இதயமே நீ இல்லாமல் போ ..
இரக்கமே நீ தொலைந்து போ ..
சினமே நீ சிதைந்து போ
சுயமே என்னுள் சூம்பி போ
நினைவே நீ அற்றுப்போ ...
அன்பே நீ அனாதையாகிப் போ
பொறுமையே நீ உச்சம் போ..
பண நாயகமான இவ்வுலகில்
இப்படியாய் மாறவில்லை எனில்
இனிபயணிப்பது கடினமே !.......
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment