என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, October 24, 2014

மரபுக் கவிதைகளாய் ஒளி பரவட்டும் ....

ன்பின் உறவாள் சுமக்கும் கருவிலும்
இனம் காணா ஒளி பரவட்டும் .......
குழந்தையின் அடையாள பெயரிலும்
அந்நியன் வார்த்தை சூட்டி தமிழை இகழா ஒளி பரவட்டும் .......
அழகையும் ஆடம்பரதையும் உட்கொண்டு சிசுவின்
உயிமையான தாய்ப்பால் மறுக்கா ஒளி பரவட்டும் .......
கல்வியைச் சுமையாக்கி குழந்தையை
பொதிச்சுமக்கும் விலங்காக்கிடா ஒளி பரவட்டும் .......
தாய்மொழி மறத்திட்டு, அந்நியன் மொழித் திணித்து
ஆராதிக்கும் மனப்பாங்கை மாற்றும் ஒளி பரவட்டும் .......
சிந்தனையை முடமாக்கி, புத்தகத்தை பிரதி எடுக்கும்
கல்விமுறை மாற்றத்தை  நோக்கி ஒளி பரவட்டும் .......
பருவத்தின் மாற்றங்கள் உண்டாக்கும் பாலின ஈர்ப்புகளை,
காதலென்று நினைக்கா பாலியல் கல்வி ஒளி பரவட்டும் .......
முதலாளிகளின் கூலிகளாக்கும் கல்விமுறையை
தூக்கியெரியும்  சமூக விழிப்பு ஒளி பரவட்டும் .......
 அன்பின் ஆழமறிந்து, காமம் எல்லையுணர்ந்து
வாழ்க்கை முறையறிந்து வாழும் ஒளி பரவட்டும் .......
குடும்ப உறவுகளுக்குள், சமூக நலன்களுக்குள்
நாட்டின் பற்றின் மேல் ஒளி பரவட்டும் .......
இன மதங்களின்  வன்மங்கள் குறைய
ஒரே கடவுள், அது அன்பே ! என்ற ஒளி பரவட்டும் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாக எண்ணா 
ஒளி பரவட்டும் .......
மனித மாண்புகளை மதிக்கும்
இரக்கம்  இதயத்தில் மலர ஒளி பரவட்டும் .......
தீவிரவாதத்தை திராணி இல்லாமலாக்கும்
அகிம்சை என்னும் ஒளி பரவட்டும் .......
எழுத்துக்களில் துணிவு, கருத்தில் தெளிவு ,
புரிதலோடு விவாதம் செய்யும் ஒளி பரவட்டும் .......
தமிழில் பிழையின்றி, இலக்கண நன்கறிந்து ,
தமிழின் அழகறிந்து, படைப்புகளை எழுதும்
தமிழ்பேரரிஞ்சர்களின் புகழ் ஒளி பரவட்டும் .......
பேச்சு தமிழில்  ஆர்வ கோளாரில் அரைகுறையாய் கிறுக்கும்
என்போன்றோருக்கு  அறிவு வளர ஒளி பரவட்டும் .......
 
 தமிழை முறையாய் இலக்கண மரபு
பயின்று மரபுக் கவிதை எழுதி , சான்றோரின் பரிசீலனைக்கு
பிறகு அச்சு பூக்களை தொடுத்து மாலையாக்கி
தமிழன்னைக்கு மாலைச் சூட புத்தக வடிவிலே வடித்தெடுத்து
 உங்களின் எண்ண விழிகள் வியக்கும் வண்ணம்
வார்த்தை வார்த்தெடுக்கப் பட்டு,
மரபுக் கவிதைகளாய்  ஒளி பரவட்டும் .......என்னும்
தன் இரண்டாம் படைப்பாய்
தோழி. கவிஞர் நளினி முத்து
தமிழன்னைக்கு படைத்திருக்கிறார்.
விரைவில் உங்கள் பார்வைக்கு,
உங்கள் பேராதரவை எதிர்நோக்கி..........
உங்கள் ஆதரவு  வரவேற்பு   ஒலி பரவட்டும் .......

- நட்புடன் கவிதை பூக்கள் பாலா
ஒளி பரவட்டும் புத்தக வெளியீடு விரைவில் என்ற ஒலி பரவட்டும்


No comments:

Post a Comment