கன்னியரின் கலங்கரையோ
காளையரின் இழுவிசையோ....
கயல்விழியால் ஆள்பவளோ ..
ஆகாயத்தில் தவழ்பவளோ...
கருவியால் என்னை வென்றவளோ..
கடல் அன்னையின் முத்துமகளோ..
காற்றிலும் இளந்தென்றலானவலோ...
கவிதைகளின் கருப்பொருளோ..
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சியோ..
கற்பனைகளின் முகவரியோ...
கற்சிலைகளின் நிச உருவமோ..
காவியங்களின் கதாநாயகியோ....
இவள் என்னவளோ, பேரழகியோ..
விழியம்பில் காதல் கனைதொடுத்தவளோ..
விடையறியா வினவுகின்றேன்..
விரைவில் என்னுள் தஞ்சமிடு
தலைசுமந்து காத்திடுவேன்,
உனதன்பில் திளைத்திடுவேன்....
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment