யாரிட்ட சாபம் ..
குழந்தைகள் பொதி சுமக்கும் கழுதையாய் மாறியது !
முன் அனுபவம் வேலைக்கு தகுதி சான்று ,
திருமணத்திற்கு ..............
தடை சான்று......
கோவிலை சுற்றினால் பக்திமான் என்றால் ,
அழகு பெண்ணை சுற்றினால் மட்டும் போக்கிரி என்பது ஏன் ?
என் உணர்வை காட்டி கொடுக்கும்
எட்டப்பன் .........
என் கண்கள் !
நிலவு பெண்ணை சுற்றி கண்ணடிக்கும் காளிபயல்கள்.................
நட்சத்திரங்கள் !
பூமி (உலகம் ) இருள் விலக
இயற்கை பிடிக்கும் தீபந்தம் ......
சூரியன் .....
நிலவு பெண்ணே !
நீ வடித்த கண்ணீர் தானோ !
கடல் நீர் ...
நடுவருக்கும், பார்வையாளருக்கும் அனுமதி இல்லாத ,
இருவருக்கும் பரிசளிக்கும்,
இருவர் விளையாடும் விளையாட்டு
தாம்பத்திய விளையாட்டு ...
எங்க ஊரின் சமத்துவ புரங்கள்
திரைஅரங்குகள் ........
இயற்கை கூட்டணிகள்
உருவாக்கிய கட்சி கொடி தானோ !
வானவில் ...
மீன்களுக்கு இயற்கை அமைத்த
தேசிய நெடுஞ்சாலை ...
நதிகள் ...
முழு பொய் கவிதையாகாது ,
வாழ்கையில் முழுக்க உண்மை உதவாது ....
தவறு , பாவம் என்பதன் வரைமுறை என்ன ?
அது நிகழ்விடமே முடிவு செய்கிறது .
மண் பெற்றெடுத்த உயிர் மனிதனுக்கு இரையாகிறது ,
மனிதன் பெற்றெடுத்த உயிர் மண்ணிற்கு இரையாகிறது ..
இதயமே !
மன்னித்துக்கொள் ..நான் வில்லன் அல்ல ,
நான் வாழ நீ துடித்துதான் ஆக வேண்டும் .
நாட்டின் முன்னேற்றம் என்று ...
பெண்ணே !
உன் உடை வீழ்ச்சியில் காட்டுகிறாய் ....
பண்பாட்டின் வளர்ச்சி என்று
நுனி நாக்கில் அன்னிய மொழி ஆராதிக்கிறாய் ......
கரை பட்ட வேட்டிக்கே இன்று மரியாதையை ..
அரசியல்வாதிகளால் .......
சுடுகாடும் சுற்றுலா மையம்மானது
அரசியல்வாதிகளின் புன்னியயத்தில் ........
பசு இன்று குழந்தைக்கு தாயானது
தாய் கொடுக்க மறுத்ததை கொடுத்த போது ...
புட்டி பால் ...
No comments:
Post a Comment