என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, December 31, 2012

என்று மாயும் இந்த உள்ளம் குமுறல்

நொடிக்கு நொடி எத்தனை மாற்றங்கள் !
அதில் தான் எத்தனை  விதமான மனவலிகள் !
கண்கள் வடிக்கும் கண்ணீரோ ! வற்றா
கங்கை யமுனை  தோற்க்குமடி !,
இமைகள் மூடா  இரவுகள் எல்லாம்
என்னை கைக்கொட்டி ஏளனம் செய்கிறதடி !
இதயம் வெடிக்கும்  வலிகள் இன்று
சிம்மாசனமிட்டு  தினம் என்னை கொல்கிறதடி !
எத்தனையோ ஏற்றங்கள்  வந்து சென்றாலும் ,
அனைத்திலும் முதன்மையாய் மனகாயங்கள்
என்முன்னே எத்தலமிடுகின்றதடி  ..............
என்று மாயும் இந்த உள்ளம் குமுறல்,
என்றேதான் மீண்டும் இதயம் வலிக்கின்றதடி....  
 - கவிதை பூக்கள் பாலா


Saturday, September 29, 2012

மயானமாய் மாறிடாதே !

என்னை ஏன் ? கொல்கிறாய் ,
இடை மறைத்து செல்கிறாய் ,
நினைவிழக்க செய்கிறாய் ,
நினைவினில் நித்தம் வாழ்கிறாய் ,
நிமிடங்களையும்  யுகமாகினாய்,
இன்ப துன்பமெல்லாம் நீயாகினாய்,
வசந்தம் நீதானென  மாற்றினாய்,
வானம் தொட வழியாகினாய் ,
மறந்தும் மயானமாய் மாறிடாதே !
உன் மடியினில் படுத்துறங்கிபோவேன்  !
- கவிதை பூக்கள் பாலா


 

Friday, July 13, 2012

உணர்வுகள்  சொல்லும் வார்த்தைகளை எல்லாம் ,
உரக்க வெளியில் சொல்ல முடிவதில்லை ,
உள்ளத்தின் வலிகளுக்கு உருவங்கள் இல்லை ,
அதனால் , வலிகளின் வலிமை தெரிவதில்லை .

- கவிதை பூக்கள் பாலா ....... 

Wednesday, March 21, 2012

நீ என் காதலி
 விழிகள் தேடிய காதல்
உணர்வில் வீழ்ந்ததடி உன்னில்,
உறவுகளின் மொத்தமாய் நீயடி ,
இன்று அதனினில் எனக்கு  நீ யாரடி !
தெரிந்தால் சொல்லிடு விரைவினில் ,
இல்லை, என் மனம் பிதற்றும்
 நீ என் காதலி என்று ............

- கவிதை பூக்கள் பாலா
 

Tuesday, February 14, 2012

காதல் இனிமையானது
உலக காதலர்கள் அனைவருக்கும் காதலர்
தின வாழ்த்துக்கள்...காதல்
......
உலகம் முழக்க ஒற்றை சொல்
ஒலிக்கும் விதங்கள் வேறாகலாம்,
ஆனால் உணர்வுகள் ஒன்றன்றோ .

விழிகளின் வழியோ !
செவிகளின் வழியோ !
எழுத்தின் வழியோ !
நினைவுகள் வழியோ !
கேட்காமல் வருவது
காதல் ....

றவு என்றோ !
நட்பென்ரோ !
உணர்வென்றோ
உயிர் என்றோ !
வழிதேடி
உள்புகும் காதல் .....

பிடிப்பதை மட்டும் யோசிக்கும்
கண்டதை எல்லாம் யாசிக்கும்
சுயம் மறந்து வாழ்விக்கும்
வாழ்வின் நாட்களை கொன்ழழிக்கும்
உள்ளம் ஏதும் புரியா பூரிக்கும்
வாழ்வின் உச்சம் தொட்டதாக
எண்ணி கொண்டாடும்
வலிகள் இல்ல காதல் இருக்கும் வரை ......

காதல் இனிமையானது .....

- கவிதை பூக்கள் பாலாSunday, February 12, 2012

என்றும் வாழ்வில் நிச்சயம் .........

வந்ததும் போவதும் நம்மிடம் இல்லை ,
வாழும் இடமும் நமக்கு நிரந்தரமில்லை ,
உறவுகள் எல்லாம் காலத்தின் பகுதிகள் ,
அதில் உண்மையும் பொய்மையும் 
யாதென்று அறிய முடிவதும்மில்லை ,
நம்பிக்கை மட்டுமே  வாழ்வின்  உச்சம் ,
அப்படி அனைத்திலும் இருந்தால் 
சந்தோசம் என்றும் வாழ்வில் நிச்சயம் ..........

- கவிதை பூக்கள் பாலா

Wednesday, February 8, 2012

நீ வந்ததால் ........உனை கண்ட நாள் முதலாய் 
கனவுகள் வருவதில்லை,
நிஜத்தில்  என் முன்னே 
நீ வந்ததால் ...........

- கவிதை  பூக்கள்  பாலா 

Sunday, February 5, 2012

உலகின் அதிஷ்டசாலி


ஆழ் மனதின் உணர்வுகளை  
வெளிகாட்டா  முகமிருந்தால் 
நீதான் உலகின் அதிஷ்டசாலி,
உலகின் உயர்த்த மனிதனாவாய்  
விரோதிகூட விரும்பி வருவான்    ,
நட்பும் நம்மை நாடி வரும் ,
காதல் கடைக்கண் காட்டும் ,
உறவுகள் உளமார பாராட்டும் ,
வாய்ப்புகள் உன்னை வலம்வரும் ,
சுக்கிரவன் உனக்கு சொந்தமாவன் ,
குபேரன் வட்டி இல்ல கடன்கொடுப்பான் ,
மனைவி கணவனை தலை சுமப்பாள்,
பெற்றோர் பெருமை பாராட்டுவர் ,
சமூகம்  நல்லவனாய் சித்தரிக்கும் ,
நல்லவன் இவன் என்றேதான்  
நட்திசையும் பறைசாற்றும் .
ஆனால்,
நீ உன் சுயத்தை  இழப்பாய் , 
விலையில நிம்மதி விட்டு விலகும் ,
மனசாட்சி தினம் கொல்லும்,
மரணித்த நடைப் பினமாவாய் ..............

உலகம் இதைதானே விரும்புகிறது ?
 - கவிதை பூக்கள் பாலா 
 

Saturday, January 14, 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...


தமிழனுக்கு தலை நாளாம்
பொங்கல் எனும் திருநாளாம்,
உழுது வாழ்பவனுக்கு
உன்னதமான பெருந்நாளாம்,
கட்டி ஆண்டவனிடம் காளைகள்
சன்மானம் பெறும் நன்நாளாம்,
வெண்திரையில் கவர்ச்சி காட்டி
பெரும் கல்லாக்கட்டும் கலைநாளாம்,
பூமி மகளை பலவிதமாய்
அலங்கரிக்கும் மணநாளாம்,
விதவிதமாய் உடுப்பு போட்டு,
பொங்கிவரும் அழகை கண்டு,
பொங்கலே! பொங்கல்! என்று
வாழ்த்து சொல்லும் தைத்திருநாளாம்....
- இனிய பொங்கல் நல்வாழ்த்துகளோடு
கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 10, 2012

இது காதலின் தோல்வி அல்ல


ண்மை காதலில்
உறைந்திருப்பது அன்பு எனும் பொதுபண்பே !
ஆனால்  காதலில் அன்பு மிகுந்திருப்பது
மிகுந்த  சுயநலத்தோடு  ஒரேஇடமே!

சொந்த பந்தம் தெரிவதில்லை ,
உற்ற நட்பும் உறைப்பதில்லை ,
சுற்றம் முற்றும்  புரிவதில்லை ,
நினைவுகள் அற்று நடைபிணமாய் ,
நாதியற்று அனாதையாய் மாறுவதையும்
மறந்தேதான் தவிக்கின்றது .

வேற்று நினைவுகள் வருவதில்லை ,
ஒற்றை நினைவு  மனதில் குடிபுகுந்து
வீட்டுக்குள்ளே அனாதையாய்
 விலக்கி  வைக்கும் காதலே !

ரு நொடியும் ஒரு யுகமாய் ,
ஒரு பொழுதும் ஒரு ஜென்மாய்
புலம்ப வைக்கும் காதலே !
தெளிவில்லா போதை மயக்கத்திலே
சுற்றித்திரியும் காதலே
சுடு சொல்லையும் சுகமாய் சுமக்கும்
வடுக்களையும் பரிசாய் நினைக்கும் காதலே !

காதல் பொய்த்து போனாலே
கடைசி யாத்திரையையும்  சுகமக்குதே காதலே !
கடமையை மறக்குது காதலே
கவிதை படிக்குது காதலே
மனதில் துக்கம் சுமக்கும் காதலே !
இருந்தும் வாழ்த்தும் உண்மை காதலே!
உருகுலைத்தே போகவைக்கும் காதலே
ஆனால் நலமாய் வாழ்வும் ,
வாழ்த்தும் உண்மை காதலே !

து காதலின்  தோல்வி அல்ல ,
இருவர்  உறவின்  தோல்வி .
தெரிந்தும் யாரும் விடுவதுமில்லை
காதல் யாரையும் விட்டு வைப்பதுமில்லை.

- கவிதை பூக்கள் பாலா