என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, December 31, 2012

என்று மாயும் இந்த உள்ளம் குமுறல்

நொடிக்கு நொடி எத்தனை மாற்றங்கள் !
அதில் தான் எத்தனை  விதமான மனவலிகள் !
கண்கள் வடிக்கும் கண்ணீரோ ! வற்றா
கங்கை யமுனை  தோற்க்குமடி !,
இமைகள் மூடா  இரவுகள் எல்லாம்
என்னை கைக்கொட்டி ஏளனம் செய்கிறதடி !
இதயம் வெடிக்கும்  வலிகள் இன்று
சிம்மாசனமிட்டு  தினம் என்னை கொல்கிறதடி !
எத்தனையோ ஏற்றங்கள்  வந்து சென்றாலும் ,
அனைத்திலும் முதன்மையாய் மனகாயங்கள்
என்முன்னே எத்தலமிடுகின்றதடி  ..............
என்று மாயும் இந்த உள்ளம் குமுறல்,
என்றேதான் மீண்டும் இதயம் வலிக்கின்றதடி....  
 - கவிதை பூக்கள் பாலா