என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Sunday, February 5, 2012

உலகின் அதிஷ்டசாலி


ஆழ் மனதின் உணர்வுகளை  
வெளிகாட்டா  முகமிருந்தால் 
நீதான் உலகின் அதிஷ்டசாலி,
உலகின் உயர்த்த மனிதனாவாய்  
விரோதிகூட விரும்பி வருவான்    ,
நட்பும் நம்மை நாடி வரும் ,
காதல் கடைக்கண் காட்டும் ,
உறவுகள் உளமார பாராட்டும் ,
வாய்ப்புகள் உன்னை வலம்வரும் ,
சுக்கிரவன் உனக்கு சொந்தமாவன் ,
குபேரன் வட்டி இல்ல கடன்கொடுப்பான் ,
மனைவி கணவனை தலை சுமப்பாள்,
பெற்றோர் பெருமை பாராட்டுவர் ,
சமூகம்  நல்லவனாய் சித்தரிக்கும் ,
நல்லவன் இவன் என்றேதான்  
நட்திசையும் பறைசாற்றும் .
ஆனால்,
நீ உன் சுயத்தை  இழப்பாய் , 
விலையில நிம்மதி விட்டு விலகும் ,
மனசாட்சி தினம் கொல்லும்,
மரணித்த நடைப் பினமாவாய் ..............

உலகம் இதைதானே விரும்புகிறது ?
 - கவிதை பூக்கள் பாலா 
 

No comments:

Post a Comment