என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, February 2, 2011

கொலை பொருள் அறியவே அவா..





















முச்சந்தியில நிக்கவச்சி ,
கழுத்துக்கு கலர் கலரா மலையெல்லாம் போட்ட மனிதா !
கவுரவமுன்னு பதிலுக்கு தலையாட்டி நின்னபோது ,
என் தலை மட்டும் தரையில தனியா !
ஒன்று மட்டுமே புரியவில்லை ,
என் முச்சந்தி கொலை எதற்கு ?
என் தவறால் யார் கற்பும் பறிபோனதோ !,
இல்லை கொலை குற்றம் செய்தேனோ !,
கொள்ளை கொள்ளையாய் அடித்தேனோ !
தீர்ப்பு எழுதாமலே கொடும் தண்டனையா ?
சாவிற்கு பயப்படேன் மனிதா !
கொலையின் பொருள் அறியவே அவா !!
சாமிக்கு பலியிட்ட ஆட்டின் ஆன்மா !
-- கவிதை பூக்கள் பாலா .

குறிப்பு : இதே மாதிரிதான் சில மனிதனின் ஆன்மாவிற்கும் சந்தேகம் கொலைபொருள் விளங்காமலே இன்றைய நிலையில் மாண்டு போகின்றது தீவிரவாதம் என்ற பெயராலே .....
...

8 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க...நான் இரண்டு முறை இந்த மாதிரி கோவில் திருவிழாவில் ஆட்டை அறுப்பது பார்த்து கலங்கியிருக்கிரேன்...

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை.
    ஆட்டின் ஆன்மா எழுப்பும்
    கேள்வியும் நியாயமானதே
    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Philosophy Prabhakaran @
    நன்றி நண்பா , நான் அசைவை சாப்பிடுவதையே விட்டு விட்டேன் .கடந்த ஆறு வருடங்களாக. ஆட்டின் கொலையை நேரில் பார்த்ததின் விளைவு தான்

    ReplyDelete
  4. Ramani sir,
    நன்றி, உங்களின் தொடரும் கருத்துகளுக்கு , மீண்டும் நன்றி

    ReplyDelete
  5. !பாலா சார் நீங்க கவிதை சூப்பர்..நான் ரசித்த வரிகள்
    சாவிற்கு பயப்படேன் மனிதா !
    கொலையின் பொருள் அறியவே அவா !!
    சாமிக்கு பலியிட்ட ஆட்டின் ஆன்மா

    ReplyDelete
  6. ரேவா @
    உங்கள் வருகைக்கும் , வாழ்த்திற்கும் நன்றி

    ReplyDelete
  7. அவர் ஆடல்ல. இந்திய வாக்காளர்.

    ReplyDelete
  8. இராஜராஜேஸ்வரி @
    என் தோட்டத்து பூக்களை பார்வையிட்டு வாழ்த்தியதற்கு
    நன்றி , "ஆடல்ல. இந்திய வாக்காளர்"
    முழுக்க உண்மை தோழியே

    ReplyDelete