என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, March 16, 2011

அவன் களவானி பயல் தானே !


சிறு வயது சாபங்கள் .....
சிலநேரங்களில் பலித்து விடும் போல ,
ஆம் , அறியாத வயதினிலே ,
அறிந்து செய்த சிறு சிறு திருட்டு தனம்
சாபத்தை பெற்று தந்தது ,
களவானி பயலுக்கு வாக்கப்பட போறே என்று !,
விளையாட்டாய் சிரிந்து மகிழ்ந்த நான் ,
இன்றும் அதே புன்னகையில் .....
சாபம் பலித்து விட்டதே என்று .......
இதய பெட்டகத்தில் பாதுகாத்த என் காதலை ,
களவாடி இதயத்தில் பதுக்கிக்கொண்டான்
என்னவன், அவன் களவானி பயல் தானே !
- கவிதை பூக்கள் பாலா
..

10 comments:

  1. தெரியாமல் எ டுத்தால்தான் திருட்டு
    தங்கள் கவிதையைப் படித்தால் இதயத்தை நீங்கள்
    விரும்பி தூக்கிக் கொடுத்ததுபோல் அல்லவா உள்ளது
    அது எப்படி திருட்டாகும்?
    அவன் எப்படி களவாணி ஆவான்?
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இதய பெட்டகத்தில் பாதுகாத்த என் காதலை ,
    களவாடி இதயத்தில் பதுக்கிக்கொண்டான்
    என்னவன், அவன் களவாணி பயல் தானே

    ஹி ஹி ஆமாம் கண்டிப்பாக களவாணி தான் ஆனா செல்ல களவாணி. கவிதை நல்லா இருக்கு நண்பா

    ReplyDelete
  3. களவானி.. களவானி.. ஒருவேளை அப்படி இருக்குமோ.??? ஒருவேளை இப்படி இருக்குமோ.??? இல்ல அவரு களவானியாவே இருக்கட்டும்

    ReplyDelete
  4. Ramani @
    உங்கள் வருகைக்கு நன்றி , உங்களுக்கு தோழி ரேவா கமெண்ட் பதில் சொல்லும் என்று நினைக்கிறன் நண்பரே , ஆம் செல்ல கலைவாணி

    ReplyDelete
  5. வேடந்தாங்கல் - கருன் @
    நன்றி நண்பரே

    ReplyDelete
  6. "ஹி ஹி ஆமாம் கண்டிப்பாக களவாணி தான் ஆனா செல்ல களவாணி."
    இவ்வளவு சரியா சொல்றீங்க நன்றி .......நன்றி
    தோழி

    ReplyDelete
  7. தம்பி கூர்மதியன் @
    இல்ல அவரு களவானியாவே இருக்கட்டும்
    நன்றி நண்பரே !

    ReplyDelete
  8. அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மதுரை சரவணன் @
    நன்றி நண்பரே !

    ReplyDelete