என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, January 31, 2011

நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........டற்கரை
ஓரம் எங்க வீடு ,
கடலுக்குள்ளே எங்க வாழ்வு ,
கட்டுமரம் எங்க வாழ்வோடு ,
நித்தம் கடலில துடுப்போடு ,
கடலுக்குள்ளே எங்க சோறு ,
கரைச் சேர்த்ததான்
வாழும் சான் வயிறு ,

டலில தெரியல எல்லை கோடு
காற்று அடிப்பதில் தெரியுதா? அண்டைநாடு,
உயிருக்கு பயந்தே படகுல பயணம் ,
சிங்களவன் காளானா வருவத நினைத்து ,
மனிதத்த தின்னும் சிங்கள பேய்கள் ,
நித்தம் பசிக்கு தின்ன தமிழன் உயிரா !

ரையில உயிர்கள் சொந்தத்த எதிர்ப்பார்க்குது ,
கொடுமையின் அழுக்குரல்கள் கரையேறி சாகுது ,
நடுக்கடலில மிதக்கும் எங்களின் தீரம் ,இப்ப
கரைதட்டி போனதே சிங்கள நாய்களின் வெறியலே!
வழிப்பறி செய்யுது சிங்கள கடற்படை கடலிலே !
பிழைக்க வழியேது தெரியாம துடிக்குது மீனவ குடும்பமே !
விஷத்த கக்கி ஈழத் தமிழன கொன்ன சிங்கள் பாம்பு ,
நாக்க நீட்டி தமிழக மீனவன கொன்னு நோட்டம் போடுது .

மிழினம் காப்போம் தாளுல மின்னுது ,
தரம்கெட்ட தமிழக அரசியல் சவக்குழிய தேடுது ,
வோட்டுக்கு மட்டுமே தமிழக மீனவன், அவன்
சடலத்தைக் காட்டி வோட்டு வேட்டையும் நடக்குது ! ,
உறவுகளை இழந்த உணர்வற்ற தமிழகம்,
இன்னமும் முழிக்கல டாஸ்மார்க் மயக்கத்துல,
உணர்வுகள் தள்ளாடுது மானாட மயிலாட ,
இலவசங்கள் பல்லிளிக்குது பிணத்துக்கு வாய்கரிசி போட.

த்தியில சீட்டு இல்லைன்னா தன் சீட்டுதான் தங்கள ,
நடவண்டிய தள்ளிகிட்டு டெல்லியில பிசைஎடுக்க பறக்குது ,
தமிழன் பிணவாடை அடிச்சாலும் , மூர்ச்சையாகி நின்னாலும்,
விதவிதமா அறிக்கை விட்டே தினம் ஆளத்தான் கொல்லுது .
தமிழா! நீ முழிக்கலன்னா மண்ணோடு மண்ணாயிடுவ ,
நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........
- கண்டன குரலோடு கவிதை பூக்கள் பாலா

கண்ணீர் பெருகும் மீனவன் பாடல் :


.... கண்டிப்பாக வீடியோவை ஒருமுறையாவது பார்க்கவும்...
...

Friday, January 28, 2011

நம்பிக்கை பொய்த்தவன் தேடல்...

விண்ணை தொட முயன்று
மூர்ச்சையாகி போனவனை,
மண்ணை தழுவ நினைத்த நிமிடம்,
வாரி தன்னுள் அணைத்துக்கொண்டது,
நம்பிக்கை பொய்த்தவன் தேடல் ...
- கவிதை பூக்கள் பாலா ...

வாந்தி : பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ் மட்டம் வீக்கு
.....

Tuesday, January 25, 2011

நீ மண்ணோடு சென்றிடுவாய் .......சுதந்திர நாடுதான் நம்ம நாடு ,இதில்
நேர்மைக்கு சுதந்திரம் இல்லையேன்னு தோனுது .
குடியரசு தான் இன்று நம்மள ஆளுது ,
இதுல குடிமக்கள் தான் தினமும் வாடுது .
அன்னியன விரட்ட வேகமோ இருந்தது,
அவன் அன்னியம் ( அடுத்தவன் )என்பதாலா ,
என்று எண்ணி நொந்து போகுது .

உள்ளுக்குளே
இருந்து கிட்டு ,
குடியரசு என்ற பெயரோட,
நம்ம உசுரத்தான் வாங்குது.
நடப்பதெல்லாம் குடும்ப சண்டை,
பேச்செல்லாம் பெருசாதான் இருக்குது
செய்யும் செயல்கள்தான்
மானம் கெட்டு போகுது ,
பாசம், பாகம் சரி இல்லையே,
யாருக்கும் துணிவில்லையே என்று
மக்கள் மனம் போராடுது ,
தெருவில் நின்று போராட
வக்கற்று தான் போனது ,
போராட நினைத்தாலும்
ஏளனமும் செய்யுது .

உள்குத்தா நடப்பதால
உடம்பெல்லாம் வலிக்குது,
இருந்தாலும் நாம இந்தியன்னு வெளியில
பல்ல இளிக்கத்தான் தோனுது ,
இத ஒன்ன வச்சிக்கிட்டு
மக்களையும் ஏய்க்குது ,
இதற்கு பேரு குடியரசு(மக்களாட்சி)
அதுக்கொரு நாளும் வச்சி கொண்டாடுது .

கொள்ளையடிப்பவன் கூடாரமா !
குடியரசு என்றோ மாறி போச்சுது ,
குட்ட குட்ட குனியும் காலம்
மலையேறி போச்சுதுன்னா,
கொள்ளையடிப்பவனை எல்லாம்
கொல்லபுரம் கழுவசொல்லும் காலம்
வெகு தொலைவில்லை என
எச்சரிக்க தோனுது .

முழித்துக்கொள் குடியரசே !( மக்களாட்சி )
இல்லை நீ மண்ணோடு சென்றிடுவாய் .......
... வாழ்த்துக்களோடு கவிதை பூக்கள் பாலா ....
..

Sunday, January 23, 2011

என்னை கழட்டித்தான் விட்டு புட்டான் ( லேட்டஸ்ட் காதல் )குட்டி சுவற்றில் நின்னுகிட்டு ,
சைட்டு தான் போட்ட மச்சான்.
குரங்கு குட்டி கரணம் போட்டு ,
பேருந்து சாகசம் செஞ்ச மச்சான்
தினந் தினம் காதல் பல வேடம் போட்டே தான்,
நண்பகிட்ட பிச்சை எடுத்து,
பைகொல்லம் ஓட்டி வந்தான்.
மொபைல்ல பல விதமா,
மொக்கையெல்லாம் போட்ட மச்சான்,
முட்டி மோதி காதலுன்னு,
கண்ணடிக்க வச்சிப்புட்டான்.
ஊர் ஊரா சுத்தி வந்து,
கடைசில என்ன கவுத்துப் புட்டான் .
பின்னே நண்பன்தான்னு என்ன யேச்சிப் புட்டான் .
இப்ப என் தோழி சூப்பருன்னு,
என்னை கழட்டித்தான் விட்டுப் புட்டான்.
அவன் நண்பனை எனக்கு அறிமுகம் செய்யாமலே !
- கவிதை பூக்கள் பாலா
குறிப்பு : அடிக்க வரவங்க ஒட்டு போட்டுட்டு வாங்க தெளிய வச்சி அடிக்கலாம்
..

Friday, January 21, 2011

இடம் தர மறுப்பதேன் ?பூவே உன்னை நேசித்தேன்,
காதலி நினைவாலே !
அன்பு கொண்டு காதலிக்க,
அவளும் எங்கே இருகின்றாள்.
கனவில் நித்தம் கண்ணடிப்பவளே !
உன் முகம் காட்ட மறுப்பதேன் ?
இதயத்தில் தினம் தினம்
ஓவியம் வரைபவளே !
என் காதல் குடிபுக,
உன் இதயம் இடம் தர மறுப்பதேன் ?
...

Friday, January 14, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...


தமிழனுக்கு தலை நாளாம்
பொங்கல் எனும் திருநாளாம்,
உழுது வாழ்பவனுக்கு
உன்னதமான பெருந்நாளாம்,
கட்டி ஆண்டவனிடம் காளைகள்
சன்மானம் பெறும் நன்நாளாம்,
வெண்திரையில் கவர்ச்சி காட்டி
பெரும் கல்லாக்கட்டும் கலைநாளாம்,
பூமி மகளை பலவிதமாய்
அலங்கரிக்கும் மணநாளாம்,
விதவிதமாய் உடுப்பு போட்டு,
பொங்கிவரும் அழகை கண்டு,
பொங்கலே! பொங்கல்! என்று
வாழ்த்து சொல்லும் தைத்திருநாளாம்....
- இனிய பொங்கல் நல்வாழ்த்துகளோடு
கவிதை பூக்கள் பாலா
..

Thursday, January 13, 2011

தோழமைக்கு கொடுத்த (தொடுத்த ) பரிசு
பரிசு கொடுக்க விரும்பினேன் தோழியே !
பலநூறை புரட்டி விட்டேன் ,
புரண்டு புரண்டு அழுது விட்டேன்.
விடை தெரியாது , விழி பிதுங்கி
கனநேரம் கண்ணயர்ந்தேன் , கனவிலும்
புன்னகைத்தாய் ! பரிசெங்கே என்றேதான்.

உன் புன்னகையின் ஒளியினிலே
புது ஞானம் பிறந்தடி தோழியே !
கவிதையின் ஊடே நம் நட்பு பிறந்ததால்
கவிதையை பரிசளித்தால் நலமன்றோ தோழியே ! ,
முழுமையாக முடிவெடுத்து ,
கவிதை தொடுக்க முனைதேன் தோழியே !.

என் தமிழில் வார்த்தைகள் பஞ்சமில்லை என்றாலும் ,
உன்முன்னே என் கற்பனை பஞ்சமானதடி தோழியே ! ,
பலம்கொண்டு பலமுறை, என்தமிழ் வார்த்தைகளை
பிரசவித்தேன் ஆனந்த வலிகொண்டே தோழியே !.,
ஆனாலும் ஏனோ இடை மறித்து பல்லித்தது ,
உன் அழகிற்கு இணை இல்லை என்றேதான் தோழியே !

பல தவங்கள் புரிந்தே பின்னே , புலப்பட்டது யாதென்று ,
உனை வர்ணிக்க இந்த ஒற்றை வரிபோதுமென்று தோழியே !
''என் தமிழ்தாய் ஈன்றெடுத்த தலை
பிரசவ குழந்தையடி நீ !''

ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்ல இயலாததையும்,
சிற்பியாலும் செதுக்க முடியாத சிற்பத்தை ,
இந்த ஒற்றை வரி சொல்லி இருக்கும் ,
நீ யார் என்றேதான் தோழியே !

இன்னுமா! புரியவிலை என் தோழியே !,
தலை பிரசவ குழந்தையை காணும் தாய்க்கு,
துச்சமடி உலகில் கிடைக்கும்(கொடுக்கும்)
பொருளனைத்தும் தோழியே !,
மறக்க முடியா பரிசு..........
இதுவல்லவோ !
என் அழகு தோழியே ! .....
- தோழமையுடன் கவிதை பூக்கள் பாலா

குறிப்பு : என்னிடம் பரிசு கேட்ட தோழிக்கு , நான் வடித்த கவிதை பரிசு
இதற்கு என் தோழியின் பதில் என்னவாக இருந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போன் .

..

Tuesday, January 11, 2011

இதுதானே நியதி !
உதடுகள் சண்டையிட்டு வார்த்தை பிறந்தது,
கண்கள் பேசிக்கொண்டு காதல் மலர்ந்தது,
கைகள் இணைந்து நட்பு என்றது ,
உடல்கள் பிணைந்து (காம) பசி தீர்த்தது,
உயிர்கள் உறவாடி உறவை வளர்ந்தது,
குரலோசைகள் ஒன்றாகி உயர்வு கிட்டியது,
இன்பம் துன்பம் முட்டிவாழ்க்கை என்றது .
ஜெயித்தது உடன் ஒட்டி கொண்டது, .
இன்பம் இதுவல்லவோ வாழ்க்கை என்றது ,
துன்பம் போதுமட என்று சொல்லவைத்தது,
வாழ்க்கை, இதுதானே நியதி என்றது .....
- கவிதை பூக்கள் பாலா


...

Monday, January 10, 2011

நாவரசி (நிர்வாண நடனம் )


மெகா இரண்டு வாயிற் கதவுகள்
பாதுகாக்கும் நடன அரங்கில் ,
முப்பத்தி இரண்டு காவலர்கள்
சுற்றி தீவிர சோதனையிட,
பார்த்து பரவசப்பட ஜொள்
பார்வையாளர்களை அனுமதிட ,
நீண்ட பதுங்கு குகைக்குள்ளிருந்து
நிர்வாண நடனமாடுகிறாள் நாவரசி ......
- கவிதை பூக்கள் பாலா .


.........

Sunday, January 9, 2011

பார்த்து ரசிக்க....


வானில் பார்த்து ரசிக்க நிலவுண்டு ,
பூமியில் ரசிக்க நீ மட்டுமே எனக்குண்டு ,
நிலவு பார்த்து ரசிக்க ,
நீ என் வாழ்க்கை முழுக்க
என்னவளே !.........
- கவிதை பூக்கள் பாலா

Thursday, January 6, 2011

விண்னை தொடும் நம் காதல் .......உன்
விழிகளுக்கு,
எனை சுட்டெரிக்க பணித்த தேவதையே !
உன்னுடன் பிரிவில்லா உறவாடும்,
உன் உறவுகளிடம் வினவிப்பார் !

ன் கூந்தலில் குடி இருக்கும்
ரோஜாவை கேட்டு பார் ! ,
என் புன்னகையின் வலி புரியும்.

தோடுகளிடம் கேள்வி தொடுத்து பார் !,
உனை தொடரும் என்னிலையை,
தொடர்கதையாய் சொல்லும் .

ன் தோல் தழுவும் துப்பட்டாவை
முறுக்காமல் விட்டுப்பார் !,
தாவி எனை தழுவிக்கொள்ளும் .

ன் கால் தடங்களிடம்
உளவுச்செய்தி உளற சொல்லிப்பார் !,
உனை பல காலம் பின்தொடரும்
உளவாளி நான் என்று எச்சரிக்கும்.

ன் சுவாச காற்றிடமும்
கனிவாய் கதைத்து பார் !,
எனை கடக்கும் நேரம் அதன்
உடல்சுடும் உண்மையை உரைக்கும்.

நீ வடிக்கும் வியர்வையை
விரைவாக கேட்டு பார் !,
தீர்த்தமாய் என் தலை சுமைக்கும்
பக்தியை பறைசாற்றும் .

நீ கடக்கும் பாதையை
என் வாழ்க்கை வீதியாக்கிய காதல் ,
உன் இதயத்தில் சமாதி ஆகும் முன் ,
உன் காதலுக்கு விடுதலை கொடு ,
விரைவில்
விண்னை தொடும் நம் காதல் ............
கவிதை பூக்கள் பாலா

என் காதலுக்கு(கவிதைக்கு) வாழ்த்து சொல்லிட்டு போங்களேன் ....
என் கவிதைகள் தலை வணங்கி ஏற்கும்....

Tuesday, January 4, 2011

நமக்கு பேரு ''இந்திய குடிமகன்...


தே
ர்தல் வந்து,
நம்ம வீடு வீடா தேடுது ,
தெரியாத முகமெல்லாம்
நம்முன்னே நாணுது ....

னங்கொண்ட தலைகளெல்லாம்
இப்ப தலை கீழா நடக்குது ..........
ட்டி வச்சா ஆனவமெல்லாம் ,
அடிபட்டது போல் ஆகுது ....

டங்காம திரிஞ்சதெல்லாம், ஐயோ !
பாவமுன்னு சொல்ல வைக்குது....
டக்காத கால்களெல்லாம் ,
நடை பயணம் போகுது ........

டிப்பிலே உச்சம் தொட்டு ,
நாய் நரியெல்லாம் நாடகமும் நடத்துது .....
கொசுக்கூட செல்லாத இடமெல்லாம் ,
கொடிநடையா கால்கள் நடக்குது ......

தேன் சொட்டும் வார்த்தையாலே ,
நம்ம திகைக்கத்தான் வைக்குது ........
கைவனும் இப்ப உயிர் நண்பன்னு ,
தழுவி ஊரைத்தான் ஏய்க்குது....
தெல்லாம் அரசியல்ல சகஜமுனு ,
தத்துவமா வாய் கிழியுது ........

யிரை குடித்த ஊழலெல்லாம்,
உலகெல்லாம் நாருது.......
நாற்றத்தின் நடுவிலேயும் ,
பழிவாங்கல் இதுவென்று ,
நமட்டு சிரிப்பு சிரிக்குது .....

வீழ்ந்த மக்களை எல்லாம் ,
விலை கொடுத்து வாங்குது....
னம் பொறுக்கா கதரியோரை,
காவல் கொண்டு குடையுது ....

டமையை சாதனை என்று ,
தம்பட்டம் தான் அடிக்குது ,,,,
தை கூட செய்யாத சிலது ,
குறை சொல்லி திரியுது .......

குற்றங்கள் பல செய்தால் ,
குத்தகை வேட்பாளர் ஆகுது ,,,,,
டிச்சதுல சில்லறைய ,
செலவினமா காட்டுது ......

வேண்டியவன் இவனென்றும் ,
நம் இன, மதத்தோன் இவனென்றும்,
நம்மளும் ஓட்டு போடுது ........
போட்ட பின்னாடி, அடிமை என்றே
எண்ணி வாடுது ........

வாக்குறுதி எல்லாம் இப்ப ,
வக்கற்று போகுது .......
நாதியற்ற நாட்டுல ,
நமக்கு பேரு
''இந்திய குடிமகன் ;;......
---
பேச தெரிந்தும் ஊமையாய் பாலா

Sunday, January 2, 2011

இன்று மறைந்து போனது ..............
இரவின்
மடியில் இன்பங்கள் தாலாட்ட ,
கனவுகள் இதமாய் கதைகள் சொல்லிட,
வலிகளை எல்லாம் கதவு தடுத்திட,
தாயின் மடி சுகம் மெத்தையுமாயிட ,
தென்றலை இதமாய் செயற்கை வழங்கிட,
தொலைத்த நினைவுகள் கண்முன்னே நிழலாடிட ,
இமைகள் பணிமுடிந்து கதவடைப்பு செய்திட,
எனை காக்க இதயம் இடைவிடாது உழைத்திட,
நாளை விடியும் என நம்பிக்கை பறைசாற்றிட,
உடல் மீது உயிர் காதல் மெய்யென வினவிட ,
உறக்கம் உடலை காமத்தில் மயக்கிட .......
இன்று மறைந்து போனது ..............
இரவு வணக்கங்களோடு ........
- பாலா .

Saturday, January 1, 2011

ரோஜா புன்னகை...
ரோஜாவுக்கு
இந்த ராஜா மீது காதலா .....
இல்லை உன் கூந்தலோடு உறவாட ஆவலா .....
என்னை பார்த்தும் புன்னகைக்கிறது ... ..

நான் உன் உறவு

நீ சுவாசிக்கும் காற்றுக்கு தெரியும் போல
நான் உன் உறவு ( காதலன் )என்று.................
தென்றலாக என்னையும் தழுவி செல்கிறது .....