என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, December 25, 2010

சிதைக்கப்பட்ட காதல்
சிட்டு குருவி சிநேகமாக காதல் குருவியோடு
மார்கழி குளிரில் கூட்டுக்குள்ளே ....
கதகதப்பின் ஊடே காதைக் கடித்தது சிட்டு குருவி ,
மாலை பொழதின் மழை தூரல் நடுவே
நடுங்கியபடி காத்திருந்தேன் உனக்காக ...
அந்நேரம் ஒரு ஜோடி தூரல் உடல் தழவ
கைகோர்த்து விளையாடி மகிழ்திருந்தது,
உடன் நீ இல்லையே என்று நானிருகையில்
முத்தத்தில் மூச்சி வாங்கி , கைகள் இடம் மாறி
கட்டியணைத்து மார்கழியை விரட்டி கொண்டிருந்தது ,
ஏக்கத்தில் நாவரண்டு , விழிகள் உன்னை தேடியது ,,,
மயக்கத்தில் நானிருத வேளையில்
வெவ்வேறு திசையினிலே.......
ஜோடிகள் பிரிந்து நடைபயணம் ....
புரியாமல் நான் முழிக்க ...
பேச்சுக்குரல் கிசுகிசுத்தது
முகபூச்சு களைந்து போச்சி
உண்மையெல்லாம் தெரிந்து போச்சி ...
யாதென்று வினவியே பெண்குருவி குழப்பத்தில் ..
காதலாக கட்டி அனைத்து ....ஆண்குருவி ..
காதலின் இலக்கணம் அறியதோர் அவர்களடி
என் உள்ளக் காதலியே ........
இன்றுலகம் இதைத்தான் காதலென்று
பிதற்றுகிறது நீ தெளிவாயோ என்னவளே !...........
- பாலா

3 comments:

 1. இன்றுலகம் இதைத்தான் காதலென்று
  பிதற்றுகிறது நீ தெளிவாயோ
  என்னவளே !...........


  very good.

  ReplyDelete
 2. அருமையான கவிதை...

  ReplyDelete
 3. நிலாமதி & பிரஷா :
  நன்றி உங்கள் வருகைக்கும் & வாழ்த்துக்களுக்கும்

  ReplyDelete