என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, September 1, 2010

என்னவனே !!!

என்னுள் நாணத்தை விதைத்தவனே !
மயக்கும் விழி காட்டி , என் நினைவை தொலைத்தவனே !
ஈர்க்கும் பேச்சழகில் என் இதயத்தை வருடுபவனே !
என் இளகிய மனதில் , இதமாக இம்சைப்பவனே !
வெண்மையான மனதிலே காதல் வண்ணங்களை தெளிப்பவனே !
குடும்ப காவலர்களை கண்னர்த்தி,என் இதயத்தை களவாடியவனே !
களவு போன இதயம், இருக்கும் இடமறிந்தும் ,
மீட்டெடுக்க முயலாமல் என்னை மதி மயக்கியவனே !
காணாத பல கனவை கண்ணுக்குள் நுழைத்தவனே !
உணராத உணர்ச்சிகளை உடலெங்கும் உண்டாக்கியவனே !
உண்மையான பாசங்களை, பாசாங்காய் எனக்கு உருமாற்றியவனே !
நட்பு எனும் வைரஸ்சை என்னுள் செலுத்தி,
எனக்கு காதல் நோயை கொடுத்தவனே! என்னவனே !!! - பாலா

2 comments:

  1. உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. philosophy prabhakaran
    மிக்க நன்றி நண்பரே !
    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்

    ReplyDelete