விவரமறிய உலகினுள் விரும்பியா
அன்னையின் கருவிலே அவதரித்தோம்,
சுமைகளிலலா குழந்தைப்பருவம்,
கூடி ஆடியப்பள்ளிப்பருவம்
குழைந்து நெளிந்த விடலைப்பருவம்,
காதல் பிடிக்கும் கபடப்(வாலிப)பருவம்,
கழுததை கொடுக்கும் கல்யாணப்பருவம்,
கடமையாற்றும் காக்கும்(பெற்றோர்)பருவம்,
களைத்தொதுங்கும் கடைசிப்பருவம்,
மறுக்கமுடியா பருவ மாற்றங்கள்,
பதறியழும் மனிதபிறவிகள்....
இறந்தபினும் உலகம் தேடும்
அதிசியமான மனிதபிறவி..
ஏற்றுக்கொள்ளா வாழ்க்கை முறைகள்,
இன்னும் விடையறியா மனிதமுகங்கள் !!!!
No comments:
Post a Comment