என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, March 28, 2011

தேர்தல் சிறப்பு கருதி இந்த பதிவு :

இது என்னுடைய கவிதை அல்ல, இது வரை இங்கு வேரு யாருடைய கவிதையும் பதிவிட்டதில்லை. முதல் முறையாக நடப்பு அவலத்தை அழகாக வடித்ததால் இங்கே பதிவிட்டேன் அவ்வளவே கவிதை ஆக்கம் ( kavithai for karuna)


கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!சொல்லிச் சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே!இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் - உனை எப்போதும் மறவாது தமிழினம்!தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது! தலைவன் நீ என்ன செய்தாய்!தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து, முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க! எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும் வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன் சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன் மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம் ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன் அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள் இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!தமிழனை குறைவாக எடைபோட்டாய்! தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்! முடிந்தது உன் ஆட்சி! மடிந்தது உன் சூழ்ச்சி!அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்! அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை அப்படியே பொசுக்கட்டும்! ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்! அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்! அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்! அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

நன்றி : http://tamilmakkalkural.blogspot.com/2010/09/india-today-kalaignar-karunanidhi.html

Wednesday, March 23, 2011

புன்னகையின் வலிமைதானோ ! ...


நீ சில்லறையாய் சிதறவிட்ட
சிரிப்பொலியை ...
சிதறாமல் சிறைபிடிக்க
கையேந்தும் என் அனிச்சை செயல் ......
உன்னிடத்தில் உறவாடும்
என் காதல் தான் காரணமோ ......

கட்டி அனைத்து தழுவவில்லை
காதல் ரசம் பேசவில்லை
முத்தம் கூட முயன்றதில்லை
உன்பின்னே அலைந்ததில்லை
உன் வாசம் தேடி வந்ததில்லை
இருந்தும் உன் காதல் எப்படி ......

என்னை கடக்கையிலே
இதழ்யோரம் நீ வடித்த
புன்னகையின் வலிமைதானோ !
பெண்மைகள் சுற்றி பலரிருந்தாலும்
உன்னை மட்டும் சுருட்டி வைத்த
என் விழி தானோ ....
உன் காந்த விழிக்கு ஏற்ற
இழு விசையும் நான் தானோ !

இறுகிய என் இதய கதவும் ........
இன்று மண்ணில் குழைத்து
நீ செய்யும் வடிவம் தானோ ! என் நிலை ...
மாற்றங்கள் வந்ததடி என்னுள்ளே
உன் புன்னகையின் வலிமையாலே ........
கவிதை பூக்கள் பாலா

Wednesday, March 16, 2011

அவன் களவானி பயல் தானே !


சிறு வயது சாபங்கள் .....
சிலநேரங்களில் பலித்து விடும் போல ,
ஆம் , அறியாத வயதினிலே ,
அறிந்து செய்த சிறு சிறு திருட்டு தனம்
சாபத்தை பெற்று தந்தது ,
களவானி பயலுக்கு வாக்கப்பட போறே என்று !,
விளையாட்டாய் சிரிந்து மகிழ்ந்த நான் ,
இன்றும் அதே புன்னகையில் .....
சாபம் பலித்து விட்டதே என்று .......
இதய பெட்டகத்தில் பாதுகாத்த என் காதலை ,
களவாடி இதயத்தில் பதுக்கிக்கொண்டான்
என்னவன், அவன் களவானி பயல் தானே !
- கவிதை பூக்கள் பாலா
..

Saturday, March 5, 2011

காதல் நம் காதல் ஆகும்...


என் கண்ணுக்குள் வாழ்பவள் நீ
கவிதையில் கலந்திருப்பவள் நீ
உணர்வில் உறைந்திருப்பவலும் நீ
என்னில் நிறைதிருப்பவள் நீ
என் வாழ்வில் வசந்தமும் நீ
உன் காதல் விடை சொல்லும்
என் வாழ்வும் நீ என்று ..........
உன் காதல் வரம் வேண்டி தவமிருக்கும் என் காதல்
பதில் கொடு காதல் நம் காதல் ஆகும் .......
- கவிதை பூக்கள் பாலா ..