தேர்தல் வந்து,
நம்ம வீடு வீடா தேடுது ,
தெரியாத முகமெல்லாம்
நம்முன்னே நாணுது ....
கனங்கொண்ட தலைகளெல்லாம்
இப்ப தலை கீழா நடக்குது ..........
ஆட்டி வச்சா ஆனவமெல்லாம் ,
அடிபட்டது போல் ஆகுது ....
அடங்காம திரிஞ்சதெல்லாம், ஐயோ !
பாவமுன்னு சொல்ல வைக்குது....
நடக்காத கால்களெல்லாம் ,
நடை பயணம் போகுது ........
நடிப்பிலே உச்சம் தொட்டு ,
நாய் நரியெல்லாம் நாடகமும் நடத்துது .....
கொசுக்கூட செல்லாத இடமெல்லாம் ,
கொடிநடையா கால்கள் நடக்குது ......
தேன் சொட்டும் வார்த்தையாலே ,
நம்ம திகைக்கத்தான் வைக்குது ........
பகைவனும் இப்ப உயிர் நண்பன்னு ,
தழுவி ஊரைத்தான் ஏய்க்குது....
இதெல்லாம் அரசியல்ல சகஜமுனு ,
தத்துவமா வாய் கிழியுது ........
உயிரை குடித்த ஊழலெல்லாம்,
உலகெல்லாம் நாருது.......
நாற்றத்தின் நடுவிலேயும் ,
பழிவாங்கல் இதுவென்று ,
நமட்டு சிரிப்பு சிரிக்குது .....
வீழ்ந்த மக்களை எல்லாம் ,
விலை கொடுத்து வாங்குது....
மனம் பொறுக்கா கதரியோரை,
காவல் கொண்டு குடையுது ....
கடமையை சாதனை என்று ,
தம்பட்டம் தான் அடிக்குது ,,,,
அதை கூட செய்யாத சிலது ,
குறை சொல்லி திரியுது .......
குற்றங்கள் பல செய்தால் ,
குத்தகை வேட்பாளர் ஆகுது ,,,,,
அடிச்சதுல சில்லறைய ,
செலவினமா காட்டுது ......
வேண்டியவன் இவனென்றும் ,
நம் இன, மதத்தோன் இவனென்றும்,
நம்மளும் ஓட்டு போடுது ........
போட்ட பின்னாடி, அடிமை என்றே
எண்ணி வாடுது ........
வாக்குறுதி எல்லாம் இப்ப ,
வக்கற்று போகுது .......
நாதியற்ற நாட்டுல ,
நமக்கு பேரு
''இந்திய குடிமகன் ;;......
---
பேச தெரிந்தும் ஊமையாய்
கவிதை பூக்கள் பாலா
//நாதியற்ற நாட்டுல ,
ReplyDeleteநமக்கு பேரு
''இந்திய குடிமகன் ;;.....//
நச்சுன்னு இருக்கு...! சூப்பர் நண்பா...! வாழ்த்துக்கள்....!
ஸ்ரீதேவி பதிவுகள்'ல உங்களுடைய கமேண்ட பார்த்து நேர இங்க வந்து விழுந்துட்டேன்...! இப்போ பின் தொடரேன்...!