என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, April 7, 2011

பூனைக்கு மணி கட்டுவது யார்

நண்பர்களே ! இது நமது தமிழின தலைவர் கலைஞ்சர் நடத்திய உண்ணாவிரத பேராட்டம் போன்றது என்று தவறாக நினைத்து விடாதீர்கள் .

அது மூடி மறைக்க இது உலகில் இந்தியாவின் நிலையை உயர்த்த வேண்டி இருக்கும் உண்ணாவிரதம் .

அரசியல் உண்ணாவிரதம், " செய்யும் மொள்ளமாரி தனங்களை மூடி மறைக்க " அந்த வரிசையில் தமிழனை காப்பாற்ற காப்பாற்ற என்று சொல்லி கொன்று குவித்த பின்பு தேர்தலுக்காக அரைமணி நேரமே இருந்து கின்னஸ் சாதனை படைத்தவர் நம்ம கலைஞ்சர் . இப்ப எதற்கு கலைஞ்சரை வம்புக்கு இழுக்கிறேன்னு பாக்கிறீங்களா ? காரணமா தான் .

காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அவருடைய சொந்த பிரச்சனைக்கோ அல்லது பதவி கேட்டோ உண்ணாவிரதம் இருக்கவில்லை . நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சகித்து கொள்ள முடியாத அளவிற்கு அரசியல் வாதிகள் ஊழலில் அடிக்கும் கொட்டம் நம்மளாலே தாங்க முடியல, யாரு இதை தட்டி கேட்பது , பூனைக்கு மணி கட்டுவது யார் என்று துடித்து கொண்டிருக்கும் நல்ல மனம் படைத்த நாட்டு மக்களின் எண்ண கொதிர்பிற்கு ஒரு வடிகாலாக அமைத்து விட்டது திரு அன்னா ஹசாரே அவர்களுடைய உண்ணாவிரதம் .

அவர் சொல்லி இருக்கும் ஒரு முக்கிய செய்தி எந்த அரசியல்வாதியும் வந்து ஆதரவு தெரிவித்து போடோவுக்கு போஸே கொடுக்க வேண்டாம் என்று கடுமையாக சொல்லி உள்ளார் . இதிலிருந்தே தெரியும் உண்மை நிலை என்னவென்று . இன்று திரு .அன்னா ஹசாரே அவர்கள் உருவாக்கி இருக்கும் இந்த தீ பொறியை நாம் ஊதி பெரிது படுத்தி கொழுந்து விட்டு எரிய செய்து நம் நாட்டில் நடக்கும் ஊழல் என்னும் கொடிய நோயை எரித்து சாம்பல் ஆக்க வேண்டும் . இந்த நோய் பரவ காரணமான கொசுக்களை (அரசியல் வாதிகள் , அரசு அதிகாரிகள் , பணம் கொழித்த பணமுதலைகளை ) விரட்ட வேண்டும் போக மறுத்தால் நோய் தடுக்கும் மருந்தை பலமாக தெளித்து முழுவதும் கொல்ல(திருந்த வேண்டும் இல்லை சிறையில் தள்ளி கொடுமையான தண்டனை வழங்க வேண்டும் ) அதற்கு அதிகாரம் மக்களுக்கும் வேண்டும் .

முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது திரு அன்னா ஹசாரே அவர்களுக்கு பக்க பலமாக இருந்து முயற்சி வெற்றி அடையும் வரை அவரையும் அவருடைய வேண்டுகோளையும் அரசு ஏற்கும் வரை மட்டுமே இல்லாமல் செயல் வடிவம் வந்து செயல் படும் வரை புரட்சி வெடிக்க வேண்டும் . நல்ல தருணம் இதுதான் . கொஞ்சம் அசந்தாலும் நம்மை நம் நாட்டை மீண்டும் நல்ல விலைக்கு விற்று நம்மை அடிமையாகி அவர்கள் கூஜா தூக்கி வயிறு வளர்த்து கொள்வார்கள் . முழித்து கொள்ளுங்கள் மக்களே ! .........

உங்கள் ஆதரவை உரக்க சொல்லுங்கள் தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் இன்று எந்த மீடியாவும் இந்த செய்தியை கொண்டு சேர்க்க மாட்டார்கள் . காரணம் உங்களுக்கே தெரியும் அனைத்து தமிழ் ஊடகங்களும் அரசியல் வாதிகளிடம் இருப்பதால் இதை ஒரு செய்தியாக கூட வெளியிட மாட்டார்கள் . அதனால் தயவு செய்து குருன் செய்தியாகவும் , மின்னஞ்சலாகவும் . துண்டு பிரசுரங்களாகவும் வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . இது நமது பிரச்சணை நாம் தான் முன் நிற்க வேண்டும் .

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எந்த விதமான ப்ளாக் வைத்திருந்தாலும் இந்த நிகழ்வை உங்கள் ப்ளாக்கில் காப்பி பேஸ்ட் செய்தாவது வெளியிடவும் . நாம் தான் இப்பொழது கொஞ்சமாவது நடுநிலையை நாட்டிற்கு கொண்டு சேர்க்கிறோம் . தயவு செய்து உங்கள் பிளக்கில் ஊழல் எதிர்ப்புக்கு ஒரு பதிவு போடவும் . செய்வீர்கள் ........ கண்டிப்பாக செய்வீர்கள் ..... நாம் எப்பொழுதும் நடுநிலையானவர்கள் என்பதை மீண்டும் பறை சாற்றுவோம்.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும் , வோட்டு போடவும் , இந்த பதிவு பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம் எந்த சுயநலமும் இல்லாமல் .............கேட்கிறேன் ..............

புதுடில்லி: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது.
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் மும்பையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார்.


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.


ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.


அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.


அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.


அவருக்கு சாதாரண மக்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது . பொதுநலத்துக்காக போராடும் அன்னா ஹசாரேவுக்கும் நமது வாசகர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

10 comments:

  1. மிகச்சிறந்த பதிவு பாலா,

    நான் என் பதிவில் லிங்க் கொடுக்கிறேன்..

    ReplyDelete
  2. நன்றி பாலா எனது முகநூலில் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி கே.ஆர்.பி.செந்தில் அவர்களே ! . தொடரட்டும் ஊழல் எதிர்ப்பு முழக்கம் . தமிழன் இன்னும் இலவசதிலிருந்து (மயக்கத்தில் )
    வெளிவரவில்லை என்றே தோனுகிறது .

    ReplyDelete
  4. கக்கு - மாணிக்கம்
    மிக்க நன்றி நண்பரே
    தொடரட்டும் ஊழல் எதிர்ப்பு முழக்கம்

    ReplyDelete
  5. Anonymous said...
    மிக்க நன்றி நண்பரே
    முழங்கட்டும் ஊழல் எதிர்ப்பு அலை .
    பரவட்டும் புரட்சி தீ

    ReplyDelete
  6. ஃஃஃஃஃஇந்த பதிவு பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம் எந்த சுயநலமும் இல்லாமல் .............கேட்கிறேன் ..............ஃஃஃஃ

    நிச்சயமாக... நிச்சயமாக... தங்கள் பணி தொடரட்டும்...

    ReplyDelete
  7. We are with you, Go ahead dear friend!!

    ReplyDelete
  8. ♔ம.தி.சுதா♔ @
    நன்றி நண்பரே

    ReplyDelete