Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Tuesday, December 28, 2010
ஒரு வரி கவிதைகள் ...... ( கொஞ்சம் தைரியம் தான் )
வரதச்சணை ....
வாழ்க்கையில் பெண் , திருமண (தாம்பத்திய) பயணம் செல்ல ..
பெற்றோர்கள் செலுத்தும் பயண காப்பீட்டு கட்டணம் தானோ !!!...
மின்சாரம்
தொட்டவனை எதிர்கொண்டு தாக்கும் பலசாலி
ஓங்கி அடித்தாலும் உருவம் காட்ட உளவாளி .
கலப்படம்
சுத்த தங்கம் அணிகலன் ஆகாது ..
கற்பனை இல்ல கவிதை மெருகேறாது....
உறவுகள்
உயிரினங்கள் தங்களுக்குள் வரைந்துகொள்ளும்
கட்டுப்பட்டு எல்லைக்கோட்டின் பெயர்கள்
ரோஜா கேட்கிறது ...
காதலை தூக்கி எறியும் பெண்ணே !
என்னை ஏன் கால்கொண்டு மிதித்தாய் ...
நான் தூது வந்த தூதுவன் அல்லவா !!!..
மரியாதை
தலையில் இருக்கும் வரையே முடிக்கு மதிப்பு ..
உயிர் உள்ளவரையே உடலுக்கும் மதிப்பு !!
பாதணிகள்
சுமந்து சுமந்து சுருங்கி போகும் (தேய்ந்து )
சுமை தொழிலாளிகள் ......
பாட்டல் ( தமிழில் தெரியவில்லை, மன்னிக்கவும் )
தனக்குள் அடைத்து வைக்கும் சர்வதிகாரி ....
தண்ணீர்
மனித எந்திரங்கள் இயங்க
இயற்கை அளித்த எரிபொருள் தானோ !.
மின்மினி பூச்சி
வான் வெளியின் எச்சரிக்கை விளக்குகள் ..
எதுக்கும் எச்சரிக்கை இருக்கும் - பாலா
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by a blog administrator.
ReplyDelete//பாட்டல் ( தமிழில் தெரியவில்லை, மன்னிக்கவும் )
ReplyDeleteதனக்குள் அடைத்து வைக்கும் சர்வதிகாரி //
அப்படியானால், உடல், உயிரை அடைத்து வைக்கும் சர்வாதிகாரியா தல!?
வாங்க வால் அருண் எதுக்கு சப்பகட்டு கட்டனும் இன்னைக்கு பெத்தவங்க எதுக்கு குடுக்கறாங்க , பெண்ணோட வாழ்க்கை நல்ல இருக்கும் என்று நினைச்சி தான் ( ஓரளவுக்கு பணம் உள்ளவங்க மட்டும் ), நான் வரதட்சணை ஆதரிப்பவனல்ல , எனக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்கு தெரியும் அதே நேரம் நீங்க வேண்டான்னு சொல்லி பாருங்க அருண் ( நீங்க வாங்கலன்னு நினைக்கிறேன் ) .
ReplyDeleteஉடன் பிறந்தவர்கள் ( சகோதரிகள் ) இருந்தால் கொஞ்சம் யோசிச்சி பாருங்க கொடுக்காம இருக்க முடியல இன்றைய காலகட்டம். எதார்த்தம் மீறி வாழ்வது வால் மாதிரி கொஞ்சம் பேர் இருக்காங்க காலத்தின் கட்டாயத்தில் ........... இந்த வரிகள் வரதட்சணை ஆதரித்து எழுதியது அல்ல .... என்பதை தெளிவு படுத்திவிடுகிறேன் ..
இப்படி எல்லாம் கேள்வி கேட்ட, என்னத எழதுறது வால் .....அண்ணே .... இருந்தாலும் பிளாக் எழதுறதுல என்னகெல்லாம் முன்னோடி ,,,,,, இப்படி எல்லாம் கேள்வி கேக்கபடாது வால் அண்ணே..... இன்னும் மாறலையே அதே நக்கல் நையாண்டி தூள் கிளப்புங்க அடைச்சி வைக்கறதே சர்வதிகாரி என்ற அர்த்தத்தில் எழதியது வால் அண்ணே ......
ReplyDeleteவால் அருண் விமர்சனங்களுக்கு நன்றி அப்பப்ப வாங்க கொஞ்சம் கலாச்சிட்டு போங்க ..... விவாதம் நல்ல இருக்குமில்ல
ReplyDeleteஎதுக்கு இத்தனை அண்ணே!
ReplyDeleteஇப்படி கலாய்ச்சா விஜய் கிட்ட போட்டு கொடுத்துருவேன்!, ப்ளாக்குல காதல் கவிதைகளா எழுதுறிங்கன்னு!
'' விஜய் கிட்ட போட்டு கொடுத்துருவேன்!, ப்ளாக்குல காதல் கவிதைகளா எழுதுறிங்கன்னு! ''
ReplyDeleteநல்லா சொல்லுங்க, கொஞ்சம் படிக்கவும் சொல்லுங்க வால். விஜய் தான் படிக்க மாட்டேங்கறாரு கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க வால் (அருண் )