என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, August 15, 2016

தீபந்தம்

தீண்டும் விரலில் (காம)தீபந்தம்
கொடுத்துவிட்டு குளிர்காயும் நேரத்தில்,
நீர்முத்துகள் உடலெங்கும் பூத்திடும் அதிசயம்,
கலவியல் தத்துவங்களோ !

Thursday, January 14, 2016

மாற்றதை நோக்கி எழுவோமடா..

மற தமிழா,
மண்டியிட்டது போதுமடா,
ஆட்சிகள் நம்பிக்கையிழந்தோம்,
நீதியை நம்புகிறோம் அனைத்திலும்
அங்கேயும் கைத்தட்டிவிட்டது..
அரசியல் விளையாட்டடா ?
பலியாவது உந்தன் இனமடா ..
கலாச்சாரம் போனதடா..
தமிழன் உயிர்கள்
மதிப்பிழந்து போனதடா..
வீரத்தமிழன் நாமடா
விடியல் நமக்கானதடா...
மயக்கம் போதுமடா
மாற்றதை நோக்கி எழுவோமடா..
மட்டமான மோசடி
அரசியல் வீனடா...
அரசியல் வேடதாரிகள்
அரங்கேற்றும் நாடகங்களடா..
மானமுள்ள தமிழனடா
தமிழா நம்மை நாம் இனி
காத்துகொள்வோம்மடா..

- கவிதை பூக்கள் பாலா