என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, April 20, 2011

காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது

பூத்த புது மலராய் புன்னகைக்கும் என்னவளே !
புதிதாய் உன்னுள் வந்த மாற்றம் ஏனோ !
என்னை பற்றி அறிய நீ முடுக்கி விட்ட
உன் ஒற்றர்களின்(தோழிகளின்) சேதி வந்துவிட்டதோ !
நமக்கும் ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்ற ஆனந்தமோ !
காதலுக்குள் கால் பதித்த புதுமையான சுகமோ !
ஒற்றையாய் சுற்றி திரிந்த மனதிற்கு
ஜோடி கிடைத்த இன்பமோ !
காதல் சிறகடிக்கும் காதல் பறவையின்
ஜோடி பறவை நான்தானோ !
ஒன்று மட்டும் நானறிவேன்
என் காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது ....
- கவிதை பூக்கள் பாலா
..

9 comments:

 1. //பூத்த புது மலராய் புன்னகைக்கும் என்னவளே !
  புதிதாய் உன்னுள் வந்த மாற்றம் ஏனோ !//

  மலர் சிரிக்குமா.? இதை கேட்டா கவிஞன் மலரின் விரிந்து அசையும் தோற்றத்தை பெண்ணின் புன்னகைக்கு உவமை படுத்தி இருக்கிறான்னு சொல்லுவாங்க.. ம்ம்.. அது என்ன மாற்றம்.. பாப்போம்..

  ReplyDelete
 2. //என்னை பற்றி அறிய நீ முடுக்கி விட்ட
  உன் ஒற்றர்களின்(தோழிகளின்) சேதி வந்துவிட்டதோ !//

  யு மீன் இன்வஸ்டிகேஷன்.. ஸோ பேட்..

  ReplyDelete
 3. //ஒன்று மட்டும் நானறிவேன்
  என் காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது ....//

  இப்படி எழுதும் போது.. பெண்களை கொச்சை படுத்துவது போல

  //நமக்கும் ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்ற ஆனந்தமோ !//

  இப்படியொரு வரி அவசியமா.?

  ReplyDelete
 4. ஊதுற சங்கை ஊதிட்டேன்.. யாராவது ஆரம்பிக்கலாமே.. போர் அடிக்குது..

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி நண்பரே ! அவசரமா படிச்சீங்களோ ! மறுபடியும் நிதானமா படிக்கவும் . நீங்கள் சொல்லும் எந்த தொனியிலும் நான் எழுதவில்லை காதலனுடைய மன ஓட்டத்தை தான் எதார்த்தமாய் சொல்லி இருக்கிறேன் . கொஞ்சம் பிளாஷ் பேக் போட்டு பாக்கவும் . நன்றி

  ReplyDelete
 6. தம்பி கூர்மதியன்
  //ஒன்று மட்டும் நானறிவேன்
  என் காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது ....//

  இப்படி எழுதும் போது.. பெண்களை கொச்சை படுத்துவது போல

  //நமக்கும் ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்ற ஆனந்தமோ !//

  இப்படியொரு வரி அவசியமா.?

  இதில் கொச்சை படுத்த என்ன இருக்கு .... எல்லாம் இன்றைய எதார்த்தம்
  அதுபோல காதலனுக்கு இருக்கும் மன ஓட்டத்தை கொஞ்சம் காமெடியாகவும் சொல்லலாம் ..

  ReplyDelete
 7. தம்பி கூர்மதியன்
  ""ஊதுற சங்கை ஊதிட்டேன்.. யாராவது ஆரம்பிக்கலாமே.. போர் அடிக்குது""
  நண்பரே இப்படி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க ....... பரட்ட பரட்ட பத்த வச்சிட்டீயே பரட்ட ....இதெப்படி இருக்கு ?

  ReplyDelete
 8. நண்பா, தம்பி கூர்மதியன் சகோ எப்போவும் அப்படித்தான்... நல்லா சங்கு ஊதுவாறு ஹி ஹி...
  கவிதையும், காதலும் அழகாய் இருந்தது...காதல் பறவையின் ஜோடி பறவை நான்தானோ !சூப்பர் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. ரேவா @
  நன்றி தோழியே !

  "நல்லா சங்கு ஊதுவாறு"
  அப்ப கைவசம் தொழில் இருக்கு நண்பருக்கு

  ReplyDelete