என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, May 6, 2011

இன்னும் எத்தனை காலம்தான்..


வார்த்தைகள் வரவில்லை ,
வாக்கியங்கள் தொடுக்க முடியவில்லை ,
நம்மை சுற்றி ,
நாய்களும் , நரிகளும்,
மனித முகம்வேய்த்த ஓநாய்களுமே!
ஏமாறும் நொடி நோக்கி வளம் வருகின்றன ,
பூமி பிளக்கும் இயற்கையும் ,
வானை பிளக்கும் செயற்கையும் ,
கூறுபோடும் கொலைக்கலமான பூமி பந்து .
எல்லை தாண்டி செல்லும் பந்தாக என்று
மாறுமோ -அன்று
ஆனந்த படவோ , வருத்தப்படவோ ,
நாம் இருக்க போவதுமில்லை .
தெரிந்தும் ஏன் இந்த கொடுமைகள் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாகவும் சித்தரிக்கும் (எத்தளிக்கும் )
கொடுமைகள் இன்னும் எத்தனை காலம்தான்.........
.............கவிதை பூக்கள் பாலா
.

4 comments:

 1. நம்மை சுற்றி ,
  நாய்களும் , நரிகளும்,
  மனித முகம்வேய்த்த ஓநாய்களுமே!
  ஏமாறும் நொடி நோக்கி வளம் வருகின்றன ,..

  உண்மைதான்...நண்பா மிக அழகான கவிதை....

  ReplyDelete
 2. ரேவா
  நன்றி தோழியே .....

  ReplyDelete
 3. /////வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
  வீழ்பவன் கோமாளியாகவும் சித்தரிக்கும்/////

  உலகத்தை புடம் போடும் அருமையான வரிகள் சகோதரம்...

  ReplyDelete
 4. ♔ம.தி.சுதா♔ @
  நன்றி

  ReplyDelete