என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, January 6, 2011

விண்னை தொடும் நம் காதல் .......உன்
விழிகளுக்கு,
எனை சுட்டெரிக்க பணித்த தேவதையே !
உன்னுடன் பிரிவில்லா உறவாடும்,
உன் உறவுகளிடம் வினவிப்பார் !

ன் கூந்தலில் குடி இருக்கும்
ரோஜாவை கேட்டு பார் ! ,
என் புன்னகையின் வலி புரியும்.

தோடுகளிடம் கேள்வி தொடுத்து பார் !,
உனை தொடரும் என்னிலையை,
தொடர்கதையாய் சொல்லும் .

ன் தோல் தழுவும் துப்பட்டாவை
முறுக்காமல் விட்டுப்பார் !,
தாவி எனை தழுவிக்கொள்ளும் .

ன் கால் தடங்களிடம்
உளவுச்செய்தி உளற சொல்லிப்பார் !,
உனை பல காலம் பின்தொடரும்
உளவாளி நான் என்று எச்சரிக்கும்.

ன் சுவாச காற்றிடமும்
கனிவாய் கதைத்து பார் !,
எனை கடக்கும் நேரம் அதன்
உடல்சுடும் உண்மையை உரைக்கும்.

நீ வடிக்கும் வியர்வையை
விரைவாக கேட்டு பார் !,
தீர்த்தமாய் என் தலை சுமைக்கும்
பக்தியை பறைசாற்றும் .

நீ கடக்கும் பாதையை
என் வாழ்க்கை வீதியாக்கிய காதல் ,
உன் இதயத்தில் சமாதி ஆகும் முன் ,
உன் காதலுக்கு விடுதலை கொடு ,
விரைவில்
விண்னை தொடும் நம் காதல் ............
கவிதை பூக்கள் பாலா

என் காதலுக்கு(கவிதைக்கு) வாழ்த்து சொல்லிட்டு போங்களேன் ....
என் கவிதைகள் தலை வணங்கி ஏற்கும்....

4 comments:

 1. ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க... போட்டோவில் இருப்பது நீங்களும் உங்க காதலியுமா...?

  ReplyDelete
 2. @ Philosophy Prabhakaran :
  நன்றி நண்பா ரசிச்சாதான் கவிதை வரும், நீங்க சொல்றா மாதிரி கூட இருக்குமோ போட்டோ தான் ஹி ஹி ஹி ........

  ReplyDelete
 3. Such a Excellent Kavithai BOss... Keep Rock...

  ReplyDelete