என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 26, 2013

ஆழிப் பேரலை
ஆழிப் பேரலை
நினைத்தால் நெஞ்சம் பதறுது .....
இமைகள் மூடினால் கண்முன்னே தெறிக்குது
காட்சிகள் எல்லாம் உதறல் எடுக்குது ,
உன்கரையில் கால்நனைக்க
கால்கள் கூட மறுக்குது....
அன்னையாக உன்னை நினைத்து
உன் மடிதனில் உறங்க சென்றது
தவறென்று பின்னால்தான் புரிந்தது
அதற்குள்ளே உன் பசிக்கு, பல ஆயிரம்
உயிர்கள் உன் உடலுக்குள்ளே சென்றது
தாய் என்று உனை நினைத்தோம்,
நீ மட்டும் ஏனோ பேயாகி போனாய் ..
நீ உண்ட எம் உறவுகளின் உறவு
இல்லாமல் இன்று ஒன்பதாண்டு ஆனது
துக்கத்தில் நாங்கள் இங்கே ......
மறந்து தூக்கத்தில் நீயோ ஆழ்ந்து போனாய் ...
அவ்வபோது கால் உதறி, சோம்பலையும் முறிப்பது ..
நன்றோ.. உன்செயல் ............
சபிக்கும்மடி உன்செயலை,
என் தலைமுறைகள் உள்ளவரை ...........
- துக்கத்தின் துடிப்பிலே பாலா

Saturday, June 22, 2013

உன்னை கண்ட பின்னே !

வரம் வேண்டி தவம்மிருந்தேன் ,
அன்பு , காதல், மோகம் , காமம் எதுவேண்டும்
கடவுள் வினா எழுப்பினார் வரம் கொடுக்க ,
அன்பான காதலோட மோகம் கொண்ட
காமம் வேண்டும் என்றேன் பெண்ணே !
உன்னை கண்ட பின்னே !
கடவுள் யோசித்து விட்டு ,
கொடுத்தேன் வரம் என்று,
மொத்தமாய் உன்னை எனக்கு
 சுட்டி கொடுத்தான் என்னவளே !
- கவிதை பூக்கள் பாலா

Thursday, April 11, 2013

 என்கண்களும் அழகானது !!

 ஆள்காட்டிய விரலாய் உருமாறி  என்கண்கள் !,
என்னவளை எனக்கு சுட்டிகாட்டிய  நொடிபொழுது முதல்,
என்கண்களும் அழகானது  .........

- கவிதை பூக்கள் பாலா 

Wednesday, March 20, 2013

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!

தீயின் பிள்ளைகள் நாங்கள்...!
வெடித்துச் சிதறும் ஒவ்வொரு கங்கிலும்...
ஓராயிரம் தீச்சுவாளைகள் உருவாகும்...!!

தகப்பனுக்கு முன்பு நிர்வாணமாக பெண்பிள்ளைகளும்...
பெற்ற பிள்ளைகளுக்கு முன்பு நிர்வாணமாக தாய்களையும்...
நடந்து வந்து சரணடையச் சொன்ன இலங்கை நட்பு நாடா?

ஏய் காங்கிரஸ்-ஸே ஒன்றைப்புரிந்து கொள்... உலகை உலுக்கிய ஹிட்லரையும் இந்த காலம் கெட்டவன் என்று தான் கிரகித்து வைத்து இருக்கின்றது.

மானுட வரலாற்றிலே மண்ணிக்க இயலாத தவறிழைக்க ராசபக்சேவுக்கு உதவிய நீங்கள் வீழும் காலம் விரைவில் வரும்....!

நெஞ்சை உறைய வைக்கும் இது போன்ற படங்களைப்பார்தபின்னும் தி.மு.க வின் தலைமைக்கு எதுவும் வரவேண்டாம்... கோகுல் போன்ற இளைஞர்களுக்குமா எதுவும் வரவில்லை...

அய்யகோ... பேருந்துப்பயணத்தின் போது பாதிக்கப்படுவர்களுக்காககூட நெஞ்சு கனத்து கண்ணீர் வடிக்கும் தமிழா... நம் ரத்த சொந்தங்களுக்கு ஈழத்தில் நடத்ததைப் பார்த்த பின்புமா அமைதி. காக்கின்றாய்?

காங்கிரஸ்ஸையும் அதன் கூட்டணிகளையும் தமிழகத்தில் வேரருப்போம்...!

Tuesday, March 5, 2013

உன் விழிகள்


என் விழிகளின் நாட்டியதையும் ,
உதட்டசைவையும் , இதய துடிபையும் கூட ,
வார்த்தைகளாய்  வடிக்கும் உன் விழிகள்
என்ன கவிஞ்சனா  !.........

கவிதை பூக்கள் பாலா

என் உதடுகள்

உன் இதழ்கள் வடிக்கும் ,
வியர்வை துளிகளை
துடைக்கும் கர்சிப் தானோ !
என் உதடுகள் !!!.........

கவிதை பூக்கள் பாலா 

Monday, March 4, 2013

வெடித்திடுமோ இதயம் !


என்றும் நானிருப்பேன் உன்னுடனே !
என்னுரும்,வாழ்வும்  நீதானே !
 என்றவள், இன்று   !
அவன் தான் என் காதலன் ,
என்னை தாங்க பிறந்தவனும், 
என்னுரிரும், சந்தோசமும்  அவன்தானே !
என்றேதான் என்னிடம் வினவுகிறவளே !
என்னை கொன்றுவிட்டு போ,
என் அன்பை , உணர்வை கொன்றுவிடதே !
இது கொடுமையன்றோ என்னவளே !
இதற்கு வெட்டி கூரிட்டிருகலாம் என் இதயத்தை !
நீ செய்யா விட்டாலும் உன் வார்த்தைகள்
அதை முடிதிடுகின்றது தினம் தினம் ,
 இரும்பால் அரண்  அமைத்தாலும்
வெடித்து  சிதரிடுமோ என் இதயம்  ..........

 -கவிதை பூக்கள் பாலா 
இதழோடு தஞ்சமானேனடி

என் விழிகள் பேசிடும் வார்த்தைகளுக்கு
உன் சிறுபுன்னகை சொல்லிடும் பதிலுரையில்
என் உதடுகள் செய்யும் சேட்டைகளினால் 
உன் கன்னத்தில் பாயும் ரத்த நாணல்களால்
மயங்கி உன் இதழோடு  தஞ்சமானேனடி ........

- கவிதை பூக்கள் பாலா


Wednesday, February 13, 2013


உலக காதலர்கள் அனைவருக்கும் காதலர்
தின வாழ்த்துக்கள்...காதல்
......
உலகம் முழக்க ஒற்றை சொல்
ஒலிக்கும் விதங்கள் வேறாகலாம்,
ஆனால் உணர்வுகள் ஒன்றன்றோ .

விழிகளின் வழியோ !
செவிகளின் வழியோ !
எழுத்தின் வழியோ !
நினைவுகள் வழியோ !
கேட்காமல் வருவது
காதல் ....

றவு என்றோ !
நட்பென்ரோ !
உணர்வென்றோ
உயிர் என்றோ !
வழிதேடி
உள்புகும் காதல் .....

பிடிப்பதை மட்டும் யோசிக்கும்
கண்டதை எல்லாம் யாசிக்கும்
சுயம் மறந்து வாழ்விக்கும்
வாழ்வின் நாட்களை கொன்ழழிக்கும்
உள்ளம் ஏதும் புரியா பூரிக்கும்
வாழ்வின் உச்சம் தொட்டதாக
எண்ணி கொண்டாடும்
வலிகள் இல்ல காதல் இருக்கும் வரை ......

காதல் இனிமையானது .....

- கவிதை பூக்கள் பாலா


தொடுமோ விடியலை

வலிகளின் துடிப்பு கொல்லுமோ  இரவை ,
நீளும் இரவு தொடுமோ விடியலை,
விதியே என்செய்வாய் !
என்று ஏங்கி  தவிக்கும் கண்களின் இமைகள் ................
- கவிதை பூக்கள் பாலா