என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, March 23, 2011

புன்னகையின் வலிமைதானோ ! ...


நீ சில்லறையாய் சிதறவிட்ட
சிரிப்பொலியை ...
சிதறாமல் சிறைபிடிக்க
கையேந்தும் என் அனிச்சை செயல் ......
உன்னிடத்தில் உறவாடும்
என் காதல் தான் காரணமோ ......

கட்டி அனைத்து தழுவவில்லை
காதல் ரசம் பேசவில்லை
முத்தம் கூட முயன்றதில்லை
உன்பின்னே அலைந்ததில்லை
உன் வாசம் தேடி வந்ததில்லை
இருந்தும் உன் காதல் எப்படி ......

என்னை கடக்கையிலே
இதழ்யோரம் நீ வடித்த
புன்னகையின் வலிமைதானோ !
பெண்மைகள் சுற்றி பலரிருந்தாலும்
உன்னை மட்டும் சுருட்டி வைத்த
என் விழி தானோ ....
உன் காந்த விழிக்கு ஏற்ற
இழு விசையும் நான் தானோ !

இறுகிய என் இதய கதவும் ........
இன்று மண்ணில் குழைத்து
நீ செய்யும் வடிவம் தானோ ! என் நிலை ...
மாற்றங்கள் வந்ததடி என்னுள்ளே
உன் புன்னகையின் வலிமையாலே ........
கவிதை பூக்கள் பாலா

2 comments:

  1. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: வியாழன் கவிதைகள் சரமாக

    ReplyDelete
  2. தமிழ்வாசி - Prakash
    நன்றி நண்பரே , என்னை அறிமுகம் செய்தமைக்கு

    ReplyDelete