என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, September 18, 2010

அந்த யாரினில் நானிருபேனா !இரத்தம் தோய்ந்த உன் உதடுகளின்
நித்தம் ஒரு கவிதை படிக்க ஆசை ,
உன் கண்சிமிட்டும் கரு விழியில் ,
எனை கண்டெடுக்க ஆசை ,
உன் விரல்களோடு நடனமாடும் கூந்தலிலே தென்றலாக குடியிருக்க ஆசை,
உந்தன் செவிகளில் ஊஞ்சலாடும்
தோடுகளாக நானிருக்க ஆசை ,
உன் முன்னழகின் மயக்கத்திலே
என் மதியிழக்காமல் காதலிக்கவே ஆசை ,
மலைகளின் வளை போன்ற இடையினிலே
குழந்தையாய் அமர்திருக்க ஆசை ,
உன் வருகையை பறை சற்றும் கொலுசோசை
இசைதனில் லையத்திருக்க ஆசை ,
உன் பூம்பாதம் தாங்கிகொள்ளும்
மலராக என்றும் நானிருக்க ஆசை ,
உன் தேகத்தின் அழகுதனை அருளிய
பிரமனுக்கு நன்றி சொல்லவே ஆசை ,
உனக்கு யார்மீது ஆசை நானறியேன் பெண்ணே !,
இருந்தாலும் ,அந்த யாரினில் நானிருபேனா !
அறிந்து கொள்ள உனை பின்தொடரவே ஆசை .

2 comments:

 1. உங்களுக்குள் இப்படி ஒரு கவிஞரா, சொல்லவேயில்லையே தல!

  ReplyDelete
 2. வால் எதற்கு இந்த சந்தேகம் நான்
  எழுது கவிதைகளை விட கற்பனையில் ( கனவினில் ) எழதி
  மறந்தவை அதிகம்
  என்ன எனக்கு மட்டும் விதிவிலக்கு
  தவறு ஏதும் இல்லையே
  ரொம்ப டேமேஜ் ஆக்கிடாதிங்க வால் ( அருண் )
  எழுதியதை எழதுவதை பதிய
  நேரம் கிடைக்க வில்லை
  மிக்க நன்றி உங்கள் வருகைக்கு
  உங்களை விட ( என்னத்த நான் அதிகம்
  சொல்லிட போறேன்( காமத்தை ) )
  சரி தானே !!!!!!!!!

  ReplyDelete