என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, October 28, 2010

விதைமண்ணிட்டு என்னை புதைத்து விட்டனர்,
உயிர்ப்பெற்று மண்ணில் செடியாய் பிறந்து விட்டேன்.
வளர்ந்து மரமாகவும் உருப்பெற்றேன்,
பூக்களை சுமந்து கன்னியானேன்.
மன்மத வண்டுகளோடு காதலும் கொண்டேன்,
பிள்ளைகளாய் காய்களை பெற்றெடுத்தேன்.
(மனித )கயவர்கள் வந்து பறித்தபோது தவித்துபோனேன்,
மீண்டும் மீண்டும் பெற்றெடுத்தேன் .
பறித்து எனை வெறுமையாக்கினர்,
பசுமை மறைந்து கருத்துபோனேன்.
தனித்து முதுமையில் தளர்ந்துப் போனேன்,
நினைத்து தினமும் வாடிப்போனேன்.
பார்த்து பதரிய கயமை உலகம்
கொன்று என்னை கூறு போட்டது .......
- பாலா

No comments:

Post a Comment