என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, February 10, 2011

தொடர்வண்டியில் துடித்த இதயம் ......
கண்ணிற்கு கடைசி முனை காட்டும்
நெரிசலற்ற தொடர்வண்டி நிறுத்தம்.
தொடரந்து சென்ற என் பார்வை சில்லிட்டு சிலிர்த்தது.
துள்ளிச் செல்லும் புள்ளிமானா ,
சுடிதார் சுமந்த சுவர் சித்திரமா !,,
திகைத்து நின்றது எனது கண்கள்.
பறந்து செல்லும் தொடர்வண்டியில்
பயணிக்க நினைக்கையில்
பாவை அவள் இடைமறித்தால் தன் அழகுக்கொண்டு .
ஆட்டம் கண்ட சுயநினைவு,
சுற்றித்திரிந்தது நிழலாக அவள் நினைவாக....

ஒயிலாக நடைபோட்டு
ஒட்டியாணம் அணியா இடையசைத்து
ஒய்யாரமாய் வண்டிக்குள் வந்தமர்ந்தாள்.
வண்டியின் அறைக்குள்,
அவள் பார்வைகள் பரிமாறும் இடம் தேடி அமர்ந்து,
என் உடல்களும் உதவின நண்பனாய்.

சிறுவயது நண்பர்களோடு தொடர்வண்டி ஓட்டிய
நினைவுகள் வந்து செல்ல,
தொடர்வண்டி தன் பயணத்தை தொண்டையை கணித்துக் கொண்டே தொடங்கியது ....
சித்திரத்தின் சிறப்பு கருதி,
இறுதி வடிவம் தீட்டும் ஓவியனாய்,
ஆடைகளை சரிசெய்தால் சிற்றிடையாள்.
சீறிப்பாய்ந்த காற்றும், அவள் தேகம் பட்டு தென்றலாய் கவி படித்தது ஏனோ !. ஐவிரல்கள் துணைக்கொண்டு,
மென்மையாய் வருடி தூங்க வைத்தாள் முடியிழைகளை.
----- தொடரும் ..
- கவிதை பூக்கள் பாலா ...
குறிப்பு : கவிதை தனமா எழுத முயச்சிக்கின்றேன் .........குற்றம் குறையைசுட்டவும் , ஓகே என்றால் கொஞ்சமா கொட்டவும் வாங்கிக்கிறேன்.......

2 comments:

 1. கண்ணிற்கு கடைசி முனை காட்டும்
  நெரிசலற்ற தொடர்வண்டி நிறுத்தம்.//
  தொடக்க வரிகளும், தொடரும் வரிகளும் அருமை.
  தொடரக் காத்திருக்கிறோம்!!

  ReplyDelete
 2. இராஜராஜேஸ்வரி @
  உங்கள் வருகைக்கும் , கருத்து சொல்லி ஆதருவு நல்கியதர்க்கும் நன்றிகள் பல ......

  ReplyDelete