என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, January 14, 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...


தமிழனுக்கு தலை நாளாம்
பொங்கல் எனும் திருநாளாம்,
உழுது வாழ்பவனுக்கு
உன்னதமான பெருந்நாளாம்,
கட்டி ஆண்டவனிடம் காளைகள்
சன்மானம் பெறும் நன்நாளாம்,
வெண்திரையில் கவர்ச்சி காட்டி
பெரும் கல்லாக்கட்டும் கலைநாளாம்,
பூமி மகளை பலவிதமாய்
அலங்கரிக்கும் மணநாளாம்,
விதவிதமாய் உடுப்பு போட்டு,
பொங்கிவரும் அழகை கண்டு,
பொங்கலே! பொங்கல்! என்று
வாழ்த்து சொல்லும் தைத்திருநாளாம்....
- இனிய பொங்கல் நல்வாழ்த்துகளோடு
கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 10, 2012

இது காதலின் தோல்வி அல்ல


ண்மை காதலில்
உறைந்திருப்பது அன்பு எனும் பொதுபண்பே !
ஆனால்  காதலில் அன்பு மிகுந்திருப்பது
மிகுந்த  சுயநலத்தோடு  ஒரேஇடமே!

சொந்த பந்தம் தெரிவதில்லை ,
உற்ற நட்பும் உறைப்பதில்லை ,
சுற்றம் முற்றும்  புரிவதில்லை ,
நினைவுகள் அற்று நடைபிணமாய் ,
நாதியற்று அனாதையாய் மாறுவதையும்
மறந்தேதான் தவிக்கின்றது .

வேற்று நினைவுகள் வருவதில்லை ,
ஒற்றை நினைவு  மனதில் குடிபுகுந்து
வீட்டுக்குள்ளே அனாதையாய்
 விலக்கி  வைக்கும் காதலே !

ரு நொடியும் ஒரு யுகமாய் ,
ஒரு பொழுதும் ஒரு ஜென்மாய்
புலம்ப வைக்கும் காதலே !
தெளிவில்லா போதை மயக்கத்திலே
சுற்றித்திரியும் காதலே
சுடு சொல்லையும் சுகமாய் சுமக்கும்
வடுக்களையும் பரிசாய் நினைக்கும் காதலே !

காதல் பொய்த்து போனாலே
கடைசி யாத்திரையையும்  சுகமக்குதே காதலே !
கடமையை மறக்குது காதலே
கவிதை படிக்குது காதலே
மனதில் துக்கம் சுமக்கும் காதலே !
இருந்தும் வாழ்த்தும் உண்மை காதலே!
உருகுலைத்தே போகவைக்கும் காதலே
ஆனால் நலமாய் வாழ்வும் ,
வாழ்த்தும் உண்மை காதலே !

து காதலின்  தோல்வி அல்ல ,
இருவர்  உறவின்  தோல்வி .
தெரிந்தும் யாரும் விடுவதுமில்லை
காதல் யாரையும் விட்டு வைப்பதுமில்லை.

- கவிதை பூக்கள் பாலா