன்பத்தில் ஆனந்த கூத்தாடியது .
தழதழக்க நினைத்த நாவிற்கு ,
தடையுத்தரவு போட்டது உள்மனது .
குயிலே குரலெடுத்து கூவமாட்டாயா ?
ஏங்கி தவித்தான் என் சேவியேன் .

செவ்விதழ்கள் நடனமாடி செந்தேனை
வார்த்தையாய் வடித்தாள் செந்தாமரை..
உணர்வுகொண்ட என்செவியோன்
சிந்தாமல் கையேந்தி,
தன்னகத்தே பதுக்கிக்கொண்டான் .
" பூங்கா நகரம் எத்தனை நிறுத்தம் அடுத்து வரும் "
இதுவே தேவதை இதழ்கள் வடித்த தேனின் சுவை .
பதிலுரைத்தேன் பாதி நினைவில்
அடுத்த நிறுத்தம் " என்று .....
பதிலுக்கு மின்னலாக வெட்டிச்சென்ற
தேவதையின் புன்னகை,
மின்னலின் மின்சாரமாய் .....
"இடையில் கோட்டை நிறுத்தம் வரும்மல்லவா ? "
வஞ்சி கொடியாள்,
வார்த்தையால் தர்க்கம் செய்தாள் ...
பெண்ணே உன் இடையழகால் கோட்டை என்ன ?
கொடிகளும் உன் பாதம் தழுவும் ,
என் நினைவலைகள் ..
கற்பனையில் தடம் புரண்டது ....
கொடியிடையாள்,
நெற்றியில் கடலலைகளை உருவாக்கி ,
என் பதிலுக்கு காத்திருப்பது புரிந்தது ...
"ஆம் " என்றே நாணத்தில்
தலையசைத்துப் புன்னகைத்தேன் .

பாலைவனத்தில் பயணிக்கும்,
இரண்டு ஒட்டகத்தின் நிலைதானோ ......
இடைஞ்சல் இல்லா இந்த அறை.
என் வார்த்தை பூக்களைத் தொடுத்து,
வஞ்சியின் கழுத்தில் மாலை சூட நினைத்தாலும் ,
அழகின் அழகு மயக்கத்தில் வார்த்தைகள் தடுமாற ...
உள்ளம் உள்ளுக்குள்ளே போரிட்டது.......
என்ன என்று வினவியே,
வில்வித்தை செய்தாள் தன் விழியால் ...
- இதயம் தொடர்ந்து துடிக்கும் .....
- கவிதை பூக்கள் பாலா ...

Sunday, February 13, 2011

காதலர் தின நல் வாழ்த்துக்கள்

காதல் உலகில் என்றும் காதலித்து கொண்டே இருக்கும் உயிரினங்கள் வாழும் மட்டும் ....................

Thursday, February 10, 2011

தொடர்வண்டியில் துடித்த இதயம் ......
கண்ணிற்கு கடைசி முனை காட்டும்
நெரிசலற்ற தொடர்வண்டி நிறுத்தம்.
தொடரந்து சென்ற என் பார்வை சில்லிட்டு சிலிர்த்தது.
துள்ளிச் செல்லும் புள்ளிமானா ,
சுடிதார் சுமந்த சுவர் சித்திரமா !,,
திகைத்து நின்றது எனது கண்கள்.
பறந்து செல்லும் தொடர்வண்டியில்
பயணிக்க நினைக்கையில்
பாவை அவள் இடைமறித்தால் தன் அழகுக்கொண்டு .
ஆட்டம் கண்ட சுயநினைவு,
சுற்றித்திரிந்தது நிழலாக அவள் நினைவாக....

ஒயிலாக நடைபோட்டு
ஒட்டியாணம் அணியா இடையசைத்து
ஒய்யாரமாய் வண்டிக்குள் வந்தமர்ந்தாள்.
வண்டியின் அறைக்குள்,
அவள் பார்வைகள் பரிமாறும் இடம் தேடி அமர்ந்து,
என் உடல்களும் உதவின நண்பனாய்.

சிறுவயது நண்பர்களோடு தொடர்வண்டி ஓட்டிய
நினைவுகள் வந்து செல்ல,
தொடர்வண்டி தன் பயணத்தை தொண்டையை கணித்துக் கொண்டே தொடங்கியது ....
சித்திரத்தின் சிறப்பு கருதி,
இறுதி வடிவம் தீட்டும் ஓவியனாய்,
ஆடைகளை சரிசெய்தால் சிற்றிடையாள்.
சீறிப்பாய்ந்த காற்றும், அவள் தேகம் பட்டு தென்றலாய் கவி படித்தது ஏனோ !. ஐவிரல்கள் துணைக்கொண்டு,
மென்மையாய் வருடி தூங்க வைத்தாள் முடியிழைகளை.
----- தொடரும் ..
- கவிதை பூக்கள் பாலா ...
குறிப்பு : கவிதை தனமா எழுத முயச்சிக்கின்றேன் .........குற்றம் குறையைசுட்டவும் , ஓகே என்றால் கொஞ்சமா கொட்டவும் வாங்கிக்கிறேன்.......

Tuesday, February 8, 2011

என் காதலில் வாழ்வதும் நீயே!

காதலியே என் விழி உனை கண்டபின்னே!
காணும் காட்சி எல்லாம் நீயே !
கனவிலும் கண்ணடிப்பவள் நீயே !
விழி தேடும் தேடல் எல்லாம் நீயே !
பேசும் போது பேச்சின் ஊடே நீயே !
படிக்கும் புத்தகமெல்லாம் நீயே !
எழுதும் எழுத்தெல்லாம் நீயே !
இன்ப துன்பமெல்லாம் நீயே !
வாழும் வாழ்வெல்லாம் நீயே !
உயர்ந்தால் உயர்வில் நீயே !
வீழ்ந்தால் என் மரணத்திலும் நீயே !
என் காதலில் வாழ்வதும் நீயே !
- கவிதை பூக்கள் பாலா
..

Thursday, February 3, 2011

உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !


நட்புக்கு
பொருள் விளங்க நாம் இருவர் ,
என்றேதான் சொல்லி வந்த உறவுக் கூட்டம்,
எதற்கு இந்த நட்பு இப்போ,
விட்டு தொலையேன் உறவுகள் சாடல் .

வாழ்க்கை சக்கரத்தை திருப்பி சுற்றி
கண்ணயர்ந்த வேளையிலே
நம் நட்பு பாதை திரைப் படமாய்,
நினைவுத் திரையில் ,
நொறுக்கு தீனி , விளையாட்டு மட்டுமே
பெரிதாய் தெரிந்த பள்ளிப் பருவம்.
நான் வரவில்லை என்றால் ரிக்சாவில்
கூட அமர மறுத்த நல்ல தோழனாய் ,
என் காச்சலுக்காக நொறுக்கு தீனியை
மறந்து உபவாசம் இருந்த உற்றதோழனாய் ,
நம் நட்பை கண்டு உள்ளம் பூரித்த,
நம் உறவு கூட்டம் .

வீட்டில் அடம் பிடித்து ,
சேர்ந்தெழுதிய நுழைவு தேர்வு ,
என் மதிப்பெண்ணுக்கும் நீ ஒருவனாய்
செலுத்திய கடவுள் நேர்த்திகடன்.
உறவுகளின் சிறு சந்தேக கண்ணோடே
கடந்து சென்ற நம் கல்லூரி வாழ்க்கை ...

இன்ப துன்பம் சேர்ந்தே இருந்த
நம் நட்பின் ஊடே ,
சிறு சலனமும் கண்டதில்லை
இதுநாள் வரையில் ...
நம் நட்பின் எல்லை நாமறிவோம்
வாலிப கண்ணியம் காத்தே .....
நல் வாழ்க்கை துணையோடு, நாம்
பயணிக்கின்றோம் இல்வாழ்க்கை பயணம் ,

கண்ணில் சுடுநீர் கசிய
நீ சொல்லிய வார்த்தை(வாழ்க்கை) யதார்த்தம் ...
"உன்னவனுக்கு உன்மீது நம்பிக்கை அதிகம்,
அதனால் என்மீது வருத்தம் .
என்னவளுக்கு என்மீது காதல் அதிகம் ,
அதனால் உன் மீது வருத்தம் (கோவம்) .
நம் நட்பிக்கு நம்மீது நம்பிக்கை அதிகம்
அதனால் நம் நட்பை குறைத்து கொள்ளலாம் .
உன்வாழ்க்கை நலமாய் இருக்கும் ."
என்னை உருக்குலைத்த வார்த்தைகள் தோழா !

இப்போதும் நம் நட்பே வென்றதடா என் தோழா !
என்வாழ்க்கை நலமாய் இருக்கும் என்றாயே !
நட்பு ,
நட்பை வாழவைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கும்.......
மேலும் உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !

- கவிதை பூக்கள் பாலா
...

Wednesday, February 2, 2011

கொலை பொருள் அறியவே அவா..

முச்சந்தியில நிக்கவச்சி ,
கழுத்துக்கு கலர் கலரா மலையெல்லாம் போட்ட மனிதா !
கவுரவமுன்னு பதிலுக்கு தலையாட்டி நின்னபோது ,
என் தலை மட்டும் தரையில தனியா !
ஒன்று மட்டுமே புரியவில்லை ,
என் முச்சந்தி கொலை எதற்கு ?
என் தவறால் யார் கற்பும் பறிபோனதோ !,
இல்லை கொலை குற்றம் செய்தேனோ !,
கொள்ளை கொள்ளையாய் அடித்தேனோ !
தீர்ப்பு எழுதாமலே கொடும் தண்டனையா ?
சாவிற்கு பயப்படேன் மனிதா !
கொலையின் பொருள் அறியவே அவா !!
சாமிக்கு பலியிட்ட ஆட்டின் ஆன்மா !
-- கவிதை பூக்கள் பாலா .

குறிப்பு : இதே மாதிரிதான் சில மனிதனின் ஆன்மாவிற்கும் சந்தேகம் கொலைபொருள் விளங்காமலே இன்றைய நிலையில் மாண்டு போகின்றது தீவிரவாதம் என்ற பெயராலே .....
...