என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, November 14, 2014

கடுகானாலும் வானம் கடந்து நிற்கும்

பிடித்தவரை இடறி நின்று
சாதித்து சிகரம் தொட்டாலும்
மனம் ஏனோ முழுமையடைவதில்லை ....
வெற்றி இனிப்பதில்லை
வெற்றிடமாய் காணும்
திசை எல்லாம் ...
சிறிய புன்முறுவல் ,
சின்னதாய் முகமலர்ச்சி
காணத்துடிக்கும் நெடிப்பொழுதும்
மரணத்தையே தோற்கடிக்கும்
வலி குடல் கவ்வும் ,
இதயம் சுடுகாடாய் எரியும்
கைதட்டல்கள்
கடைசி இசையாய்
காது நுகரும்
வாழ்த்துக்கள் ஒப்பாரியாய்
ஓநாயாய் ஓலமிடும்....

இதயம்தொட்டவர்  கரம் பற்றி
 வெற்றிக் கனி
பறிக்கும் நிமிடம்
கடுகானாலும் 
வானம்  கடந்து நிற்கும்
 இன்பம் இமயம் தொடும் ....

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment