என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, December 31, 2014

என்னுள் பூத்தாயடி..:-


உருகாப் பனித்துகளின் மீதே
உருகித்தான் விளையாடிமகிழ்வோமடி
பிடிபடா வானவில்லினில் உன்
விழியம்பைத் தொடுத்துவிட்டாயடி
என்னிதயம் மயக்கிக் கொய்யும்
உன் யுத்த அழகினை கண்டேனடி....
அள்ளித்தழுவிய கனத்பொழுதினில்
எந்நிலையில் மாற்றம் உணர்ந்தேனடி,
என்னுயிர் நீயென வினவிய நொடிகள்,
ஒருகோடி மின்னல்கள்
பூக்களாய் என்னுள் பூத்தாயடி .....

- கவிதை பூக்கள் பாலா

மனிதம் காப்பாய்:



சிரத்தை உயர்த்து சிறப்பினைப் அடைவாய்
விழியை சுழற்று விண்ணையும் அறிவாய்,
செவிமடுத்திடு உலக ஞானம் பெறுவாய்,
சுவாசம் உணர்ந்திடு மனிதவாசம் உணர்வாய்,
நாவை அடக்கு நல்வாழ்க்கை வாழ்வாய்,
வார்த்தை சுறுக்கு வளமுடன் திகழ்வாய்,
வாயின் சிலபூட்டு சிறப்பெனத் தெளிவாய்,
நெஞ்சை நிமிர்த்து நெஞ்சுரம் கொள்வாய்,
கரங்களை நீட்டு கருணையைக் காண்பாய்,
இதயத்தை திறந்திடு அன்பினில் நிறைவாய்,
நடைதனை போட்டு கண்டங்கள் இணைப்பாய்,
பாதம் தாய்மண்னை தொட்டால் நிம்மதியடைவாய்,
மனஉறுதியை பெற்றால்தன்னம்பிக்கைப் பெறுவாய்,
இவையனைத்து இருந்தால் மனிதம் காப்பாய்........

- கவிதை பூக்கள் பாலா

உரைப்பாய் காலமே பதிலுரையை:


கேள்விகளை தொடுக்கும் வாழ்க்கை !,
விடைத் தேடியலையும் மனிதர்கள் ,
வேடிக்கை பார்க்கும் உலகம்,
மௌனம் காக்கும் இயலாமை
அடிபட்டுப் போகுமோ சுயமரியாதை,
பதறித் துடிக்கும் உறவுகள்,
பரிதாபம் தேற்றும் தோழமைகள்,
சிந்தனை சிறைப்பட்ட மனநிலையும்,
பரிகாசம் செய்யும் மனசாட்சியும்,
யாதென அறியா சுயஉணர்வும்,
சம்பட்டியால் அடிக்கும் தன்மானம்,
சகதியாய் தெரியும் கவலைகளும்,
அறிவுரை இயம்பும் ஆதங்கங்களும்,
பதிலுரைக்க இயலா மனவோட்டம்,
காரணம் விழையா காலமுழுமையும்,
குளத்தில் கல்லெறிந்த நிலைதானோ,
குருட்டுக்கணக்கு தகர்ந்து போது,
தன்மீதே தண்டனை ஏற்கின்றோம்,
பணத்தின் பற்று பரிகாசிக்கும்போது
தடுமாற்றங்கள் நிகழுவும் கொடுமைகள்,
வாக்குகள் தவறும் மானப்போராட்டம்
மனச்சாட்சி உள்ளான்சகிப்பானோ!
உரைப்பாய் காலமே பதிலுரையை........

- கவிதை பூக்கள் பாலா

2014 திருமகளே... பிரிய விடைகளோடு

வினவாத இரவும் வினவிய ஆண்டு,
வாழ்வின் விளிம்பையும் உணர்த்திய ஆண்டு,
கொல்லவும் பிழைக்கவும் வைத்த ஆண்டு,
ஏமாற்றமும், மாற்றமும் நிறைந்தாண்டு,
வலிகளும் நம்பிக்கையும் தந்த ஆண்டு,
உறவுகளின் தரம்புரிந்த இன்னொராண்டு,
நட்பும் நடிப்பும் விளங்கிய மற்றொராண்டு,
கனவுகள் நிசத்தை நோக்கிய ஆண்டு,
குருட்டு நம்பிக்கை குதறிய ஆண்டு,
நிறைந்த நல்நட்புகள் மலர்ந்த ஆண்டு,
வெறுப்பும் நிறைவும் கலந்த ஆண்டு,
பணம் என்னை பந்தாடிய ஆண்டு,
இருந்தும் நம்பிக்கை தொலையாத ஆண்டு,
என் மரியாதை என்னை காத்த ஆண்டு,
வளமாய் மனம்மாற்றி கரைச்சேர்த்த ஆண்டு,
கனிந்த இதயங்கள் பூத்த ஆண்டும் நீயே
விடைப் பெறுகிறாய் வாழ்த்தினை தந்து.....
நன்றியோடு உனை மறவேன் சென்று வா


2014 திருமகளே... பிரிய விடைகளோடு
கவிதை பூக்கள் பாலா

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களோடு ----------கவிதை பூக்கள் பாலா..----------------

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களோடு
----------கவிதை பூக்கள் பாலா..----------------
நாட்டில் நல்லது நடந்திட,
அரசியல் அழிகளை அகற்றிட
தீவிரவாதத்தை விரைந்துக்கொன்றிட,
அகிம்சை அன்பாய்அரவனைத்திட
வாழ்க்கை அமைதியாய் அமைந்திட,
வெற்றிகள் சந்தோசங்களாயிட ,
கனவு நிசங்களாய் வெற்றிப்பெற்றிட ,
வலிகள் வீழ்ந்து மனவலிமையாகிட,
மகிழ்ச்சி மனதில் என்றும் பூத்துகுலுஙகிடவே
வாழ்க்கை பயணம் தொடரட்டும் என்ற
நம்பிக்கை தாங்கி பிறக்கும் புதுமகளை
அழகாய் வளர்ப்போம், வளமாய் வாழ்வோம்
நல்வாழ்க்கை அனைவருக்கும் அமைய
புத்தாண்டு இனிதாய் அமைத்திட
மகிழ்ச்சியாய் வரவேற்போம்
வருக வருக புதுமகளே!!!
வளமை கூட்டும் நம்மகளே
புத்தாண்டு திருமகளே வருக...
வாழ்த்துக்களோடு........

உங்கள் தோழன்..
--கவிதை பூக்கள் பாலா----

Saturday, December 20, 2014

ஹரிஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :
--------------------------------------------------

கொடுப்பவன் எல்லாம் இறைவனானால்
நீயும் என்னிறைவனாவாய் என்மகனே !
முதலாய்முகம் கண்ட பொழுதினிலே
தாய்மையை என்னுள் உணர்த்தியவனே...


வலிகளை புன்னகையில் வீழ்த்தியவனே !
உன்னுளில் புதுலகம் படைத்தவனே!
என்பிறப்பை உலகில் முழுமையாகியவனே !
புதுறவில் நம்பிக்கை விதைத்தவனே !


குறும்பில் கொண்டாட்டம் கொண்டவனே !
பார்புகழ் பெற்று வாழபோகின்றவனே!
வற்றா அறிவாற்றல் வளர்ப்போனே!
வாழ்வாங்கு என்றும் வாழ்வோனே!


பரந்த மனதோடு, விரிந்த உலகோடு,
செல்வ செழிப்போடு, சுற்றம் சூழலோடு,
அன்பின் பொழிவோடு, ஆனந்த வாழ்வோடு,
உற்சாக நினைவோடு, உள்ளார்ந்த அன்போடு,
எனதுருவான உணர்வோடு,
உள்ளம் பூரிக்கும் வாழ்த்தோடு,
பல்நூறாண்டு கண்டேதான் வாழ்வாயடா..
என்னன்பே, என்னுயியே, என்செல்லாமே!
உச்சிமூர்ந்து முத்தங்கள் அமுழ்தளித்து
வாழ்த்துகிறேன் என்மகனே ! 

ஹரிஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி
அம்மா தேவி ரவியோடு
முகநூலின் தோழமைகள் .....

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, December 2, 2014

தற்கொலை தோல்விகளின் முடிவல்ல

தோழமைகளே!
எனக்காய் வேண்டாம் தற்கொலைகளை எதிர்ப்பதற்காக வேண்டி கொஞ்சம் நேரம் எடுத்து படித்து உங்கள் விவாதங்களை, கருத்துகளை வைக்கலாம்..நான் சிரம் தாழ்த்தி ஏற்பேன்.
ஒரு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்குறேன் தோழமைகளே !
இது ஒரு நண்பருக்கானதும், தோழமைகளும் என் நிலையை அறிந்து கொள்ளவும் இந்த பதிவு தேவைப்பட்டது.
முடிந்த வரை சுருக்கமா முடிச்சிடுறேன். ஒரு நண்பர் பெயர் வெளியிட விரும்பவில்லை, என் உள்டப்பாவில் வந்து நான் காதலில் தோல்வி அடைத்து மனவருத்தத்தில் இருக்கிறேன் எனக்காய் ஒரு கவிதை எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டார் .
நானும் சரி என்று தோல்விக்கான காரணம் கேட்டேன்.. காதலியின் பெற்றோர் சம்மதிக்க வில்லை அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றுரைத்தார். எனக்கு மனம் பதப்பதைதது அந்த நண்பரை நினைத்து இரண்டாண்டுகள் கடந்து மறக்க இயலா இதய வலியை போக்க வேண்டும் என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன் பெறுங்கள் , இரவுக்குள் கவிதை வடிப்பேன் என்றுசொன்னேன். முயன்று முயன்று இன்று வரை இயல வில்லை.......
காரணம் ஒன்றுதான் அவருக்கான முதல் கவிதை எழுதி பதிவிட்டேன் நீங்களும் படித்திருக்கலாம்
'' நான் நீயாகவேண்டும்,
தீயில் வீழ்ந்து எழ்வேன்
உனக்காய் தினமும்...
காச்சிய ஆயுதம் ஏந்தி
கடைந்து வடிப்பேன்
காவியம் ஒன்று காயம் கொள்ளாதே!
தோழமையே சாய்ந்துக்கொள்
உன்ரணங்கள் என் இதயம் படிக்கும்........
- கவிதை பூக்கள் பாலா'' இது தான் அந்த கவிதை...
பிறகு நான் முயன்று பாக்குறேன் வார்தைகள் அக்கினி குளியல் செய்கின்றது, எரிமலையாய் வெடிக்கிறது, வார்த்தைகள் கொடுங்கோல் செய்கிறது.... கூரியா ஆயுதம் ஏந்துகின்றது..... ஆறுதலாய் கவிதை கேட்டார், ஆனால் வந்து விழுவதோ அக்ரோசமாய் கோவத்தின் உச்சம் தொடுகின்றது.
நான் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமில்லாதவன்...
கோவம் ,தன்னபிக்கை, ரோசம் அதிகம், ஆனால் வீந்து கிடப்போரை அணைத்து ஆறுதல் சொல்லவே விழைவேன். காயத்திற்கு மமருந்திடவே எண்ணுவேன் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்னிடம் கேட்டு விட்டால்.
என்ன நடந்ததுன்னு கேக்குறீங்களா?
அந்த நண்பருக்கும் இதை படிப்பவர்களுக்கும் , இனி காதலிக்கும் எண்ணமிருபவர்களுக்கும், காதலித்து கொண்டிருபவர்களுக்கும்.. சொல்லி கொள்வது..........
அந்த சகோதரி தற்கொலை செய்து கொண்டார் என்பது என் கோவதிற்கான காரணம் என்றுணர்ந்தேன். உண்மை முற்றிலும் உண்மை....
தற்கொலை கோழைகளின் கடைசி ஆயுதம்........... அவைகளை என் மனம் ஒருநாளும் மன்னிக்காது, ஏற்காது.
அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்லவேண்டுமென்றால் முதலில் நான் அந்த பெண்ணை வாயார வசவுபாட வேண்டி இருக்கும். உண்மையாய் பாசம் வைத்த காதலன் மனம் அதை ஏற்குமா? .,
தன்னால் உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்ய கூடாது, இதுவே என்னிலைப்பாடு.
நண்பரே! என் மனமறிந்து நான் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டதில்லை இது வரை. அது எப்போதும் அப்படிதான் .. நான் திமிர் பிடித்தவன் என்றும் கூட சிலர் சொல்லுகிறனர் . நான் கவலை கொள்ளேன்.
ஆனால் உன்னிடம் மனம் முவந்து மன்னிப்பு கேக்கிறேன் என்னை மன்னித்து விடு....... எனக்கு கவிதை வடிக்க தெரியவில்லை என்றும் நீ நினைத்திருக்கலாம் இல்லை உன்னை அவமதிக்கிறேன் என்றும் நினைத்திரிருக்கலாம். நான் உன்னை நன்றாங்க அந்த நிமிடமே உணர்ந்து கொண்டேன் .. வலிகளுக்கு மருந்தாக என் கவிதை இருக்கும் என்றால் ஓகே.. உன்னை காய படுத்திடுமோ என்ற தாயகத்திலேயே ....... மனதில் எழுதி எழுதி கிழித்தேரிந்தேன்....
காதல் செய்யுங்கள், கனிவோடு வாழுங்கள், ஒருபோதும் தயக்கத்தோடும், தன்னபிக்கை இல்லாமலும் , எதிர்த்து வெல்லும் திரனற்றும் போகாதீர்கள். பெற்றோர் சம்மதம் கொண்டா காதலித்தீர்கள்?, காதலித்த பிறகு பெற்றோரை சம்மதிக்க வைப்பதை பற்றி யோசிக்ககாமல் ஏன் இருக்குகின்றீர்கள்.
முயன்று சம்மதம் வாங்குங்கள், முதலில் உங்கள் காதலை யாரும் ஏற்க மறுக்கத்தான் செய்வார்கள் தனகொன்று வரும்போது அவரவர் நிலைப்பாடு மாறும். முதலில் உங்கள் காதலைபலப்படுத்துங்கள், உங்கள் இதயங்கள் இரண்டானாலும் உணர்வுகள் ஒன்றாய் இருக்கடும், ஒன்றாய் போராடுங்கள்....முடிவில் வெற்றியும் கிடைக்கும்.
அப்படி ஒரு வேலை முயன்று முடியவில்லை என்றால் உங்கள் கோழைத்தனத்தை நினைத்து வெக்கப்படுங்கள், முடிவெடுங்கள் பிரிந்திடுங்கள்.. வேவ்வேறு திசைகளை நோக்கி உங்கள் கோழைத் தனத்திற்கு நீங்கள் ஏற்கும் தண்டனையாய் நினைத்து வாழத்தொடங்குங்கள்.
இல்லை தனியாய் இருந்து கடைசி வரை போராடுங்கள். உயிருடன் இருந்து சாதித்தது காட்டுங்கள் நீங்கள் கோழைகளாகி.. எதிர்போரை வெற்றி கொள்ளவைக்கின்றீர்கள். வாழ பல வழிகள் உண்டு. வேறு திறமைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் வாழ்த்து காட்டுங்கள். அடுத்தவர்களுக்கு உதவியாய் மாற்றி கொள்ளுங்கள்.
தற்கொலை என்றும் முடிவல்ல அது ஒரு முட்டாள் தனம் ஒரு நிமிடம் வீரனாய் சக துணியும் நீங்கள், ஏன்? வாழ முயலவில்லை.. அந்த சகோதரிக்கு தன்னபிக்கை கொடுக்காமல் போனதில் நண்பருக்கும் மிகபெரியப்பங்குண்டு. உங்கள் மீதான நம்பிக்கையை வளர்க்க தவறிவிட்டீர்கள். உங்கள் காதலுக்கு தடையை இருந்ததை காலிட்டு மிதியுங்கள். உங்கள் வாழ்வை உயர்த்தி காட்டுங்கள், எதிர்த்தவர்கள் வெட்கித் தலைக்குனிவார்கள். விடுத்தது வாழ்க்கையை தொலைப்பது எவ்வகையில் நியாயம்.
வருவதும் போவதும் நம்மிடம் இல்லை.
''வந்ததும் போவதும் நம்மிடம் இல்லை ,
வாழும் இடமும் நமக்கு நிரந்தரமில்லை ,
உறவுகள் எல்லாம் காலத்தின் பகுதிகள் ,
அதில் உண்மையும் பொய்மையும்,
யாதென்று அறிய முடிவதும்மில்லை ,
நம்பிக்கை மட்டுமே வாழ்வின் உச்சம் ,
அப்படி அனைத்திலும் இருந்தால்,
சந்தோசம் என்றும் வாழ்வில் நிச்சயம் ..........
- கவிதை பூக்கள் பாலா ''
இதுவும் என் வரிகளே! நான் எப்பொழதும் நம்பிக்கை அளிப்பவனாய் இருப்பேனே ஒழிய, வீழ்த்துபவனாய், வீழ்பவனாய் இருப்பதில்லை.
என் நட்பில் இருக்கும் என் தோழமைகளும் சகோதரிகளும் , உறவுகளும் நம்பிக்கையோடு இருக்கவே விழைகின்றேன், முடிந்த வரை என்னால் மனம் வெறுத்தவரை நம்பிக்கை அளிக்கவே விரும்புகின்றேன்.
நீங்கள் இப்போது சாதித்தது என்ன ?
இரண்டாண்டுகள் ஆனா பின்பும் இப்படி தினம்தினம் செத்து மடிகின்றீர்கள் இதற்கு முயன்று வாழ்திருக்கலமே! ... சிந்தியுங்கள் இனியாவது உங்கள் வாழ்க்கை மாற்றங்களில் ஈடுபடுங்கள்....நண்பர்களே!
ஏன்?அப்படி கவிதை எழுத முடியாதா? நீங்கள் கவிதை எழுத தெரியாதவரா ? என்று வீண் விவாதம் செய்ய துணியும் நண்பர்களுக்கும் ஒன்ரைச் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
நான் உங்கள் மனக்காயத்திற்கு மருந்தாகவும் சந்தோசத்திற்கு சாமரம் வீசுபவனாகவும், வலிகளுக்கு ஆறுதலாகவும் இருக்கவே விரும்புகின்றேன். தற்கொலையை ஆதரித்தே , இல்லை தோல்விகளை முதன்மை படுத்தியோ எழுத மாட்டேன். வலிகளை உணர்த்துவேன், வழிகளையும் உணர்த்துவேன் அது தான் "கவிதை பூக்கள் பாலா" இங்கே என் மலர்கள் பல அவதாரம் எடுத்திருக்கும். தொடர்ந்து படிப்பவர்கள் உணர முடியும்..
நான் உணர்வுகளை மதிப்பவன் என் உணர்வுகள என்னை எழுதத் துண்டுகின்றது. என் சுற்றம் என் பார்வைகள் சுழன்றுகொண்டே இருக்கும் என் மனம் ரசிக்கும் வெறுக்கும், துடிக்கும், கண்டிக்கும் அனைத்தையும் பதிவிடுவேன் இங்கே.
ஆனால் நான் சினிமா, கற்பனை என்றால் அங்கே அந்த கதாபாத்திரம் உணர்வுகளை மட்டுமே உணர்த்த வேண்டும் அங்கே நான் எழுதினால் நிச்சயம் எல்லா விதமான எழுத்துகளும் எழுதுவேன் காரணம் அங்கே ஒரு உணர்வு காட்ட படுகின்றதுஅதில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கும். ஆனால் அதிலும் நான் என் நம்பிகைகளை மட்டுமே விதைப்பேன் மீண்டு வருவதை மட்டுமே திரையிடுவேன். அதில் உறுதியாய் இருக்குறேன்.
நண்பர்களுக்காக இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கேன்.. அவர்களிடம் கருவை அறிந்த பிறகே எழுதுகிறேன். அதனாலேயே இந்த தன்னிலை விளக்கப்பதிவு எனக்கு தேவைப் பட்டது.
தற்கொலை முடிவல்ல.. அது ஒரு கொடுமையின் தொடக்கமே.
வீழ்வது உடல்மட்டுமே.உன் உணர்வுகள் இங்கே பலரிடம் பலவிதமாய் பத்திரத்து போய் இருக்கும் அது உன்னை நாளும் வசப்பாடும், உயிரோடு இருந்தால் இன்று வீழ்தாலும் பின் எழுந்து நீயே அந்த காயங்களுக்கும் மருந்திடலாம்.
தற்கொலைகளை வெறுப்போம் , தலைநிமிர்ந்து வாழ்வோம். வாழ்க்கை நம் கையில்... ( அணைத்து தற்கொலைகளுக்கும் சேர்த்தே இந்த பதிவு)
- கவிதை பூக்கள் பாலா .

Wednesday, November 26, 2014

இனி ஏது பிரிதலிங்கே.....:


காதலிக்கும், காதலனுக்கும் 
வார்த்தை போர் ,
யார் காதல் பெரிதென்று.


உனை அரை நிமிடமும் அகலேன்
உன் நினைவையும்விட்டு விலகேன்
புரியாதவன -காதலி,
உன் சந்தோஷம் பெரிதென விரும்பி
உனை சுற்றும் பக்தன்
நான் காதலன.


வார்த்தைகள் கனல் கொண்டு
காதல் பேர் ஆயுதமின்றி,
பார்த்துக்கொண்டிருந்த
வன ஈக்கள் பரிதாப்பட்டு
நாட்டமை செய்ய
முடிவெடுத்து.பிரதிட்டு
கூட்டியது விசாரணை சபை...


காதல் யாதென்று புரியா
நீங்கள் எப்படி காதலர்
முதற்கேள்வியே
மூச்சு திணறல்,
வாதங்கள் விதவிதமாய்
 அவர்கள் ஒருவர்மேல்
வைத்த காதல் உச்சம்
வைத்து வாதிட்டனர்,
வனம்முழுக்க ஆர்வம்
தொற்றியது நாட்டமை
தீர்ப்பு யாதாகும்
தனிவிவாதம் நடந்தேறியது.


தீர்ப்பு சொல்ல ஈக்கள்
நாட்டாமை(ராஜா) தொண்டை
கனைத்து ரீங்காரம்மிட்டார.


யாது தவறென்று புரியா
காதல் அன்பர்களே!,
உங்கள் காதல் பொய்யல்ல
விதமே பரிதாபம், ஏக்கத்தோடு
இளம் ஜோடிகள்........


காதல் யாதெனறிவாய் முதட்
காதல் எப்படி தனிமைப் பட்டது,
என்காதல்.. என் காதல்..  
சிவந்துமுகத்தோடு
கருணை விழியோடு தொடர்ந்தார்.


அன்பு பரிமாறிய பிறகே
 காதல் என அறிவீர்களா?
ஒன்றான இதயம் ,உணர்வு,
 ஏன் தனிமைப் பட்டது.
நம் காதல் என்ன ஏன்?
 அறியாய் ..........


நிசப்தம் நிலைத்து நின்றது,
தொடர்ந்து தீர்பெழுதிய
வார்த்தை தொடர்ச்சி..
நான் விடுத்தது நம் காதல்
 நாம் என்செய்வோம்
விவாதம் புரிதல் அன்பொழுக
அரவணைத்து நம் காதலாய்
பாருங்கள் உணருங்கள்.


நம் காதல்உயிர்த்தேவை
யாதென சினுகுங்கள்,
காதல் அறையில்
வஞ்சிக்கா சிறைப்பட்டு
வளமோடு வாழ்வீர்
காதல் ஈரிதயம்
ஓர் உணர்வு கொண்டது.
வார்த்தை முடித்து
கம்பீரம் மிடுக்கோடு
காதல் சுவையறிந்த
நல்லோனாய்
தேணீ நாட்டமை......


பலத்த கரவோசை
காதலோடு கவிபடித்து
இணைத்த உள்ளம்
கனிந்த காதல்
இனி ஏது பிரிதலிங்கே........

- கவிதை பூக்கள் பாலா

தொடர்ந்திடுமா வாழ்க்கை இனி......:



இதயம் துடிக்கின்றது,
உடலும் நடிக்கின்றது,
பொய்யுடல் இதுவென்றரியாமலே.


மருத்துவங்கள் ஓதுகின்றது,
தோழமைகள் கருணை
மழைபொழிகின்றது,
உறவுகள் உருகிப்போகிறது
பொய்யுடல் இதுவென்றரியாமல்..


நெடுவானம் நிர்மூலம்,
கதிரவனும் கருகிபோய்,
தென்றல் பேயிரச்சல் புயலாய்,
பூக்களும் கொடுவாளோடு,
கண்ணீர் கடலை மிஞ்சி,
வார்த்தைகள் அர்ஜுனன்
போர்க்கோல காண்டீபமாய்,
என் இதயம் சல்லடையாய்.

கனிவில்ல காதலாம் என்காதல்
உணர்வில்லா போனதாம் உயிர்க்காதல்,
காதல் அகராதியறியாமல் பிதற்றகள்,
முடிவு செய்துவிட்டு முகவரிதேடுதல்
பிரிவின் ஓர் இலக்கனமோ.

பறிக்கொடுத்த இதயத்தை
பிரபஞ்சத்தில் எங்கு தேடுவேன்
கருனையற்று நீ அறுத்தெறிந்த
காதலைக் கொன்று
நடைப்பிணமாய் அலையவிட்டு
ஆனந்தம்கொண்டாயடி.

வாழ்வுமுடியவில்லை நானறிவேன்,
வாழ்கையாதென்று தெரியேன்இனி
பயணம் முடியும் மட்டும் தொடருகின்றேன்.
துணையாய் அவள் நினைவுகள்
வழியாய் அவள் வசவுகள்....
தொடர்ந்திடுமா வாழ்க்கைஇனி......

- கவிதை பூக்கள் பாலா

Sunday, November 23, 2014

வார்த்தை வதம்

குதித்து ஆர்பரிக்கும்
குற்றாலமான மனதில்...
கல்லெறிந்த குலமாய்
மாறிய நிமிடம்..
உன் வார்த்தை வதம்
செய்த கொண்டிறிருகிறது.....

- கவிதை பூக்கள் பாலா

Saturday, November 22, 2014

நாளும் தினமும் :


விடிந்து விட்டதா
விழிகளின் சோகம்,

னித்துளி சுமக்க
இமைகளின் ஏக்கம்,


தயசூரியனை காண
பெற்றேரின் விருப்பம்,


டை பயின்று
உடலைக் குறைக்க
உடலின் ஆர்வம்,


டுத்து உருல
சோம்பலின் கபடம்,


ணியோசை எல்லாம்
இப்ப எதிரிகளின்
சங்கே முழங்கு........


கொஞ்ச நேரம்
சிணுகளின் ரகசியம் ...


புலம்பல்கள் எல்லாம்
ஒப்பாரிகளின் இசையாய்...


ப்படியே தொடங்குது


நாளும் தினமும்.....

- கவிதை பூக்கள் பாலா

பதறியழும் மனிதபிறவிகள்:



விவரமறிய உலகினுள் விரும்பியா
அன்னையின் கருவிலே அவதரித்தோம்,
சுமைகளிலலா குழந்தைப்பருவம்,
கூடி ஆடியப்பள்ளிப்பருவம்
குழைந்து நெளிந்த விடலைப்பருவம்,
காதல் பிடிக்கும் கபடப்(வாலிப)பருவம்,
ழுததை கொடுக்கும் கல்யாணப்பருவம்,
டமையாற்றும் காக்கும்(பெற்றோர்)பருவம்,
ளைத்தொதுங்கும் கடைசிப்பருவம்,
றுக்கமுடியா பருவ மாற்றங்கள்,
தறியழும் மனிதபிறவிகள்....
றந்தபினும் உலகம் தேடும்
அதிசியமான மனிதபிறவி..
ற்றுக்கொள்ளா வாழ்க்கை முறைகள்,
ன்னும் விடையறியா மனிதமுகங்கள் !!!!


-
கவிதை பூக்கள் பாலா

Friday, November 14, 2014

கடுகானாலும் வானம் கடந்து நிற்கும்

பிடித்தவரை இடறி நின்று
சாதித்து சிகரம் தொட்டாலும்
மனம் ஏனோ முழுமையடைவதில்லை ....
வெற்றி இனிப்பதில்லை
வெற்றிடமாய் காணும்
திசை எல்லாம் ...
சிறிய புன்முறுவல் ,
சின்னதாய் முகமலர்ச்சி
காணத்துடிக்கும் நெடிப்பொழுதும்
மரணத்தையே தோற்கடிக்கும்
வலி குடல் கவ்வும் ,
இதயம் சுடுகாடாய் எரியும்
கைதட்டல்கள்
கடைசி இசையாய்
காது நுகரும்
வாழ்த்துக்கள் ஒப்பாரியாய்
ஓநாயாய் ஓலமிடும்....

இதயம்தொட்டவர்  கரம் பற்றி
 வெற்றிக் கனி
பறிக்கும் நிமிடம்
கடுகானாலும் 
வானம்  கடந்து நிற்கும்
 இன்பம் இமயம் தொடும் ....

- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 13, 2014

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினத்தில அவங்களுக்கு போட்டியா ?
ஏன் ? இப்படி எல்லாம் அவங்கள சந்தோசமா பாத்துகங்க
நாளைக்கு அவங்க கூட நேரம் அதிகமா செலவிடுங்க .
குழந்தைகளோட குழந்தையா மன ரீதியா மாறிடுங்க..
நினைவுகளை  பகிந்துக்  கொள்ளுங்கள்........

Tuesday, November 11, 2014

காதல் உயிரென இன்னும் தொடர்வது ...........

சந்தோஷ நிமிடம் நாம்
பேசிய முதல் வார்த்தை
கடின காலம் கண்டித்து
நீ நடத்திய மெளனயுத்தம்
நிறைவு நேரம் உன்துயர்
துடைத்து நீ என் நெஞ்சில்
புதைந்த அரவணைப்பு
இறுகிய நிமிடம்
துக்கம் தாளாது நீ சிந்திய கனம்
கரம் இருந்தும் துடைக்க துப்பில்லா
நான் துடித்தது
சினம்நிறைத்தது
சிந்தனை இருந்தும் தெரிந்தும்
வீம்பாய் சிறையில் சிக்கியது
பொறுமை புரையோடியது
கண்டும் காணாது
நீ நடத்திய நாடகம்
உண்மை என நம்பியது
வலிகள் நிறைத்தது
உன் நினைவில் நான்
இல்லாமல் போனது
உணர்ச்சி நிறைத்தது
நீ கொண்ட
காதல் உயிரென
இன்னும் தொடர்வது ...........
- கவிதை பூக்கள் பாலா

 

இதழின் ஓரம் சிவந்த தடம் ......

தழின் ஓரம்
சிவந்த தடம்
காரணம் யாதென்று
வினவும் பார்வைகள்

கலங்கப் பார்வை
ஏளனப் பார்வை
ஏக்கப் பார்வை
காமப்பார்வை
கனிவுப்பார்வை
நக்கல் பார்வை
காரணம் ஒன்றேதான்

சினம் தடம் பதித்தது
பற்கள் உதவியது .........

- கவிதை பூக்கள் பாலா

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?....
--------------------------------------------------------
ஆயிரம் உறவுகள் உண்டிங்கே சுற்றி
அதில் அர்த்தம் பொதிந்தவை எத்தனை
என்றெண்ணி வடிக்கும் நோக்கில்
சிந்தனை சிக்கி
சிலந்தி கூட்டினுள் நானானேன்

ஒவ்வொன்றும் தனித்திசைகள்
தனக்கொன்று கோட்பாடுகள்
பார்வைகள் பலாயிரம்
பறக்கும் வலிமைகள் பலவாரு
விரும்பியனைத்தாள் விருப்பமாவோம்
வெட்டி எறிந்தால் விலகி நிற்போம்
உண்மையென்றால் உருகிப்போவோம்
உணர்வுயென்ரால் உயிராயிருப்போம்
உருகுலைத்தால் உதாசினமாக்குவோம்
நடிபென்றால் நாகரீகமாய் நகர்வோம்
நாடிப்பிடித்து, ரத்தசோதனை நடத்தி
இனமொழியளர்ந்து சுயநலம் சீர்தூக்கி
சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........
- கவிதை பூக்கள் பாலா

Monday, November 10, 2014

வலிகள் மட்டும் மாறாமல் தொடர்கின்றது..........

இதயம் ஏனோ கனக்கின்றது
காரணம் புரிந்தும் புரியாமல் இருக்கின்றது
விவரம் அறியா குழந்தை போல்
விரல்சூப்பி வில்லங்கம் புரிகிறது
உணர்வும் அறிவும் சண்டையிடுகின்றது
வலிகள்  மட்டும் மாறாமல் தொடர்கின்றது
- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 6, 2014

வயது அறுபது ஆனால் என்றும் நீ பதினாறு .....

குழந்தையாய்
திரையில் அறிமுகமாகி
சகலத்தையும் கற்றாய்
திரைத்துறையில்
சகலகலாவல்லவனானாய் .........
இமயம் முதல் குமரி வரை
திரைத்துறையில் நீந்தி
மகாநதியாய்  வலம்வந்தாய் ......
மாற்றங்கள் எதுவானாலும்
துணிந்து செயல்பட்டாய்
செவாலியர் சிவாஜியின்
செல்லக்குழந்தையானாய்
வேடங்கள் பல கண்டு
வீறுநடை போட்டு
ரசிகனை தொண்டனாய் மாற்றாமல்
தனிப்பாதை உனதாக்கி
இந்திய திரைவானில்
தன்னிகரில்லா இந்தியன்
திருமகன் நீயானாய்..
வயது அறுபது ஆனால்
என்றும் நீ பதினாறு
பிரபஞ்ச நட்சத்திரமாய் என்றும்
ஒளிர்வாய் நவரச உலகநாயகனே !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- கவிதை பூக்கள் பாலா

Wednesday, November 5, 2014

நிலவுக்குள் நீந்த முயன்றேன் :

நிலவுக்குள் நீந்த முயன்றேன்
பாட்டியின் அனுமதி எங்கே !
கடவுச்சீட்டு பரிசோதனை -
எனக்கு சோதனை.

கட்டணம் யாதென்றால்
இரண்டு வடை வாங்கினால்
இங்கிருந்தே போகலாமாம் ..

வழி தெரியாமல்
நான் முழிக்க
நரியாரின் துணையுந்டென்றனர்

குதுகுலத்தில்
மனம் குத்தாட்டம் போட
இடியாக இயம்பினர்
 நரியாரின் அடிப்பொடிகள்.

கடவுச்சீட்டிற்கு இரண்டு வடை
அவருக்கு நாலுவடையாம் ....
விக்கித்து வினவிய போது
வில்லனாக காக்கை வந்தது.

என்னடா இந்த சுப்பனுக்கு
வந்த வேதணை என்னுபோதே
பவ்வியமாய்
பல்லித்தார் காக்கையார்

காதும் காதும் வையுங்கள்
கால்மீது கால்போட்டு
கண்னுரங்கள் கனநேரத்தில்
கடவுச்  சீட்டு ........
ஆனால் வடை விருந்து
இடவேண்டுமாம் ....

மொத்தம் எத்தனை
வடைகளடா
வாங்குவேநென்றேன்
இதுதான் கடைசி வடை
வாங்கினால் இதேடு
இல்லை விட்டோடு
என்றனர் எக்கலதோடு .

 நிலவுக்கனவை
கழட்டி போடா
கடுகளவும் மனமில்லை .....
- கனவு தொடரும்
- கவிதை பூக்கள் பாலா  


வசந்தத்தின் விலாசம் .....
-------------------------------
வித்தைகள் பல பயின்றேன்
விசாலமான அறிவும் ஆய்தரிந்தேன்  
கனவுகள் கண்டு வந்தேன்
நேர்வழி மட்டுமே நலமென்றேன்
வாழ்க்கை வீதியில்
வசந்தத்தின் விலாசம்
தெரியாமல் தவித்தேன்.....
பணமெனும்
துடுப்பு சீட்டு இல்லாததால் ..........

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, November 4, 2014

இதயம் ....

இதயமும்
விழிகளும்
சண்டையிட்டது. 
நீ கபடம் செய்கிறாய் 
வலிகளை நான் சுமக்குறேன் ...
இதயம்  .....

- கவிதை பூக்கள் பாலா

பிரிவில்........

பிரிவும் ஒரு
தொடரோட்டம் தான் 
வாழ்க்கை ,
கருவறை முதல் பிரிவு
கல்லறை கடைசி துறவு
இடைக்காலம் இதனூடே ....
இதில் புரிதலிலும்
உறவிலும் , உணர்விலும்
நீட்டல், மழித்தல்
கடமை, கட்டாயம்
பலசாதி   பல்லிளிக்கும
பிரிவில்........

-கவிதை பூக்கள் பாலா

ஆகாயம் தடை சொல்லுமோ !

இடுதலில் தொடு நிமிடம்
சிகரம் தொட்ட குதுகுலம்
பசுமையின் நிறம் போல
வெறுமையின் முகமூடி அழகுதான்
பயணிப்பது சாத்தியமா ?
விழிகள் வர்ணிப்பது தடைபடுமோ !
அழகு ஆர்பரித்தால் ...
ஆகாயம் தடை சொல்லுமோ !

- கவிதை பூக்கள் பாலா

செல்லப் பொய்கள் விதிவிலக்கே!!!

இதழோடு தஞ்சமானேன்
இடைவிடாது முத்தமிட்டாள் 
தேன்ச்  சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம்  நீ என்றேன்
சுவையற்றுப்  போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள் 
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும் 
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா

Monday, November 3, 2014

உன்னை காணும் கனவுகளோடு ...

இரவின் தொடக்கம் நீ இருந்தாய்
உணவின் போதும் உடனிருந்தாய்
செல்ல சிணுகல் செய்துவிட்டு
என்னை ஏன்?
நடுஇரவில் தவிக்கவிட்டாய்...
விழிகள் அசதியில்
கதவடைத்த  பின்னாவது 
கனவில் என்னுடன் பின்னிகொள் ...
விடியலை நோக்கி ...
உன்னை காணும் கனவுகளோடு  ...
- கவிதை பூக்கள் பாலா

மீட்டா இரவின் மெல்லிசை

உன் விரல்கள் மீட்டிய நாதாங்களின் ஓசை
மீட்டா இரவின் மெல்லிசை(கனவு) தானோ !!!
- கவிதை பூக்கள் பாலா

காமலோகத்தின் வாசல் திறந்ததடி ........

உனது அங்கங்கள் கீரிய நொடிப்பொழுது
மின்சாரம் பாய்ந்து என் தேக முழுதும் ......
இச்சைகளின் மொத்த தொடுபுள்ளியாய்
காமலோகத்தின்  வாசல் தெரிந்ததடி  ........
- கவிதை பூக்கள் பாலா


Saturday, November 1, 2014

நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்

விடாத  மழையிலும்,
 என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
 வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின்  அன்பில் 
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம் 
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா

Thursday, October 30, 2014

காதல் என்ன யாசித்து பெறுவதா ?

பெண்ணே!
நீ  சிரிப்பது என்னை பார்த்தா ?
இல்லை என் நிலையை பார்த்தா ?
- கவிதை பூக்கள் பாலா

 

பயணிப்பது கடினமே !.......

இதயமே நீ  இல்லாமல் போ ..
இரக்கமே நீ  தொலைந்து போ ..
சினமே நீ சிதைந்து போ
சுயமே என்னுள் சூம்பி போ
நினைவே நீ அற்றுப்போ ...
அன்பே நீ அனாதையாகிப்  போ
பொறுமையே நீ உச்சம் போ..

பண நாயகமான இவ்வுலகில்
இப்படியாய் மாறவில்லை எனில்
இனிபயணிப்பது கடினமே !.......

- கவிதை பூக்கள் பாலா

Wednesday, October 29, 2014

விடை தெரியாமல் வாழ்கிறோம் ...

விதி என்று இருக்கிறோம் ,
விடை தெரியாமல் வாழ்கிறோம் .........
சகதியில் வீழ்ந்த பின்னே
சதி என்று பிதற்றுகிறோம் ........
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, October 28, 2014

ஏனோ வாழவும் துடிக்கின்றது .....

இமைகள் மூட மறுகின்றது
இதயம் துடியா துடிக்கின்றது
எண்ணங்கள் தீயாய் எரிக்கின்றது
உடலில் பலவீன குடிக்கொள்கிறது
வேற்று சிந்தனை அற்றுப்போனது
வேதனை வேள்வி நடத்துக்கின்றது
வெறுமையாய் வாழ்க்கை தெரிகிறது
வேற்றுலகம் போய்விட துடிக்கின்றது
ஏனோ!
வாழ்க்கையை வாழவும்  விழைகின்றது ..
தன்னம்பிக்கையை துணையாய்  கொண்டு .......
- கவிதை பூக்கள் பாலா

Saturday, October 25, 2014

ஆபாசம் என்பதும் , கவாச்சி என்பதும்.........

பாசம் என்பதும் , கவாச்சி என்பதும் வித்தியாசமான பொருள் கொண்டவையே ! . பெண்கள் , ஆண்கள் உடுத்தும் உடைகளை
யார் நிர்ணயம் செய்வது, அது அவர் அவர் மனதையும், குடும்ப
சூழ்நிலைகளும், சமூக சூழலுமே ஆகும்......

டுத்தவர் முகம் சுழிகாத வண்ணம் இருந்தால் நலமே !...
ஆனால், அதை நாம் முடிவு செய்ய முடியாது. அறிவுரை சொன்னதற்கே பொங்கும் உலகில் , என்னவென்பது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான் , அவரை அவமானபடுத்துவது யாரையும் கோபப்பட வைப்பது சகஜமே !... அதை நாகரீகமாக சொல்லி இருந்தால் இன்றைய முகநூலில் நடத்து கொண்டிருக்கும் தனி நபர் தாக்குதல் ஒருவேளை இல்லாமல் போய் இருக்குகலாம் ...........

பெண்கள் உடுத்தும் உடை அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்பது அறிந்தே, இடம் பொருள் அறிந்தும், அதனால்  அவர்களுக்கும், அந்த உடையால் அவர்கள் மீதான மதிப்பீடு என்ன என்பதும்  அவர்கள் புரிதலோடான விருப்பம் சம்பந்தப் பட்டது , அதை கேட்பதும், இல்லை தடுப்பதும், அவர்களுக்கு  உரிமையான உறவுகள் பார்த்துக்கொள்வார்கள்........... அதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது .

இதுவே ! ஆண்களுக்கும் பொருந்தும் ............

பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்ன என்பதும், பெண் சுதந்திரம் எது என்பதும் இன்றைய பெண்களிடமே ஒருமித்த கருத்து இல்லை.....
கருத்து விவாதங்கள் வரவேற்கலாம் ......
தனி மனித சுதந்திரதிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது தவறு , மனித உரிமைமீறல் ஆகும்..... இது ஆணாக இருக்கும் பச்சத்தில் உடை சம்பந்தமான தாக்குதல் வந்திருக்குமா ? ....... விவாததிற்க்குரியதே!......
இன்று தாக்குதலுக்கும், வன்புணர்ச்சி, வன்கொடுமை இப்படி பாதிக்கப்படும் பெண்கள் பெருபான்மையானவர்கள் (ஒரு சில தவிர ) தைரியம் இல்ல முழுதாக மூடி இருக்கும் பள்ளி சிறுமிகளும், மனநலம் பதிக்கப் பட்டவர்கள், எதிர்க்க முடியா பலகீனமானவர்கள் தான் அவர்கள் இலக்ககாகின்றனர்.
ஆபாசத்தை அருவருப்பை எதிர்க்க நினைபவர்கள் முதலில் நம் இல்லங்களுக்குள் புகுந்துவிட்ட டெலி சாப்பிங் என்ற பெயரில் நடக்கும் வியாபார விளம்பரங்களை எதிர்ப்போம் ........ அனைவரும் கைக்கோர்ப்போம்
அடிமைப் பட்டுகிடநத பெண்ணினம் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் சமூக சூழல் கல்வியால் சுய மரியாதையோடு கட்டுகளை உடைத்து சிறிது சிறிதாக விடுபட்டு கொண்டிருக்கும் காலம் ......... மாற்றங்கள் நிகழும்போதெல்லாம்
சில சகிப்பு தன்மைகள் தேவைப்படுகின்றது ......
நம் தாய், சகோதரியும், சக தோழிகள் என்ற பெண்ணினத்தோடே வாழ்க்கை பயணிக்கின்றோம் .......
பெண்களும் ஆண்களை எதிரியாய் எண்ணாமல் நாகரீகமாய் பயணிப்போம்..
- கவிதை பூக்கள் பாலா

Friday, October 24, 2014

மரபுக் கவிதைகளாய் ஒளி பரவட்டும் ....

ன்பின் உறவாள் சுமக்கும் கருவிலும்
இனம் காணா ஒளி பரவட்டும் .......
குழந்தையின் அடையாள பெயரிலும்
அந்நியன் வார்த்தை சூட்டி தமிழை இகழா ஒளி பரவட்டும் .......
அழகையும் ஆடம்பரதையும் உட்கொண்டு சிசுவின்
உயிமையான தாய்ப்பால் மறுக்கா ஒளி பரவட்டும் .......
கல்வியைச் சுமையாக்கி குழந்தையை
பொதிச்சுமக்கும் விலங்காக்கிடா ஒளி பரவட்டும் .......
தாய்மொழி மறத்திட்டு, அந்நியன் மொழித் திணித்து
ஆராதிக்கும் மனப்பாங்கை மாற்றும் ஒளி பரவட்டும் .......
சிந்தனையை முடமாக்கி, புத்தகத்தை பிரதி எடுக்கும்
கல்விமுறை மாற்றத்தை  நோக்கி ஒளி பரவட்டும் .......
பருவத்தின் மாற்றங்கள் உண்டாக்கும் பாலின ஈர்ப்புகளை,
காதலென்று நினைக்கா பாலியல் கல்வி ஒளி பரவட்டும் .......
முதலாளிகளின் கூலிகளாக்கும் கல்விமுறையை
தூக்கியெரியும்  சமூக விழிப்பு ஒளி பரவட்டும் .......
 அன்பின் ஆழமறிந்து, காமம் எல்லையுணர்ந்து
வாழ்க்கை முறையறிந்து வாழும் ஒளி பரவட்டும் .......
குடும்ப உறவுகளுக்குள், சமூக நலன்களுக்குள்
நாட்டின் பற்றின் மேல் ஒளி பரவட்டும் .......
இன மதங்களின்  வன்மங்கள் குறைய
ஒரே கடவுள், அது அன்பே ! என்ற ஒளி பரவட்டும் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாக எண்ணா 
ஒளி பரவட்டும் .......
மனித மாண்புகளை மதிக்கும்
இரக்கம்  இதயத்தில் மலர ஒளி பரவட்டும் .......
தீவிரவாதத்தை திராணி இல்லாமலாக்கும்
அகிம்சை என்னும் ஒளி பரவட்டும் .......
எழுத்துக்களில் துணிவு, கருத்தில் தெளிவு ,
புரிதலோடு விவாதம் செய்யும் ஒளி பரவட்டும் .......
தமிழில் பிழையின்றி, இலக்கண நன்கறிந்து ,
தமிழின் அழகறிந்து, படைப்புகளை எழுதும்
தமிழ்பேரரிஞ்சர்களின் புகழ் ஒளி பரவட்டும் .......
பேச்சு தமிழில்  ஆர்வ கோளாரில் அரைகுறையாய் கிறுக்கும்
என்போன்றோருக்கு  அறிவு வளர ஒளி பரவட்டும் .......
 
 தமிழை முறையாய் இலக்கண மரபு
பயின்று மரபுக் கவிதை எழுதி , சான்றோரின் பரிசீலனைக்கு
பிறகு அச்சு பூக்களை தொடுத்து மாலையாக்கி
தமிழன்னைக்கு மாலைச் சூட புத்தக வடிவிலே வடித்தெடுத்து
 உங்களின் எண்ண விழிகள் வியக்கும் வண்ணம்
வார்த்தை வார்த்தெடுக்கப் பட்டு,
மரபுக் கவிதைகளாய்  ஒளி பரவட்டும் .......என்னும்
தன் இரண்டாம் படைப்பாய்
தோழி. கவிஞர் நளினி முத்து
தமிழன்னைக்கு படைத்திருக்கிறார்.
விரைவில் உங்கள் பார்வைக்கு,
உங்கள் பேராதரவை எதிர்நோக்கி..........
உங்கள் ஆதரவு  வரவேற்பு   ஒலி பரவட்டும் .......

- நட்புடன் கவிதை பூக்கள் பாலா
ஒளி பரவட்டும் புத்தக வெளியீடு விரைவில் என்ற ஒலி பரவட்டும்


அலைகளாய் போனது !

அலைகளை ரசிக்கவே வந்தேன் - ஆனால்
அலைகளாய் போனது என் உள்ளுணர்வு

- கவிதை பூக்கள் பாலா

வெறுமையை தந்ததேன் !

வெளிச்சமாக வந்த உறவு - இன்று
வெறுமையை தந்ததேன் !
உரிமையாய் இருந்த உன் உறவு
உணர்வற்று போனதேனே !

- கவிதை பூக்கள் பாலா

நினைவிலும் மறக்க முடியாமலே !

உணர்வுகள் இன்னும் இருக்குதடி,
இதயமும் நித்தம் துடிக்குதடி - அதில்
உயிராய் போனது  உன் காதலடி,
இன்று கனவாய் போன உன் காதலை
இருக்கும் இடமறியா தேடுதடி,
நினைவிலும் மறக்க முடியாமலே !

- கவிதை பூக்கள் பாலா




களைப்பே இல்லாமல் கொல்லுதடி !

கனமான உன் நினைவுகள் ,
கடக்க இயலா இரவுகள் ,
கடினமான உன் வார்த்தைகள்,
களைப்பே இல்லாமல் கொல்லுதடி !
-
கவிதை பூக்கள் பாலா

Monday, October 13, 2014

நினைவுகள் ! ( கனவுகள் )

 
சாட்சிகள் இல்லா  காட்சிகள் நிறைத்தது நினைவுகள் - அதில்
உண்மையும் பொய்மையும் கலந்திருப்பது கனவுகள்  .......

- கவிதை பூக்கள் பாலா

Sunday, October 12, 2014

புத்தகம் :


 ஞானம் பெற புரட்டப்  பட்ட என் பக்கங்கள் - இன்று
விழிகள் ஓய்விற்கு புரட்டப் படுகின்றதே ! -

- கவிதை பூக்கள் பாலா

Saturday, October 11, 2014

இரவு வணக்கங்கள் :


விழிகளின் ஏக்கம் காதலிக்காக மட்டும் அல்ல .......
தூக்கத்திற்கும் தான் ...........
- கவிதை பூக்கள் பாலா

Saturday, September 27, 2014

புனிதமுமாகிறேன்

உணர்ச்சிகளால் வந்த உணர்வா !
உணர்வுகளால் வந்த உறவா !
கருணையால் வரும் உறவா !
காமத்தில் கலந்த உணர்வா !
அன்பில் உதிர்த்த அரவணைப்பா !
காதல் இதில் எதை சார்ந்தது !
இவை  யாவும் உட்கொண்ட உறவே
காதல் என்பதல்லவா உறவுகளே !
ஆதலாலே
நான் முதன்மை ஆகிறேன் உறவுகளில் .................
உலகில் புனிதமுமாகிறேன்  .............

- கவிதை பூக்கள் பாலா .....

Thursday, August 28, 2014

உன்னை சபிக்கிறேனடா

கல்நெஞ்சனும் கரைதிடுவன் என் நிலை அறிந்தால் !
அப்படிஎன்றால் ,  
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன்  காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ  எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
 - கவிதைபூக்கள் பாலா

கனவுகளை சுமக்கும் கருவி

பெற்றோர்கள் தன்  கனவுகளை சுமக்கும் கருவியாய்  பிள்ளைகளை  பாக்காத வரை , பெற்றோர் குழந்தைகள் பந்த பாசம் (உறவு) கெட்டு போகாது ........
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, August 5, 2014

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாயடுதுன்னு கடவுள் கோவப்பட்டு ஆண்களுக்கு பெண்களை பார்த்து வழியும் ( ஜொள்ளும் ), மோகத்தையும் எண்ணங்களையும்  இன்றுமுதல் அடியோடு அழித்து விடுகிறேன்னு சொல்லிட்டாருன்னு வச்சிகோங்க உலகத்துல என்ன நடக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க ............

Saturday, April 5, 2014

H Umar Farook நடமாடும் டாஸ்மாக் வண்டி வந்தால் தனியாக டாஸ்மாக் இடம் தேவையில்லை ! அதற்க்கு மின்சாரம் தேவை இல்லை ! இதனால் மின் தடை குறையும் !!
ஒவ்வொரு வார்டிற்க்கும் ஒரு நடமாடும் டாஸ்மாக் வண்டி வைத்துகொண்டால் ஒரே ஊழியர் போதும் ! அரசுக்கான செலவு குறையும் !
வீட்டிற்க்கே டாஸ்மார்க் வண்டி வருவதால் வீட்டிலே இருந்தபடி குடிக்கலாம் ! குடித்து விட்டு அவர்கள் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வரத் தேவை இல்லை !
இதனால் Drunken and Drive இனி இருக்காது ! அதனால் விபத்துக்கள் குறையும் !

குடித்து விட்டு நடு ரோட்டிலே விழுந்து கிடக்க வேண்டியது இல்லை !
ஒரே தெருவில் நான்கைந்து முறை டாஸ்மார்க் வண்டி வந்தாலே டாஸ்மாக் போக சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு
நாளைக்கு குடிக்கலாம் என யாரும் இருந்து , (அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி)
விட முடியாது !
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டால்
இனி யாரும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க மாட்டார்கள் !
குடும்பத்தோடு குடிக்க பேம்லி பேக் கொண்டு வரலாம் !
அதனால் இன்னும் வருமானம் உயரும் !
திருவிழா , திருமண மண்டபங்கள் , கட்சி மீட்டிங் குகள் நடக்கும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடமாடும் டாஸ்மாக் வண்டிகளை அனுப்பி வருமானத்தை பெருக்கலாம்!
பள்ளி வளாகங்களில் ஐஸ் விற்பது போல் , சரக்கு விற்று
மாணவர்களுக்கு இப் பழக்கத்தை பள்ளி பருவத்திலே கொண்டு வரலாம் ! இதனால் வருமானம் அதிகரிக்கும் !
H Umar Farook நடமாடும் டாஸ்மாக் வண்டி வந்தால் தனியாக டாஸ்மாக் இடம் தேவையில்லை ! அதற்க்கு மின்சாரம் தேவை இல்லை ! இதனால் மின் தடை குறையும் !!

ஒவ்வொரு வார்டிற்க்கும் ஒரு நடமாடும் டாஸ்மாக் வண்டி வைத்துகொண்டால் ஒரே ஊழியர் போதும் ! அரசுக்கான செலவு குறையும் !

வீட்டிற்க்கே டாஸ்மார்க் வண்டி வருவதால் வீட்டிலே இருந்தபடி குடிக்கலாம் ! குடித்து விட்டு அவர்கள் வண்டி ஒட்டிக்கொண்டு வீட்டுக்கு வரத் தேவை இல்லை !
இதனால் Drunken and Drive இனி இருக்காது ! அதனால் விபத்துக்கள் குறையும் !

குடித்து விட்டு நடு ரோட்டிலே விழுந்து கிடக்க வேண்டியது இல்லை !

ஒரே தெருவில் நான்கைந்து முறை டாஸ்மார்க் வண்டி வந்தாலே டாஸ்மாக் போக சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு
நாளைக்கு குடிக்கலாம் என யாரும் இருந்து , (அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுத்தி)
விட முடியாது !

வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்துவிட்டால்
இனி யாரும் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க மாட்டார்கள் !

குடும்பத்தோடு குடிக்க பேம்லி பேக் கொண்டு வரலாம் !
அதனால் இன்னும் வருமானம் உயரும் !

திருவிழா , திருமண மண்டபங்கள் , கட்சி மீட்டிங் குகள் நடக்கும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடமாடும் டாஸ்மாக் வண்டிகளை அனுப்பி வருமானத்தை பெருக்கலாம்!

பள்ளி வளாகங்களில் ஐஸ் விற்பது போல் , சரக்கு விற்று
மாணவர்களுக்கு இப் பழக்கத்தை பள்ளி பருவத்திலே கொண்டு வரலாம் ! இதனால் வருமானம் அதிகரிக்கும் ! 

 இப்படி ஒரு கமெண்ட்  போட்டிருக்காரு படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் அதுக்குள்ள இருக்குற ஆபத்துக்கள் உங்களுக்கே புரியும் . அவர் என்ன நினச்சி இன்ன கமெண்ட் போட்டாரோ எனக்கு தெரியல ஆனால் இந்த அரசியவாதிகள் இந்த கொண்டுவராம பாத்துகோங்க . ஒரு விருப்பம் எல்லாத்துக்கும் தன் பெயர வைத்து கொள்ளும் திராவிட (ADMK, DMK) அரசியல் வியாதிகளே!! . இந்த மது சரக்குகளுக்கும் உங்க தான தலைவி தலைவர் பெற வச்சி சந்தோஷ படுங்கோ . அத மட்டும் என் செய்யறதில்ல . உங்க இலவசங்கள் எங்களுக்கு வேணா ஐந்து  வருசத்துல சில ஆயிரங்கள குடுத்துட்டு ( அதுவும் நம்ம வரி பணத்துல ) குடுத்துட்டு . ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் குடிக்க வச்சி உறிஞ்சிடுறீங்க . எதுக்கு இந்த கோல வெறி இந்த தமிழக மக்களிடம் . பாவம் எங்கள விட்டுடுங்க குறை  பட்சம் இந்த ஒய்ன் சாப்ப  மூடிடுவோமுனு வாக்குறுதி குடுத்து பாருங்களேன் . இது ஸ்டேட் சம்பந்த பட்டத இருந்தாலும் கண்டிப்பா அதிகமான தமிழக மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அதிக சீட்டு குடுப்பாங்க இந்த வெயில்ல அலைய வேண்டியதில்ல ............. கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் .....................
இப்படி ஒரு கமெண்ட் போட்டிருக்காரு படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் அதுக்குள்ள இருக்குற ஆபத்துக்கள் உங்களுக்கே புரியும் . அவர் என்ன நினச்சி இன்ன கமெண்ட் போட்டாரோ எனக்கு தெரியல ஆனால் இந்த அரசியவாதிகள் இந்த கொண்டுவராம பாத்துகோங்க . ஒரு விருப்பம் எல்லாத்துக்கும் தன் பெயர வைத்து கொள்ளும் திராவிட (ADMK, DMK) அரசியல் வியாதிகளே!! . இந்த மது சரக்குகளுக்கும் உங்க தான தலைவி தலைவர் பெற வச்சி சந்தோஷ படுங்கோ . அத மட்டும் என் செய்யறதில்ல . உங்க இலவசங்கள் எங்களுக்கு வேணா ஐந்து வருசத்துல சில ஆயிரங்கள குடுத்துட்டு ( அதுவும் நம்ம வரி பணத்துல ) குடுத்துட்டு . ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் குடிக்க வச்சி உறிஞ்சிடுறீங்க . எதுக்கு இந்த கோல வெறி இந்த தமிழக மக்களிடம் . பாவம் எங்கள விட்டுடுங்க குறை பட்சம் இந்த ஒய்ன் சாப்ப மூடிடுவோமுனு வாக்குறுதி குடுத்து பாருங்களேன் . இது ஸ்டேட் சம்பந்த பட்டத இருந்தாலும் கண்டிப்பா அதிகமான தமிழக மக்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அதிக சீட்டு குடுப்பாங்க இந்த வெயில்ல அலைய வேண்டியதில்ல ............. கவனிப்பார்களா தமிழக பெரிய கட்சிகள் .....................

Thursday, January 2, 2014

புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ... விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,

Photo: பிறக்கட்டு புது மகள் யுகத்தில்,
பூத்து குலுங்கட்டும் உள்ளங்கள் புன்னகையில் ....
உயர்வை எதிர்க்கும் வல்லோனை
வீழ்த்தட்டும் பிறந்து புது மகள் ......
வீழ்வோனை மிதிக்கும் கல்நெஞ்சங்களை
கனிந்து தான் களையட்டும் புதுமகள்...
நல்வேடம் வேய்க்கும் தீயோனை ,
தீயிட்டு மாயக்கட்டும் புதுமகள் ....
பழிவாங்கும் உள்ளங்களை ,
நல்விதை ஊன்றி திருத்தட்டும் புதுமகள் .......
ஊழலை சுவாசித்து உலகில்
ஏழ்மையை வளர்க்கும் ஏமாற்று அரசியலை
ஆணியடித்து விரட்டட்டும் புதுமகள் ........
நாவில் நல்வார்த்தை சுரந்திட,
நரர்களை நைய புடைக்கட்டும் புதுமகள் .....
கொலை குரூரம் பிடித்தவனை,
குடலுருவி போடட்டும் புதுமகள் .....
நம்பி வந்தோனை நரியாய் ஏயிப்பவரை ,
நடுவீதி நிறுத்தியே நறுக்கட்டும் புது மகள்...
2013 ஆண்டுகளை கொன்றேதான் பிறப்பவள் நீ,
விழி சுற்றி காத்திடுவாய் உலகில் வாழ்வோரை ,
அரக்கர்களை வீழ்த்தி நீ , அரியணையில் வீற்றிடுவாய் .........
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ...
விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
- கவிதை பூக்கள் பாலா ........
பிறக்கட்டு புது மகள் யுகத்தில்,
பூத்து குலுங்கட்டும் உள்ளங்கள் புன்னகையில் ....
உயர்வை எதிர்க்கும் வல்லோனை
வீழ்த்தட்டும் பிறந்து புது மகள் ......
வீழ்வோனை மிதிக்கும் கல்நெஞ்சங்களை
கனிந்து தான் களையட்டும் புதுமகள்...
நல்வேடம் வேய்க்கும் தீயோனை ,
தீயிட்டு மாயக்கட்டும் புதுமகள் ....
பழிவாங்கும் உள்ளங்களை ,
நல்விதை ஊன்றி திருத்தட்டும் புதுமகள் .......
ஊழலை சுவாசித்து உலகில்
ஏழ்மையை வளர்க்கும் ஏமாற்று அரசியலை
ஆணியடித்து விரட்டட்டும் புதுமகள் ........
நாவில் நல்வார்த்தை சுரந்திட,
நரர்களை நைய புடைக்கட்டும் புதுமகள் .....
கொலை குரூரம் பிடித்தவனை,
குடலுருவி போடட்டும் புதுமகள் .....
நம்பி வந்தோனை நரியாய் ஏயிப்பவரை ,
நடுவீதி நிறுத்தியே நறுக்கட்டும் புது மகள்...
2013 ஆண்டுகளை கொன்றேதான் பிறப்பவள் நீ,
விழி சுற்றி காத்திடுவாய் உலகில் வாழ்வோரை ,
அரக்கர்களை வீழ்த்தி நீ , அரியணையில் வீற்றிடுவாய் .........
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ...
விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
- கவிதை பூக்கள் பாலா ........