என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, February 3, 2011

உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !


நட்புக்கு
பொருள் விளங்க நாம் இருவர் ,
என்றேதான் சொல்லி வந்த உறவுக் கூட்டம்,
எதற்கு இந்த நட்பு இப்போ,
விட்டு தொலையேன் உறவுகள் சாடல் .

வாழ்க்கை சக்கரத்தை திருப்பி சுற்றி
கண்ணயர்ந்த வேளையிலே
நம் நட்பு பாதை திரைப் படமாய்,
நினைவுத் திரையில் ,
நொறுக்கு தீனி , விளையாட்டு மட்டுமே
பெரிதாய் தெரிந்த பள்ளிப் பருவம்.
நான் வரவில்லை என்றால் ரிக்சாவில்
கூட அமர மறுத்த நல்ல தோழனாய் ,
என் காச்சலுக்காக நொறுக்கு தீனியை
மறந்து உபவாசம் இருந்த உற்றதோழனாய் ,
நம் நட்பை கண்டு உள்ளம் பூரித்த,
நம் உறவு கூட்டம் .

வீட்டில் அடம் பிடித்து ,
சேர்ந்தெழுதிய நுழைவு தேர்வு ,
என் மதிப்பெண்ணுக்கும் நீ ஒருவனாய்
செலுத்திய கடவுள் நேர்த்திகடன்.
உறவுகளின் சிறு சந்தேக கண்ணோடே
கடந்து சென்ற நம் கல்லூரி வாழ்க்கை ...

இன்ப துன்பம் சேர்ந்தே இருந்த
நம் நட்பின் ஊடே ,
சிறு சலனமும் கண்டதில்லை
இதுநாள் வரையில் ...
நம் நட்பின் எல்லை நாமறிவோம்
வாலிப கண்ணியம் காத்தே .....
நல் வாழ்க்கை துணையோடு, நாம்
பயணிக்கின்றோம் இல்வாழ்க்கை பயணம் ,

கண்ணில் சுடுநீர் கசிய
நீ சொல்லிய வார்த்தை(வாழ்க்கை) யதார்த்தம் ...
"உன்னவனுக்கு உன்மீது நம்பிக்கை அதிகம்,
அதனால் என்மீது வருத்தம் .
என்னவளுக்கு என்மீது காதல் அதிகம் ,
அதனால் உன் மீது வருத்தம் (கோவம்) .
நம் நட்பிக்கு நம்மீது நம்பிக்கை அதிகம்
அதனால் நம் நட்பை குறைத்து கொள்ளலாம் .
உன்வாழ்க்கை நலமாய் இருக்கும் ."
என்னை உருக்குலைத்த வார்த்தைகள் தோழா !

இப்போதும் நம் நட்பே வென்றதடா என் தோழா !
என்வாழ்க்கை நலமாய் இருக்கும் என்றாயே !
நட்பு ,
நட்பை வாழவைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கும்.......
மேலும் உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !

- கவிதை பூக்கள் பாலா
...

2 comments:

 1. கண்ணில் சுடுநீர் கசிய
  நீ சொல்லிய வார்த்தை(வாழ்க்கை) யதார்த்தம் ...
  "உன்னவனுக்கு உன்மீது நம்பிக்கை அதிகம்,
  அதனால் என்மீது வருத்தம் .
  என்னவளுக்கு என்மீது காதல் அதிகம் ,
  அதனால் உன் மீது வருத்தம் (கோவம்) .
  நம் நட்பிக்கு நம்மீது நம்பிக்கை அதிகம்
  அதனால் நம் நட்பை குறைத்து கொள்ளலாம் .
  உன்வாழ்க்கை நலமாய் இருக்கும் ."
  என்னை உருக்குலைத்த வார்த்தைகள் தோழா !

  சூப்பர் பாலா...இந்த வரிகள் என் வாழ்க்கையிலும் பிரதிபளிச்சிருக்கு...எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ரேவா @
  வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி தோழியே , கவிதை பதிவிடுபொழுது ஒரு எழுத்துக்களும் , பின் அது மாறியும் விடுகின்றது , அல்லது எழுது வேகத்தில் மொழிபெயர்க்கும் போதும் தவறான வார்த்தையாக மாறி விடுகின்றது . தினமும் மறுபடியும் படிக்கும் போதே தவறுகள் தெரிகின்றது அதற்குபிறகு சரி செய்கின்றேன் .
  கவிதை எழுதும் போதே மன இறுக்கம் கொண்டது . ஏனோ தெரிய வில்லை . காரணம் என் வாழ்வில் நடைபெறவில்லை . நட்பு என்ற ஒற்றை வரியாக இருக்குமோ என்று தோனியது, உங்களுக்கும் சேர்ந்தே மனவருத்தம் கொள்கின்றது.

  ReplyDelete