என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 31, 2010

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..........

Orkut Scrap - New Year: 3Orkut Scrap - New Year: 3

பிறக்கட்டு புது மகள் யுகத்தில்,
பூத்து குலுங்கட்டும் உள்ளங்கள் புன்னகையில் ....
உயர்வை எதிர்க்கும் வல்லோனை
வீழ்த்தட்டும் பிறந்து புது மகள் ......
வீழ்வோனை மிதிக்கும் கல்நெஞ்சங்களை
கனிந்து தான் களையட்டும் புதுமகள்...
நல்வேடம் வேய்க்கும் தீயோனை ,
தீயிட்டு மாயக்கட்டும் புதுமகள் ....
பழிவாங்கும் உள்ளங்களை ,
நல்விதை ஊன்றி திருத்தட்டும் புதுமகள் .......
ஊழலை சுவாசித்து உலகில்
ஏழ்மையை வளர்க்கும் ஏமாற்று அரசியலை
ஆணியடித்து விரட்டட்டும் புதுமகள் ........
நாவில் நல்வார்த்தை சுரந்திட,
நரர்களை நைய புடைக்கட்டும் புதுமகள் .....
கொலை குரூரம் பிடித்தவனை,
குடலுருவி போடட்டும் புதுமகள் .....
நம்பி வந்தோனை நரியாய் ஏயிப்பவரை ,
நடுவீதி நிறுத்தியே நறுக்கட்டும் புது மகள்...
2010 ஆண்டுகளை கொன்றேதான் பிறப்பவள் நீ,
விழி சுற்றி காத்திடுவாய் உலகில் வாழ்வோரை ,
அரக்கர்களை வீழ்த்தி நீ , அரியணையில் வீற்றிடுவாய் .........
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ...
விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
- கவிதை பூக்கள் பாலா
........

Thursday, December 30, 2010

சகுனம்




















சரித்திரத்தில் இடம் பிடிப்போனையும்,
சகதியில் தள்ளி விடும் சகுனம் ...
பகுத்தறிவை பறைசாற்றும் உதட்டசைவில் ,
ஏனோ ! உள்ளம் வேய்ந்திருக்கும் சகுனம் ...
பன்னாட்டில் உச்சி தொடும் சினிமாவில் ,
இன்றளவும் ஆட்டிப்படைப்பது சகுனம்...
வாழ்வில் தன்னம்பிக்கை அற்றவனின்,
நாவழியே நடனமாடுவதும் சகுனம் .......
கேட்டின் எச்சரிக்கை மணியோசையாய் ,
மதியை மயக்குவதும் சகுனம் ....
சாகச அறிவு சுடர்களையும் ,
அறியாமையில் வீழ்த்துவதும் சகுனம் ...
சாந்தமான மணப்பெண்ணையும்
சவக்குழியில் தள்ளிவிடும் சகுனம் .....
சாதிகள் இல்லையென்று சாதித்தாலும் ,
நாங்கள் நல்ல, கெட்ட சாதிகள் என்பதும் சகுனம் ..
மூடநம்பிக்கையின் முகவரியே சகுனம்
என்றரியாதார் வாழ்வில்,
என்றும் முன்னிற்கும் சகுனம் .......
- பாலா

Tuesday, December 28, 2010

ஒரு வரி கவிதைகள் ...... ( கொஞ்சம் தைரியம் தான் )









வரதச்சணை ....

வாழ்க்கையில் பெண் , திருமண (தாம்பத்திய) பயணம் செல்ல ..
பெற்றோர்கள் செலுத்தும் பயண காப்பீட்டு கட்டணம் தானோ !!!...

மின்சாரம்
தொட்டவனை எதிர்கொண்டு தாக்கும் பலசாலி
ஓங்கி அடித்தாலும் உருவம் காட்ட உளவாளி .

கலப்படம்
சுத்த தங்கம் அணிகலன் ஆகாது ..
கற்பனை இல்ல கவிதை மெருகேறாது....

உறவுகள்
உயிரினங்கள் தங்களுக்குள் வரைந்துகொள்ளும்
கட்டுப்பட்டு எல்லைக்கோட்டின் பெயர்கள்

ரோஜா கேட்கிறது ...
காதலை தூக்கி எறியும் பெண்ணே !
என்னை ஏன் கால்கொண்டு மிதித்தாய் ...
நான் தூது வந்த தூதுவன் அல்லவா !!!..

மரியாதை
தலையில் இருக்கும் வரையே முடிக்கு மதிப்பு ..
உயிர் உள்ளவரையே உடலுக்கும் மதிப்பு !!

பாதணிகள்
சுமந்து சுமந்து சுருங்கி போகும் (தேய்ந்து )
சுமை தொழிலாளிகள் ......

பாட்டல் ( தமிழில் தெரியவில்லை, மன்னிக்கவும் )
தனக்குள் அடைத்து வைக்கும் சர்வதிகாரி ....

தண்ணீர்
மனித எந்திரங்கள் இயங்க
இயற்கை அளித்த எரிபொருள் தானோ !.

மின்மினி பூச்சி
வான் வெளியின் எச்சரிக்கை விளக்குகள் ..

எதுக்கும் எச்சரிக்கை இருக்கும் - பாலா

Saturday, December 25, 2010

ஆழிப் பேரலை...........




















ஆழிப் பேரலை
நினைத்தால் நெஞ்சம் பதறுது .....
இமைகள் மூடினால் கண்முன்னே தெறிக்குது
காட்சிகள் எல்லாம் உதறல் எடுக்குது ,
உன்கரையில் கால்நனைக்க
கால்கள் கூட மறுக்குது....
அன்னையாக உன்னை நினைத்து
உன் மடிதனில் உறங்க சென்றது
தவறென்று பின்னால்தான் புரிந்தது
அதற்குள்ளே உன் பசிக்கு, பல ஆயிரம்
உயிர்கள் உன் உடலுக்குள்ளே சென்றது
தாய் என்று உனை நினைத்தோம்,
நீ மட்டும் ஏனோ பேயாகி போனாய் ..
நீ உண்ட எம் உறவுகளின் உறவு
இல்லாமல் இன்று ஒன்பதாண்டு ஆனது
துக்கத்தில் நாங்கள் இங்கே ......
மறந்து தூக்கத்தில் நீயோ ஆழ்ந்து போனாய் ...
அவ்வபோது கால் உதறி, சோம்பலையும் முறிப்பது ..
நன்றோ.. உன்செயல் ............
சபிக்கும்மடி உன்செயலை,
என் தலைமுறைகள் உள்ளவரை ...........
- துக்கத்தின் துடிப்பிலே பாலா

சிதைக்கப்பட்ட காதல்
















சிட்டு குருவி சிநேகமாக காதல் குருவியோடு
மார்கழி குளிரில் கூட்டுக்குள்ளே ....
கதகதப்பின் ஊடே காதைக் கடித்தது சிட்டு குருவி ,
மாலை பொழதின் மழை தூரல் நடுவே
நடுங்கியபடி காத்திருந்தேன் உனக்காக ...
அந்நேரம் ஒரு ஜோடி தூரல் உடல் தழவ
கைகோர்த்து விளையாடி மகிழ்திருந்தது,
உடன் நீ இல்லையே என்று நானிருகையில்
முத்தத்தில் மூச்சி வாங்கி , கைகள் இடம் மாறி
கட்டியணைத்து மார்கழியை விரட்டி கொண்டிருந்தது ,
ஏக்கத்தில் நாவரண்டு , விழிகள் உன்னை தேடியது ,,,
மயக்கத்தில் நானிருத வேளையில்
வெவ்வேறு திசையினிலே.......
ஜோடிகள் பிரிந்து நடைபயணம் ....
புரியாமல் நான் முழிக்க ...
பேச்சுக்குரல் கிசுகிசுத்தது
முகபூச்சு களைந்து போச்சி
உண்மையெல்லாம் தெரிந்து போச்சி ...
யாதென்று வினவியே பெண்குருவி குழப்பத்தில் ..
காதலாக கட்டி அனைத்து ....ஆண்குருவி ..
காதலின் இலக்கணம் அறியதோர் அவர்களடி
என் உள்ளக் காதலியே ........
இன்றுலகம் இதைத்தான் காதலென்று
பிதற்றுகிறது நீ தெளிவாயோ என்னவளே !...........
- பாலா

Friday, December 24, 2010

மழைத்துளி
















நானும் ஒரு மனித இனமே !
வெண்மேகம் கன்னி பெண்ணாக
வானவெளியில் வலம்வந்தேன் ,
கதிரவன் காமத்தில் கருவுற்று கார்மேகமானேன் ,
காற்றின் மருத்துவத்தால் மழைத்துளியை பெற்றெடுத்தேன் ,
மகிழ்ச்சியை கொண்டாட,
உறவுகள் வானவேடிக்கை நடத்துது
பல கல்வி பயிலவே பூமிக்கு பயணப்பட்டேன் ,
இன்னல்களை கடந்தேதான் பூமிக்குள சென்றடைந்தேன்
சென்றடைந்த இடத்தை வைத்து,
மனித இனங்கள் எங்களையும் தரம் பிரித்தனர் ,
புனித தீர்த்தமாய் தலை சுமந்தவருமுண்டு ,
சாக்கடையாய் முகம் சுளிந்தவரும் உண்டு ,
கதிரவன் வந்து சூடான முத்தமிட்டு
ஆவியாய் அலைய விட்டான் வான்வெளியில்
மண்ணுலகில் மறித்து போனேன் ..............
- பாலா

அன்பின் வடிவமாக ........


ஒரு கன்னத்தில் அறைந்தால்,
மறு கன்னத்தை காட்ட சொன்னார் ஏசு ,
அமைதியின் அடையாளமாக ..
என் சமூகம் உன் முன்பாக ........
மனசாட்சிக்கும் உருவாக ....
நான் உன்னோடவே இருக்கிறேன் ,....
நட்பிக்கு சாட்சியாக ..........
தான் இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் .......
மன்னிப்பாய் தந்தையே ........
இரக்கத்தின் உச்சமாக .......
மீண்டும் உயிர்த்தெழுவேன் ....
நம்பிக்கையின் வெளிப்பாடாக .....
ஏசு என்றும் ........
அன்பின் வடிவமாக ........
- கிஷ்துமஸ் வாழ்த்துக்களோடு பாலா

Tuesday, December 21, 2010

கண்ணுபட்டு போச்சி



குழந்தை அழகென்றேன் ..
கண்ணுபட்டு போச்சி .....
பாட்டியின் குரல் ...
என் செவி தொட்டபோது
முள்ளாய் தைத்தது
இதய சுவற்றில் ......

புன்னகை



பல நூறு மையில் நடை பயின்றேன்
உன் கடைக்கண் பார்வைக்காக ,
நீ மெல்ல புன்னகைத்தாய்,
கடந்த தூரம் கடுகாய் போனது !!!..... .

Monday, December 20, 2010

கருவிழி
















இமை காவலர்களின் துணை ஊடே
தளிர் போன்ற கொடி இவள் நீந்தி பழகுகிறாள் ,
பளபளக்கும் மேனியாள், பார்ப்பவரை காந்தர்வம் செய்திடுவாள் ,
காவலுக்கும் இடையிடையே பல பார்வை பதித்திடுவாள்,
சொக்கி போகும் சுழல் பார்வை , சுட்டு விடும் சுடர்பார்வை ,
கள்ளத்தனம் காட்டியே , காரியத்தை சாதித்திடுவாள்,
குழந்தையான குறுகுறுப்பில் குஷிதனை காட்டிடுவாள் ,
காந்தர்வ அம்பை எய்தி காதலையும் கவர்திடுவாள் ,
சுடும் தீயை உட்கொண்டு உமிழ்ந்தும் தாக்கிடுவாள்
பிறர் துக்கம் தனதாக்கி தாரை தாரையாய் வடித்திடுவாள் ,
இன்ப மிகுதியில் குதித்து தண்ணீரை கரையேற்றிடுவாள் ,
துன்பத்தில் துவண்டு குளத்தையே வற்ற செய்திடுவாள்
எத்தனை பதிவுகள் தன்னுள்ளே பதிந்தாலும் , அதில்
காதலியை மட்டும் இதயத்தின் வடுவாக செதுக்கிடுவாள் ,
இதனையும் செய்திடுகிறாள் ........
இமை காவலர்களை ஏய்த்துவிட்டு ..........
எனக்காக என் கரு விழியாள் .........
- பாலா

Sunday, December 19, 2010

முத்தம்


கண்கள் இமை மூடி கண்ணுறங்கும் நேரமடி ,
மின்னலாய் வெட்டியது உன் நினைவு ,
சில்லென்று சிறகடிக்க சிந்தனைகள் பறந்ததடி ,
பாஸ்போர்ட் விசாவும் இல்லாமலேயே ,
சிங்கார சென்னையை கடந்து ,
சில நூறு மைல்கள் பறந்து ,
இருவரும் கைகோர்த்து, வண்ண உடை உடுத்தி,
வருசையாய் நடன மங்கைகள் இணைந்தாட,
இன்ப இசை கச்சேரி நடக்குதடி ,
இன்பத்தில் உனைத்தழுவி முத்தமிட்டதில்
ஈரமாகி போனதடி என் தலையணை.........
- பாலா

Saturday, December 18, 2010

ஒரு வரி கவிதைகள் ( அப்படின்னு நினச்சிகனும் )


பயப்பதாதே ! நான் தான் சொல்லிட்டேனே , விதியேன்னு படிப்பாங்க, நம்ம நண்பர்கள் தான் யாரும் அடிக்க மாட்டாங்க ..........

மனிதம்
பூவே புன்னகைக்காதே !
ஆணவம் என்று அழித்துவிடும் மனித இனம் .....

கற்பூரம்
மனிதனுக்காக கடவுள் முன் தீக்குளிக்கும்
ஏமாளி தொண்டன் ..........

காந்தி
அகிம்சையை சொல்லிவந்த காந்திக்கே
அதில் நம்பிக்கை இல்லை போலும் .......
கைத்தடி துணைக்கு தேவைபடுகின்றது ....

தேவை
உள்ளத்தில் தேவை அன்பு ...
உடலுக்கு தேவை உயிர் ..
உயவிர்க்கு தேவை தன்னபிக்கை .....

வழுக்கை
விதைத்தாலும் விலையால தரிசு நிலம் ..

கண்ணீர்
இதயம் அதிகம் உழைக்கும் போது
கண்கள் வடிக்கும் வியர்வை துளி ....

வாழ்க்கை நியதி
மண் பெற்றெடுத்த உயிர்கள்,
மனிதனுக்கு இறையாகின்றது ........
மனிதன் பெற்றெடுத்த உயிர்கள் ,
மண்ணிற்கு இறையகின்றது ........
- பாலா

Friday, December 17, 2010

பூக்களை பறிக்காதீர்கள்


தொடு தொடு என்றது என் உள்ளுணர்வு ,
விடு விடு என்றது உன் விழி அசைவு ,
சுற்றி துப்பறிந்தது என் விழி சுழன்று ,
சூடான உன் முகத்திரையில்
சுருங்கி போனதடி உன் முகமலர்ச்சி ,
கண்ட என் கரு விழிகள் கலக்கத்தில்
கட்டளை இட்டதடி என் கைகளுக்கு
விட்டு விலகிவிடு பூக்களை - அதன்
தாயின் மடியிலேயே மலர விட்டு !!!!!!!!........
- பாலா

Thursday, December 16, 2010

ஒரு வரி கவிதைகள் ......

                 லஞ்சம்
கேட்காத கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கும் பக்தர்களே !
கேட்கும் எங்களுக்கு கொடுக்க மறுப்பதேன்
( லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் )
                 சுகம்
காத்திருப்பது சுகமென்றார்கள் காதலிலே !
என் சமாதி வரை காத்திருப்பது கொடுமையானது !

                 காதல்
நானும் அழகானேன் ........
என்னை ஒருவள் காதலித்தபோது .......

               அழகு
அழகே உனக்கு  முகவரி உண்டா ?
ஆனால் முடிவுரை உண்டு ........

                 காதல்
யுத்தமின்றி, இரத்தமின்றி எனை வெற்றி கொண்டாள்
சிறு புன்னகையிலே ............

         சோம்பேறி
உலகம் என்னகொடுத்தது, கேட்டுகொண்டே இருந்தான்
கேட்காமலே மரணத்தை கொடுத்துவிட்டது .......  

          பெருச்சாளி
எங்க வீட்டு சுரங்க தொழிலாளி
        இன்றைய குழந்தை
புதுக்கவிதை ஆங்கிலம் படிக்கின்றது

       நட்சத்திரங்கள்
நிலவு பெண்ணை வாழ்த்தி,
இயற்கை தூவிய பூக்கள் .......

       கடல்
நிலவு பெண்ணே !
நீ வடித்த கண்ணீர் தானோ !
                                              - பாலா 

Wednesday, December 15, 2010

இசை

 








 


இசை மனிதனை மட்டும் மல்ல

அனைத்து உயிர்களையும்

ஆனந்தத்தில் அரவனைக்கும்

முகவரியற்ற  முகமில்லா

 கடவுள்....................( அன்பே சிவம் , )

                                   - பாலா 

Monday, December 13, 2010

வற்றிய குளம்



கதிரவன் வந்து கண்ணடித்தானோ
உடன் சென்றுவிட்டாய் !. ( தண்ணீர் )
வாழ்ந்த வீட்டை மறந்து ...........
- பாலா

Sunday, December 12, 2010

முத்தம்



காலை விழித்தது முதல்
உனை சுற்றிய வந்த சூரியனை
நீ மனமிறங்கி அனைத்து
முத்தமிட்டையோ பூமியே !
முத்தத்தில் முகம் சிவந்து
இமை மூடிமயங்கி போனானே !
எங்களுக்கு இரவை வழங்கி ........
- பாலா

Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்த நாள்

வில்லனென்று நீ மலர்ந்தாய் ,
வீறுகொண்டு உருமாறினாய் ,
உலகம் உன்னை நாயகன் என்றது,
நன்றி என்று நீ வினவினாய் ,
நாடே உன்னை உச்சத்தில் வைத்திருகின்றது ,
நடிப்பில் சூரன் இல்லை என்று சொன்னவர்,
வாய்பிளக்க வைத்தவன் நீ ,
வணக்கத்தோடு நீ நடக்கும் பாதை
முள்ளில்ல எங்க இதய நீரோடை ,
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களும்
உண்டு உன் வாழ்வில் ,
ஏமாற்றாமல் நீ இருந்ததால் -நாங்கள்
உன்னை வைத்தோம் உச்சத்தில்,
உருண்டவன்னெல்லாம்
உலகை ஆள நினைக்கும் போது,
நீ மட்டும் உண்மையாய் இருந்தாய் ,
ஊருக்கு பகட்டாய்
சிம்மாசனத்தில் அமராமல்,
கடவுளுக்கு கைகாட்டி சென்றாய் .
அவனுக்கு தெரியும் உன் மனது
அதனாலேயே இன்றும் நீ அணியவில்லை
அரசியல் வேடம் ..............
பல நூறு படங்கள் நீ நடித்தாலும்
உனக்கு வயது மட்டும் இன்னும்
பின்னோக்கி செல்வதன் மாயம் என்ன ?
அதனாலேயே சொல்கிறேன்
மீண்டும் மீண்டும் குழந்தையாய்
எண்கள் இதயத்தில் பிறப்பாய் .
வாழ்க பல நூறாண்டு என வாழ்த்த
எங்களுக்கு வயதுண்டு -காரணம் ,
என்றும் நீ குழந்தையாய் எங்கள் மனதில்.............
- பாலா









Friday, December 10, 2010

உறவாடினால்...........


உதடுகள் உறவாடினால், வார்த்தை பிறக்கின்றது .
கண்கள் உறவாடினால், புதுக்காதல் இறக்கைகட்டுது
பாதங்கள் மிதிபட்டால், கண்டங்கள் கடுகாகிறது
இதயங்கள் இணைத்து விட்டால் காதல்,
கவிதை படிக்குது ........
- பாலா

Wednesday, December 8, 2010

சுகமான இம்சை



















பேருந்திற்கு காத்திருப்பதும்
சுகமான இம்சை ஆனது ,
காத்திருப்பது உனக்காக என்பதால் !

உன் அன்பினாலே ! ........



















சிந்திக்கும் என் மனது
சிறைபடாத என் இதயம்
சிதையாத என் உணர்வு
மயங்காத என் விழிகள்
மண்டியிட்டு போனதடி
உன் அன்பினாலே ! ......... பாலா

பயணங்கள் முடிவதில்லை ...

















சிந்தித்தால்
உள்ளம் சிறக்கும்
சிரித்தால் சிந்தனை சீர்படும்
சிந்தனை சீர்பட்டால்
நேர்கொண்ட பார்வைவரும்
பார்வை தெளிவானால்
பயணங்கள் முடிவதில்லை ... - பாலா .

வயிற்று பசி ..........

















தினம் ஒரு (கள்ள) காதலனை தேடினேன்
என் உடல் பசியை தனிப்பதற்கல்ல ......
என் தொப்புள் கொடிகளின் ( குழந்தைகள் )
வயிற்று பசியை போக்க ..........

Monday, December 6, 2010

நீ தான் தந்தை ............


என் கவிதைகளுக்கு நான் தாய் என்றால்
நீ தான் தந்தை என் காதலியே !
உன்னால் தான் என் கவிதை பிறந்தது ....... - பாலா

யாருக்கும் தெரியாமல் .........


உன்பெயரையே வைத்துவிட்டேன்
காதலனே ! என் குழந்தைக்கு ...- நான்
உனை கொஞ்சவும் முடியும்
நெஞ்சினில் சுமக்கவும் முடியும்
யாருக்கும் தெரியாமல் ........ - பாலா

Sunday, December 5, 2010

உணர்விற்கு பொருள் தந்தவளே !

 VA - Sax For Lovers (3CD) 1994
உனை பார்த்தபோது அழகின் எல்லையரிந்தேன்
நீ பார்த்தபோது பார்வையின் வலிமையரிந்தேன்
நீ என்னை கடந்தபோது தென்றலின் இதம்முனர்ந்தேன்
நீ செதுக்கிய வார்த்தை சிற்பத்தில் தமிழின் இனிமை அறிந்தேன்
நீ என்னை கண்டித்தபோது கண்டிப்பத்தின் பொருள் உணர்ந்தேன்
நீ துன்பத்தில் கண்ணீர் வடித்தபோது அதன் கொடுமையரிந்தேன்
நீ என்னை காதலித்தபோது காதலின் புனிதமரிந்தேன்
நீ என்னில் முழுமையாய் கலந்தபோது
வாழ்க்கையில் முழுமையடைந்தேன் ........ - பாலா

Tuesday, November 30, 2010

கடலலை



















சீற்றமுடன் சீறிவரும் கடலலையே !
சினம் தணிந்து திரும்புவதேன் !
கஜினி போல் போர் தொடுக்கும் கடலலையே !
கரையை வெற்றி கொள்ளாமல் வீழ்வதேன் !
காற்றின் இசைக்கு நடனமாடும் கடலலையே !
சில நேரங்களில் மக்களை சீண்டி பார்ப்பதேன் !
பயந்தவனுக்கு பூச்சாண்டி காட்டும் கடலலையே !
மதியாதவனுக்கு மண்டியிடுவதேன் !
நண்டுகளுக்கு கரைகாட்டும் கடலலையே !
நடுங்கியவனுக்கு நடுகடல் காட்டுவதேன் !
கரைக்கு மணற்பரப்பும் கடலலையே !
கவிஞ்சர்களுக்கு கற்பனை வள்ளல்லாகிறாய் !
உன் ரசிகனுக்கு தென்றலாகும் கடலலையே !
அழிவில்ல அமிழ்தத்தை உன்னுள்ளே பெற்றவளே !
அழகுடன் ஆர்பரிக்கும் கடலலையே !
ஆனந்தத்தில் புத்துயிர்பெரும் மனித உள்ளமே ! - பாலா

Sunday, November 28, 2010

குழந்தை அழகு


புன்முருவும் புது மலரே !
புதுமையான அரும் மலரே !
வெறுமையான அகமகிழ்வே !
யுக ஆனத்தின் உச்ச மலரே !
கபடம் இல்ல கவிதை மலரே
என் கண் மலரே !
உனக்காக இந்த கவிதை மலரே ! - பாலா

Friday, November 26, 2010

கொலுசு














கவிதை
படிக்கும் உன் பாதத்திற்கு
கொலுசு மாலை அணிவித்தது யாரடி பெண்ணே !
உன் நடை நாட்டியத்திற்கு ,
இசையமைக்கும் கொலுசோசை
உன் வருகையை
நான் மட்டும் அறிய தனி ஓசை
உன் நடையின் நளினம்
சொல்லும் உன் கொலுசோசை
உன் காதலை தினம் சொல்லும்
உன் கொலுசோசை
என் காலை பொழதின் கனவை
கவிதை ஆக்கும் உன் கொலுசோசை. - பாலா

மண்டியிட்டு காதலை பெறாதீர்கள்




















மண்டியிட்டு
காதலை பெறாதீர்கள்
மனம் கவர்ந்து காதலை பெறுங்கள்
மாற்றங்கள் உடையில் (வெளி தோற்றம் ) மாறலாம்
கொண்ட காதலில் மாறாதீர்கள்
உண்மைகள் காதலில் காலம் தாழ்த்தலாம்
ஆனால் காதலின் ஆயுள் முடிவற்றது
காதலில் காமங்கள் இடையிடையே வந்து போகலாம்
காமமே காதலை உயிர்பிக்காது .
(தத்துவம்மாதிரி இருக்குல்ல) - பாலா

இந்த போடோவுக்காக எழதியது

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால் !!!














கன்னத்தில் முத்தமிட்ட காதலியே !
அடுத்து உதடாக இருக்குமோ !
என துடித்த என் இதய துடிப்புகள் ,
நீ கண் சிமிட்டி , உன் விரல் தொட்டு
முகம் தூக்கி கண் ஊடுருவிய பார்வை ,
எனை சம்பட்டியால் அடித்ததடி காதலியே !
காதல் (பாசம் ) அளவற்று இருக்கும் போது,
காமம் எதுக்கடா என் காதலனே ! என்று
சொல்லாமல் சொல்லி விட்டாயடி என்னவளே !
செருக்கோடு நீ நடந்துகொள்ளும் கண்ணியமே
என்னுள் என்றும் உன் நிழல் பதித்ததடி - பாலா

காதல்


காதல்
காதலை கடக்காதார் கனவிலும் இல்லை,
கனவிலாவது காதலை உலராதார்
இவ்வுலகினில் பிறந்ததில்லை.
ஊருக்கு தெரியாத காதலும் உண்டு,
உள்ளதை உருக்கிய காதலும் உண்டு,
உதட்டளவில் உளறிய காதலும் உண்டு,
உலகிற்கே வரலாறாய் நின்ற காதலும் உண்டு,
காதலின் ஆழம் என்று நினைத்து,
தன்னை மாயத்துக்கொண்டவரும் உண்டு.
தூய காதல் துணிந்து, காதலுக்கு
அழகாய் உயிர் கொடுத்தும் உண்டு.
உறவுகளின் மகிழ்ச்சியில்
உயிர் கொடுத்த காதல்,
காதலின் உச்சத்தில் காதலின்
பரிசை (வாரிசை) உலகிற்கு தந்தவரும் உண்டு - பாலா

Saturday, November 20, 2010

ஒரு வரி கவிதைகள் .......( அப்படின்னு நினசிக்கனும் )


முகம் பார்க்கும் கண்ணாடி
பார்ப்பவனை குளோங் செய்யும் மருத்துவர்

மிதிவண்டி
தன்னை மிதிப்பவனை சுமந்து செல்லும் அடிமை

நிழல்
வெளிசச்த்தில் பின்தொடர்ந்து இருளில் மறையும் உண்மை தொண்டன்

தீபந்தம் ( மெழுகுவர்த்தி )
தன்னை அழித்துக்கொண்டு எரித்தவனுக்கு வழிகாட்டும் தியாகி
காதல்
இதயத்தை துளைத்தெடுக்கும் துப்பாக்கி

வத்திக்குச்சி
உரசினாலே எரிந்துபோகும் கண்ணகி

மேளம்
அடிதாங்காமல் அழுதாலும் ,
அடுத்தவனை ஆனந்தபடுத்தும் நடிகன்

விதை
அடக்கம் செய்தபின்னும் உயிர் தெழும் ஏசு

சோளப்பொறி
தீயிட்டு வருப்பவனுக்கும் , அவன் போடும் இசைக்கு
ஆனந்தமாய் கூத்தாடி புன்னகைக்கும் நடனகாரி

Thursday, November 18, 2010

புன்னகை


புன்னகைக்கும் புது மலரே !
புதிர் போடும் புன்னகையே !
எத்தனையோ மாற்றங்களை
உருவாக்கும் புன்னகையே !
கன நேரம் மகிழ்ச்சியுறும் இதயத்தில்
இடையிடையே சஞ்சலிக்கும் புன்னகையே !
பதில் விளங்கா புன்னகையே !
பரிதவிக்கும் உன் எதிர் முனையே ! - பாலா

Monday, November 15, 2010

சிகரெட்
















பார்க்க
அழகாதான் இருக்க
பத்த வச்சா சுகமாவும் இருக்க
பிடிக்கும்போதும் ஸ்டைல்லாவும் இருக்க
பழகிபோனா மறக்கா முடியாமையும் இருக்க
என் மூளைக்கு புத்தி சொல்லும் அறிவாளியாவும் இருக்க
வைத்தியம் இல்லமா உடலை மெலியவும் வைக்கிற
உன்ன எரிச்சிகிட்டு எனக்கு சதோஷத்தையும் கொடுக்கற
ஏனோ என் உடல்மட்டும் உனக்கு பிடிக்கவில்லை
மெல்ல மேலுலகிற்கு விசா வாங்கியும் கொடுக்கற .......
- பாலா

Wednesday, November 10, 2010

பூங்காவனம்















பூக்கள் புன்னகைக்கும் பூங்காவனம்
பசுமையை போர்த்திநிற்கும் பஞ்சவர்ணம்
சோர்வுகள் சூம்பிவிடும் சுந்தரவனம்
கண்கள் குளுமைபெறும் குமரியினம்
குயில்கள் இசை நடத்தும் இன்பவனம்
நண்டுகள் நடனமாடும் நந்தவனம்
வண்டுகள் பசிதீர்க்கும் காமவனம்
தென்றல் தாலாட்டும் தாய்வனம்
காதலர்கள் காதல் பயிலும் காந்தவனம்
பல கவிதை படைத்திடும் கலைவனம்
வறியவர்களையும் அரவணைக்கும் வசந்தவனம்
இயற்கை சொந்தம் கொள்ளும் சொர்க்கவனம்
- பாலா

Saturday, November 6, 2010

முரண்பாடு

ஒருதலை காதல்
நான் காதலித்தவளுக்கு என்னை பிடிக்கவில்லை,
என்னை காதலித்தவளை என்க்கு பிடிக்கவில்லை.
விலைமாது
பொருளையும் கொடுத்து தன்னன்பையும் கொடுத்தாள் மணைவி
பணத்தையும் பெற்று அழிக்கும் நோயை தந்தாள் விலைமாது !
சகுனம்
பூனையை சகுனம் என்ற மூடனே !
பூனை படையுடன் வருபவனுக்கு வெண்சாமரம் வீசுவதேன் !
லஞ்சம்
கேட்காத கடவுளுக்கு லஞ்சம் (காணிக்கை ) கொடுக்கும் பக்தனே !
கேட்கும் மனிதனுக்கு கொடுக்க மறுப்பதேன் ( தப்பு தான் அடிக்காதீங்க )
- பாலா

Friday, November 5, 2010

வானவில்













இயற்கை
படைத்த உலகில் நீயும் ஒரு மாயை
அரைவட்டம் உன் உடல் தோற்றம்
பல வண்ணம் உன் உடை அலங்காரம்
வானுலகின் நுழைவாயில் தோரணமும் நீ ..
வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமா நீ
வானுலகின் போர் ஓய்ந்த அறிகுறியா நீ
வெண்ணிலாவில் குளிக்கும் தேவதைகளின்சேலை குவியலா நீ
விண்ணுலக கூட்டணி கட்சி கொடியோ நீ
வண்ணங்களின் பூர்வீகம் நீ தானோ
ராமனும் ஒடிக்க முடியாத வில்லும் நீயோ
வாலிபர்களின் ( கவிஞ்சர்கள் ) கனவு நாயகியும் நீயா ?
- பாலா

விலை மாதர்















கற்பிற்கு விடுதலை வாங்கி கொடுத்தவர்கள்
விரும்பாத விருந்திற்கும் வரவேற்பவர்கள்

மறந்து போனது என் வாழ்க்கை


















நீ கண் அசைத்தாய் என் கனவுகள் மாறிப்போனது
நீ நெருங்கினாய் என் சுயசிந்தனை அற்று போனது
நீ காதலன் என்றாய் என் கனநேரங்கள் நீண்டு போனது
நீ என் உறவு என்றாய் என் உறவுகள் உதரி போனது
நீ வாழ்க்கை என்றாய் அது நீ தான் என்றேன்
நீ உலகம் பெரியது என்றாய் ,
யுகமே உன்னால் சிறியது என்றேன்
நீ மறந்து விடு என்றாய் ,மறந்து போனது என் வாழ்க்கை .
- பாலா

Thursday, November 4, 2010

எல்லாம் ஒரு விளம்பரம் தான் ..



















அழகின் முகவரி ,
ஆகாயத்தின் ஆர்பரிப்பு
ஆழ் கடலின் முத்து ( சொத்து )
ஆடவரின் அல்லி ( அழகிய )
காற்றின் தென்றல் ( புயல் இல்ல )
மலைகளில் காஷ்மீர் (பழைய )
புல்நுனியின் பனித்துளி ( பனி காலத்துல )
அமிழ்தத்தின் சுவை ( தெரியாது )
பூக்களில் மல்லி ( முள்ளு இல்லப்பா )
மணங்களில் மண்மணம் ( தாய் )
நட்பிலே கர்ணன் ( உயிரை எல்லாம் கேட்டபடாது )
அகத்திலே அன்பு ( காசாபணமா )
வெளிலே வேங்கை ( வீட்டுக்குள்ள மட்டும் )
எல்லாம் நான்தாப்பா ..... ஹி .... ஹி . ...ஹி ...
எல்லாம் ஒரு விளம்பரம் தான் ..

தீபாவளி திருநாள் !!



தீபத் திருநாள்
தித்திக்கும் சுவை நாள்
புத்தாடை கிடைக்கும் நாள்
புதியவர்களையும் வாழ்த்தும் நாள்
வானம் வண்ண கோலமாய் மாறும் நாள்
சிறுவர்களும் திவிரவாதியாய் மாறும் நாள்
அனைவருமே ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் நாள்
பாவம் பல கோழி ,ஆடுகளின் கடைசி நாள்
மதுபானாங்களின் விற்பனை உச்சத்தை எட்டும் நாள்
பணம் படைத்தவனின் பகட்டு நாள்
ஏழைகளோ கந்து வட்டிக்கு கை ஏந்தும் நாள்
குழந்தைகளின் முகத்தில் குதுகலிக்கும் நாள் .
இந்த தீபாவளித் திருநாள்.-