என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 30, 2010

சகுனம்
சரித்திரத்தில் இடம் பிடிப்போனையும்,
சகதியில் தள்ளி விடும் சகுனம் ...
பகுத்தறிவை பறைசாற்றும் உதட்டசைவில் ,
ஏனோ ! உள்ளம் வேய்ந்திருக்கும் சகுனம் ...
பன்னாட்டில் உச்சி தொடும் சினிமாவில் ,
இன்றளவும் ஆட்டிப்படைப்பது சகுனம்...
வாழ்வில் தன்னம்பிக்கை அற்றவனின்,
நாவழியே நடனமாடுவதும் சகுனம் .......
கேட்டின் எச்சரிக்கை மணியோசையாய் ,
மதியை மயக்குவதும் சகுனம் ....
சாகச அறிவு சுடர்களையும் ,
அறியாமையில் வீழ்த்துவதும் சகுனம் ...
சாந்தமான மணப்பெண்ணையும்
சவக்குழியில் தள்ளிவிடும் சகுனம் .....
சாதிகள் இல்லையென்று சாதித்தாலும் ,
நாங்கள் நல்ல, கெட்ட சாதிகள் என்பதும் சகுனம் ..
மூடநம்பிக்கையின் முகவரியே சகுனம்
என்றரியாதார் வாழ்வில்,
என்றும் முன்னிற்கும் சகுனம் .......
- பாலா

2 comments:

  1. நல்ல கவிதை... அது சரி, உங்க போட்டோவை எதுக்கு கவிதையோட இணைச்சிருக்கீங்க :))) (சும்மா தமாஷு)

    ReplyDelete
  2. என்னை பார் யோகம் வருன்னு சொல்றங்கலேன்னு தான் , ஏதாவது நடந்ததா உங்களுக்கு ........( ஏதாவது ....)

    ReplyDelete