என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, September 18, 2010

அந்த யாரினில் நானிருபேனா !















இரத்தம் தோய்ந்த உன் உதடுகளின்
நித்தம் ஒரு கவிதை படிக்க ஆசை ,
உன் கண்சிமிட்டும் கரு விழியில் ,
எனை கண்டெடுக்க ஆசை ,
உன் விரல்களோடு நடனமாடும் கூந்தலிலே தென்றலாக குடியிருக்க ஆசை,
உந்தன் செவிகளில் ஊஞ்சலாடும்
தோடுகளாக நானிருக்க ஆசை ,
உன் முன்னழகின் மயக்கத்திலே
என் மதியிழக்காமல் காதலிக்கவே ஆசை ,
மலைகளின் வளை போன்ற இடையினிலே
குழந்தையாய் அமர்திருக்க ஆசை ,
உன் வருகையை பறை சற்றும் கொலுசோசை
இசைதனில் லையத்திருக்க ஆசை ,
உன் பூம்பாதம் தாங்கிகொள்ளும்
மலராக என்றும் நானிருக்க ஆசை ,
உன் தேகத்தின் அழகுதனை அருளிய
பிரமனுக்கு நன்றி சொல்லவே ஆசை ,
உனக்கு யார்மீது ஆசை நானறியேன் பெண்ணே !,
இருந்தாலும் ,அந்த யாரினில் நானிருபேனா !
அறிந்து கொள்ள உனை பின்தொடரவே ஆசை .

Friday, September 17, 2010

நண்பேண்டா ! என் நண்பேண்டா !

நண்பேண்டா ! என் நண்பேண்டா ! என்று அறிமுகம் செய்த போது
அகம் மகிழ்ந்தேன் நண்பா !
அடிஆளோடு கந்துவட்டிகாரன் வந்து,
என் அகம் நேக நைய புடைத்த போது தான் விளங்கியது ,
நீ சொல்லியத்தின் அர்த்தம் .

Wednesday, September 8, 2010

இவள்தான் என் காதலியோ !!!

கண்ட கனவுகள் எல்லாம் நிஜங்கள் ஆவதில்லை !,
கண்ட காட்சி எல்லாம் ஆழ் மனதில் நிற்பதில்லை !
கண்ட பெண்ணெல்லாம் காதலியாய் மாறுவதில்லை !
கண்ட நிமிடம் முதல் உன்னை மட்டும் ஏனோ !
என் மனம் மறக்கவில்லை !!!!

Wednesday, September 1, 2010

என்னவனே !!!

என்னுள் நாணத்தை விதைத்தவனே !
மயக்கும் விழி காட்டி , என் நினைவை தொலைத்தவனே !
ஈர்க்கும் பேச்சழகில் என் இதயத்தை வருடுபவனே !
என் இளகிய மனதில் , இதமாக இம்சைப்பவனே !
வெண்மையான மனதிலே காதல் வண்ணங்களை தெளிப்பவனே !
குடும்ப காவலர்களை கண்னர்த்தி,என் இதயத்தை களவாடியவனே !
களவு போன இதயம், இருக்கும் இடமறிந்தும் ,
மீட்டெடுக்க முயலாமல் என்னை மதி மயக்கியவனே !
காணாத பல கனவை கண்ணுக்குள் நுழைத்தவனே !
உணராத உணர்ச்சிகளை உடலெங்கும் உண்டாக்கியவனே !
உண்மையான பாசங்களை, பாசாங்காய் எனக்கு உருமாற்றியவனே !
நட்பு எனும் வைரஸ்சை என்னுள் செலுத்தி,
எனக்கு காதல் நோயை கொடுத்தவனே! என்னவனே !!! - பாலா

கடிகாரமும் புலம்புகிறது ( இந்திய அரசியல்வாதிகளால் )


கடிகாரமே ! உனக்கு பாராபட்சம் ! என் இந்திய அரசியல்வாதிகள் மீது ,
சரியான நேரத்தை கட்டுவதில்லை !, உன்னால் தான்
நாங்கள் காலம் தவறி அனைவரையும் காக்க வைக்கிறோம் .
நேரம் தவறி தவறி எம்மக்களை வாட்டி வதைக்கிறோம் .
எங்கள் தவறுக்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டும் .
கடிகார உள்மனசு பேசுகிறது . இந்த முறை உங்கள் தவறுகளுக்கு
பொறுப்பேற்க ஆள் கிடைக்க வில்லையோ !!!