என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, December 31, 2011

அனைவருக்கும் உள்ளம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்



பிறக்கட்டு புது மகள் யுகத்தில்,
பூத்து குலுங்கட்டும் உள்ளங்கள் புன்னகையில் ....
உயர்வை எதிர்க்கும் வல்லோனை
வீழ்த்தட்டும் பிறந்து புது மகள் ......
வீழ்வோனை மிதிக்கும் கல்நெஞ்சங்களை
கனிந்து தான் களையட்டும் புதுமகள்...
நல்வேடம் வேய்க்கும் தீயோனை ,
தீயிட்டு மாயக்கட்டும் புதுமகள் ....
பழிவாங்கும் உள்ளங்களை ,
நல்விதை ஊன்றி திருத்தட்டும் புதுமகள் .......
ஊழலை சுவாசித்து உலகில்
ஏழ்மையை வளர்க்கும் ஏமாற்று அரசியலை
ஆணியடித்து விரட்டட்டும் புதுமகள் ........
நாவில் நல்வார்த்தை சுரந்திட,
நரர்களை நைய புடைக்கட்டும் புதுமகள் .....
கொலை குரூரம் பிடித்தவனை,
குடலுருவி போடட்டும் புதுமகள் .....
நம்பி வந்தோனை நரியாய் ஏயிப்பவரை ,
நடுவீதி நிறுத்தியே நறுக்கட்டும் புது மகள்...
2011 ஆண்டுகளை கொன்றேதான் பிறப்பவள் நீ,
விழி சுற்றி காத்திடுவாய் உலகில் வாழ்வோரை ,
அரக்கர்களை வீழ்த்தி நீ , அரியணையில் வீற்றிடுவாய் .........
புதுமகளை கையேந்த காத்திருக்கும் பலகோடியில் ...
விழி அகன்று என் கவிதை பூக்களோடு காத்திருக்கும் ,
- கவிதை
பூக்கள் பாலா ........

Tuesday, December 27, 2011

இன்றைய காதல்


உண்மை காதல் உலகினில் இல்லை ,
அப்படி இருந்தால் அதற்கு ஆயுளும் இல்லை .
வேஷம் மட்டுமே இன்று காதலின் வெற்றி ,
அப்படி நினைத்தே பல காதல் தோல்வி,
அழகே அமுதே இன்று காதலின் வசனம்,
காலங்கள் கழிக்கவே வெறும் கடலையை போடும்
காதலின் உச்சம் காமம் என்பதெல்லாம், இப்ப
காமத்தின் சொச்சம் காதல் என்றானது .
இதனிலில் இடையில் காதல் ஊசலாடி
உறவுகள் அறுந்து உருக்குலைந்து போனது .
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, December 13, 2011

மறக்க நினைத்தே நினைக்கிறேன்.....


உன்னை மறக்க
வார்த்தையாய் வெளிகொணர்ந்து
கவிதையாக்கினேன்
என் கவிதையிலும்
மெல்ல சிரித்து
என்னை கொல்கிறாய் ............

Tuesday, November 15, 2011

நாயாக பிறந்திருக்கலாமோ !

நான் நாயாக பிறந்திருக்கலாமோ !
இன்றைய குழந்தைகளின் ஏக்கம் !
தன் இடத்தை  பிடித்துக்கொண்ட
நாயின் மீது பொறாமை !
காவலாக இருந்த நாய்க்கு ,
இன்று நாம் காவலாக மாறியதேனோ !
மடிசுமந்த பிள்ளைகள்  ஆயக்களின் பிடியிலே !
விலை கொடுத்த நாய்கள் அன்னையின் மடியிலே !
பால்கொடுக்க மறுத்து விட்ட நவ நாகரீக அன்னைகள்
முத்தமிடக்கூட மறந்து  போன  மாயம் தான் என்ன !
பாசத்தை மறுத்து   விட்ட  பெற்றோர்களே !
விரைவில் சந்திக்கின்றோம்  முதியோர் இல்லத்திலே !
- கவிதை பூக்கள் பாலா ..

வருதெடுத்தது  :
கிழிஞ்சத தச்சது அந்த காலம் ,
தச்சத கிழிச்சி போடுவது இந்த காலம் ........  




 
   

Saturday, September 24, 2011

காதல் அழிவதில்லை

காதல் அழிவதில்லை ,
ஆம் காதல்  அழிக்க படுகின்றது ,
காதலி சலிச்சி போனா,
காதலன் கல்லாகி போனா !
பெத்தவங்க கண்கலங்கி  போனா !
உயிரை விடுவேன் மிரட்டும் போதும் !
உண்மை காதல் மறையும்  போதும் !
காதல் அழிக்க படுகின்றது ........
- கவிதை  பூக்கள்  பாலா  

Tuesday, September 6, 2011

யுத் பதிவர் சந்திப்பு ( என் அனுபவம் )

யுத் பதிவர் சந்திப்பு :
சென்னை, கே.கே.நகர் , முனுசாமி சாலையில் டிஸ்கவரி புக் சென்டர் முதல் மாடியில் 04.09 .2011 ஞாயிறு அன்று மாலை 6 .00 மணிக்கு நடைபெற்றது( அட நான் அப்பதான்பா போனேன் )..
நான் முதல் முறையா பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கேன் அப்பின்னு என்னாலையே நம்ப முடியல காரணம் பல வேலைகளுக்கு இடையில் கண்டிப்பாக போய்யே ஆகவேண்டும் என்ற முடிவோடு போய் சேர்ந்தேன் . முதலில் தயக்கமா தான் படி ஏறினேன் காரணம் துவரை யாருடனும் அறிமுகம் இல்லை , பேசியது , சாட் பண்ணது கூட இல்லை கமென்ட் போட்டிருப்பேன் அவ்வளவே !. பதிவுலகில் எனக்கு அறிந்த நபர் வால்பையனும் , ஈரோடு சசிகுமாரும் தான் . ஆனால் பாருங்க கதவை திறந்து உள்ளே போன உடனே பிலாசபி பிரபாகர் கண்டுபிடித்து விட்டார் வாங்க நீங்க ரெட்ஹில்ஸ் பாலா தானே! என்று கேட்டவுடன் ஒரு இன்ப அதிர்ச்சியோட கலந்த சந்தோசம் . உடன் என்னை சந்திப்புக்கு அழைப்பு விடுத்த சிவகுமாரும் புன்னகையுடன் உடன் இருந்தார் . பிறகுதான் பார்த்தேன் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே பதிவர்கள் வந்திருந்தனர் .

எல்லோரையும்
அறிமுகம் செய்து கொள்ள ஒவ்வொருவராக சென்று அவர்களுக்கு தோன்றியதையும் அவர்களை பற்றியும் சொல்லி வந்தமர்ந்தனர் . அனைத்தையும் என்னால் கேட்க முடிய வில்லை காரணம் அனைத்து பதிவர்களையும் ராகிங் செய்துகொண்டிருந்தனர் ....... என்முறை வந்த போது தயக்கம் ஏதும் இல்லை பதிவர்களை நினைத்துதான் பயம் காரணம் முதல் சந்திப்பு , பேச ஆரபித்தால் மனதில் தோன்றுவதை பேசி விடுவேன் . அதனால் பலமுறை பலசந்தர்பங்கள் தந்த பாடம் அதிகம் கொஞ்சபேருக்கு பிடிக்காம போய்டும் உண்மை சுடும் என்பது போல, அதிகம் பேசாதே! இந்த முறை என்ற எண்ணத்தோடு பேச சென்று என்னை பற்றியும் என் பதிவுகள் பற்றியோ யார் மனதிலும் பதிய வாய்ப்பே இருந்திருக்காது காரணம் என் மனதில் ஓடிய எண்ணங்கள் . வந்தமர்த்தவுடன் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தேன் .

பேச்சுகள்
மிகவும் ஜாலியாகவும் , விமர்சனம் , நையாண்டி , நக்கல்ஸ்சோட நகர்ந்தது , பிரபல பதிவர்கள் ( சீனியர் ஜூனியர் என்ற வேறுபாடு எல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள் அதனால் ) பேசினார்கள் குறிப்பாக கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , சுரேகா , யுவகிருஷ்ணன் மற்றவர்கள் மன்னிக்கவும் பேசியவை அனைத்தும் ஞாபகம் இருக்கு ஆனால் அவர்கள் பெயர்கள் ஞாபகம் இல்லை . நன்றாகவும் , நம்பிக்கையாகவும், நம்பும்படியும் , சில யதார்த்தங்களையும் அலசி ஆராய்ந்தனர். இப்போதைய பதிவர்கள் நிலை என்ன எப்படி போய்கொண்டிருகின்றது என்றொல்லாம் பேசப்பட்டது , நான் பேசி இருந்தாலும் பலபேர் பேசியதை தொகுத்ததாக இருந்திருக்கும் காரணம் அவ்வளவு ஆதங்கம் மனதில் ஓடிகொண்டிருந்தது . பிலாசபி பிரபாகர் , சிவகுமாரும் பேசும் படி சொன்னார்கள் ( கொஞ்சம் வற்புறுத்தவும் செய்தார்கள் ) மறுத்து விட்டேன் காரணம் அறிமுகமே இல்லாத நான் எதையாவது சொல்லி வைக்க அது பதிவர்கள் மனம் நோக செய்யுமோ என்ற எண்ணம் தான் . ஆனால் பிறகுதான் தெரிந்தது அவர் பிரபலமாவது புதியவராவது அனைவரையும் கலாயித்து கொண்டிருந்தனர்.


கேபிள்
சங்கர் அவர்களும் , ஜாக்கி சேகர் அவர்களும் உண்மையிலேயே ஜாலியான பதிவர்கள் தான் . இதில் கொஞ்சம் மாற்று கருத்தோடு சிவகுமார் மட்டும் பேசினார் ஆனால் கவனிக்கவேண்டிய கருத்தும் கூட , தனது சொந்த அனுபவத்தையும் சேர்த்தே சொன்னார். அவர் ஆதங்கம் புரிந்தது அதற்கும் பதிலும் அளிக்கப்பட்டது தாயகத்தை மறந்து விட்டு இலங்கையை பிரச்சணையை மட்டும் பெரிதாக எடுத்துகொள்வதை தான் ஆதங்கமாக வெளிபடுத்தினார்.


இடையே குடிக்க தண்ணீர் பாட்டல் தரப்பட்டது பிறகு சூடாக டீ கூட தந்தார்கள் பாவம் எந்த புள்ள செலவு செஞ்சுதோ தெரியல அவர்களுக்கு நன்றி ........ கடைசியாக அனைவரும் கலந்துரையாடல் போல் நடந்தது அதில் என் ஆதங்கத்தையும் அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை எந்த தனியார் பள்ளிகளும் வாங்குவதில்லை என்ற ஆதங்கமும் வெளிபடுத்தினேன் , பதிவர்கள் அதை அதிகம் கண்டுகொள்வதில்லை என்று பேசிகொண்டிருக்கும் போதே சபை வேக வேகமாக கலைந்தது நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதன் பிறகும் சென்னை உயர் நீதிமன்ற ட்வகேட் ( அட அவரும் பதிவர் தாங்க ) அவர்களுடனும் பேசினேன் கேபிள் சங்கர் , ஜாக்கி சேகர் , சிவகுமார் , இன்னும் சில நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் . மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது சென்னை பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டது . ...

பிலாசபி பிரபா கூட தான் போட்டோ எடுத்துகல ( அப்ப அவர் இல்லப்பா )

குறிப்பு : இரண்டு பெண் பதிவர்களும் கலந்து கொண்டனர் என்பது விசேஷம். அடுத்து யார்கிட்டையும் சொல்லிடாதீங்க பிலாசபி பிரபாகர் ஒரு சந்தேகத்தை என்னிடம் கேட்டார் நான் உங்களை எங்க வயது காரராக இருப்பீங்கன்னு நினைச்சேன்னு சொன்னாரு ( அட 25 வயசுக்குள்ள ) அட நானும் யுத் தாங்க அப்படின்னு சொல்லி சமாளிச்சிட்டேன் . என்ன பிலாசபி பிரபாகர் கிட்ட சொல்லிட்டு கிளம்ப முடியல ( அட அவர அங்க காணோம் ) சிவகுமார் மற்றும் சில பதிவர்கள் இடமும் அடுத்த பதிவர் சந்திப்புல சந்திக்கலாமுன்னு சொல்லிட்டு கிழ இறங்கினா புக் செண்டர்ல இன்ப அதிர்ச்சி கேபிள் சங்கர் சார் அன்பா பிஸ்கட்டு சாப்பிட கொடுத்தாரு. அவருக்கும் நன்றி , இப்படியாக என் முதல் பதிவர் சந்துப்பு முடிந்து வீட்டுக்கு கிளப்பினேன் ........................ மக்கா ... .

Friday, August 19, 2011

தோழி சசிகலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்




பிறந்தநாள் , பிறந்தநாள்,
என் தோழிக்கு பிறந்த நாள்
வின்னவளை வீழ்த்தி விட்டு
மண்ணுலகம் வந்த நாள் ,
தெவிட்டாத அன்போடு ,
மாண்புமிக்க பண்போடு ,
அழகிற்கு நீ எல்லைகோடோடு,
வீர் என்று சிரிப்போடு ,
முழு நிலவாய் புன்னகித்து

விரைந்து வந்த பெருநாள்.
தாயிக்கு நீ சேயாகி ,
இன்று ஒரு சேய்க்கு நீ தாயாகிலும்,
குழந்தையாய் பவனி வருபவள் .
தோழி நீ என்றும் ,
வற்றாத வளம்பெறுவாய்,

சிறப்பான வாழ்க்கை பெற்றாய் ,

அருமையான உறவுகள் பெற்றாய் ,

அழகான குழந்தை பெற்றாய் ,

நட்பான தோழமை பெற்றாய் ,

அளவிலா வாழ்நாள் பெற்று , உன்

அகம் மகிழ என்றும் வாழ

வாழ்த்தும் தோழியின் தோழன் .
கவிதை பூக்கள் பாலா

Monday, August 15, 2011

என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்

நண்பன் ஈரோடு சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :

நட்புக்கு இன்று பிறந்த நாள் ,
துளிர் விட்ட நாள் முதலாய்,
பல கொண்டாட்டங்கள் கண்டிருந்தாலும்,
என் தோழமைக்கு இன்று பிறந்த நாள் , என்
தேசமே கொண்டாடும் விடுதலை நாளுமல்லவோ !
மறக்க கூடியதோ இந்த நாளும் ,
என் தோழமையின் குரல் கேட்ட
நாளும் அல்லவோ இன்று எனக்கு,
சினிகிட்ட அலைபேசி,
சிலகித்ததோ மனம் முழுக்க ,
துள்ளி குதித்து ,ஆவி அனைத்து,
வாழ்த்து சொல்ல விழைந்து - முடியாமல் போனாலும்
அனைத்தையும் நினைத்தே வாழ்த்து கூற நினைத்து
என் எண்ணங்கள் வார்த்தை இன்றி திக்கு முக்கட
ஒற்றை வரி வார்த்தையை அந்நிய மொழியில் சொல்லி விட்ட
வருத்தத்தோடு இம்மடலையும் வடிக்கின்றேன்.
என் தோழமைக்கு ........

நல் எண்ணம் உனக்குண்டு
உன் நட்பிற்கும் பொருளுண்டு ,
சிந்தனைகள் சிறகடிக்கும்
கலை ரசிக்கும் சிறப்புண்டு,
பொறுமைக்கும் எல்லை இல்லை
நகைசுவைக்கும் வறுமை இல்லை
வாழ்வினில் என்றும் உனக்கு குறைவில்லை
உனை வாழ்த்துவதிலும் என்றும்
என் மனம் சுனங்க போவதுமில்லை
என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்........
வாழ்த்துகளோடு ..........
கவிதை பூக்கள் பாலா..

Saturday, June 25, 2011

ஜூன் 26 நினைவேந்தல்

ஜூன் 26 நினைவேந்தல்



இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது...? ஒருவேளை அப்படி செய்தால்தான் இறந்தவர்களின் ஆத்மா "சாந்தி" அடையுமோ...? இதென்ன கருமம் மெழுகுவர்த்தி பிடித்துக்கொண்டு ஜெபக்கூட்டம் மாதிரி... என்றெல்லாம் எண்ணிப்பார்த்தேன். இது சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் அஞ்சலிக்கூட்டம் அல்ல. நமது தமிழ் உறவுகள் இலங்கை அரசால் சித்திரவதை செய்யப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை சர்வதேச சமூகத்திற்கும், ஊடகங்களுக்கும் உணர்த்தவிருக்கும் அடையாளக்கூட்டம். தூங்கிக்கொண்டிருக்கும் (அ) தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு "நாங்க இருக்கோம்டா..." என்று சொல்லி செவிட்டில் அறையும் கூட்டம்.


சாதாரண பொதுமக்களாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணும் லட்சம் தமிழர்களும், ஜூன் 26 மாலையில் மெரீனா கடற்கரைக்கு வாருங்கள். வரலாற்றை நம் பக்கம் திருப்புவோம்.

ஐ.நாவின் மனித உரிமை தினத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலையில், தமது பாதுகாவலர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டு பின் ஒவ்வொரு பதுங்கு குழியாய் நின்று சிங்கள விலங்குகள் வேட்டையாடியதால் மாண்டுபோன நமது தமிழ் உறவுகளை நினைவு கூறுவோம். நமது சொந்தங்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து வந்து அந்த வீரர்களுக்காகவும், போராளி மக்களுக்காகவும் மரியாதை செலுத்துவோம். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை மெரினாவிற்கு அழைத்து வருவோம். ஒரு மாபெரும் அஞ்சலி நிகழ்வை நிகழ்த்தி அதன் மூலமாக தமிழர்களின் ஒற்றுமையை இந்திய அரசுக்கும், நமது கோரிக்கையான “தமிழீழத்தை விடுதலை செய்” என்பதை சர்வதேசச் சமூகத்திற்கும் முகத்தில் அறைந்து சொல்லுவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.


மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

Wednesday, June 15, 2011

விரைவில் மீண்டும் வருகிறேன்

நண்பர்களே ! விரைவில் மீண்டும் வருகிறேன் . வேலை நேரம் அதிகரித்து விட்டதால் எழுத முடியவில்லை .............. அதுவரை என்னுடம் தொடர்பில் இருங்கள் ........ இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் .............

Tuesday, May 31, 2011

என்றும் மாறா உறவானவளோ .....


தங்கை அவள்,
என்றும் அண்ணன் மடியினில் தவழ்ந்திடும் மழலையோ !
பல மாற்றங்கள் அவள் வாழ்வில் கண்டாலும்,
மாறாத உறவின் பாலம் ஆனவளோ !
தங்கை எனும் வார்த்தையிலே ,
உயிர் தாங்கி நிற்கும் உன்னத உறவானவளோ !.
கொடிய கண்களையும் தட்டி வைக்கும்,
நம்பிக்கையின் எல்லை கோடானவளோ .......
உள்நாட்டு பேரினை போல்,
என்றும் முடிவில்லா (செல்ல) சண்டை இடுபவளோ !.
அடுத்தவன் சாடினாலே - அண்ணனின்
போர்ப்படை தளபதியாய் தங்கை மாறிடுபவளோ ! ,
மிட்டாய்க்கு சண்டையிட்டு - பின்
விரல் பிடித்து பள்ளிசென்ற காலமும் முதற்கொண்டே ,
உற்றதோழியும் அவளே !, உயரிய பாசமும் அவளே !
அடுத்த தெருவில் காதல் அம்பை எய்த அண்ணனையும்,
தனை நோக்கிடும் அம்புகளை ஒடித்திடும் வீரனாகியவளோ ! .
கரம் பிடித்து கொடுப்பவனை , கால் தொட்டு வரவேற்றிடும்
மனவலிமை கொடுத்திடும் பாசத்தின் முழுமையானவளே !
அண்ணன் இல்லத்தரசியை இணைபதிளும் முதன்மையானவளோ !
தான் ஈன்ற குழந்தைக்கு உலகில் - அண்ணனை
முதன்மை உரிமை உறவாக மாமனாகி மகிழ்ந்தவளோ !
ஒரு வயிற்றில் மலர்ந்து இருமலராக வாழ்ந்தாலும்,
மனதில் காதலாய் இன்னொருவன் இருந்தாலும்,
என்றும் உன்னதமாய் இதயத்தில் ஓர் உறவாய் வைத்தவளோ !
வாழ்விழந்து போனாலோ ,
கொண்டவன் கொடுங்கோலனாய் மாறினாலோ ,
என்றும் காக்கும் துணையாய் அண்ணனை நினைபவளோ !
உலகில் பயணம் முடிந்து போகும் வேளையும்,
அண்ணன் பட்டுடுத்தி அழகா பவனி செல்பவளோ !
மலர்ந்த நாள் முதல் அண்ணன் தோல்சுற்றி
வலம்வந்து உலகில் என்றும் மாறா உறவானவளோ !
(அண்ணன்)தங்கை .............

அண்ணன் தங்கை பாச உணர்வுக்கு
என் இந்த கவிதையை
பரிசாக கொடுக்க விரும்புகிறேன் ..........

கவிதை பூக்கள் பாலா....

Friday, May 20, 2011

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 3

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 1

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 2

சூரிய விழியின் சுடாத ஒளிக்கதிரை
சுகமாக உள்வாங்கி சுகந்தமான நிலவானேன் ,
விழிகள் மேல்செல்ல , அவளை தழுவியதால்
காற்றும் தென்றலாக என் உணர்வுகள் உள்வாங்க ,
அவளிட மண்டியிட்ட என் விழிகள்
விரைவாக தஞ்சம் புகுந்தது என்னுள்ளே,
கால்கள் மெல்ல நடைப் போட்டு நடை பழகினாலும் ,
விடைபெறாத என்கருவிழிகள்
விவரமாய் ஆராய்ந்தது அவள் அழகை ,
பறக்க துடிக்கும் முடியிழைகள், அவற்றை
மெல்ல தழுவி அரவனைக்கும் அவள் கரங்கள் ,
வடிந்து வீழாத சாயப்பூச்சு ,
கண்கள் உறுத்தா கண்மை அளவு ,
காதுகளில் ஊஞ்சலிடும் செயற்கை காதணிகள் ,
ஆவி அனைத்து விளையாடும் தங்கச் சரடு ,
மேனி அழகின் பாதுகாவலனாய் தவம் செய்த சுடிதார் ,
மணிக்கட்டில் காலம் சொல்லும் கை கடிகாரம்,
விரல் இடுக்கில் மகுடமாய் பகட்டு மோதிரம் ,
தோளில் கை கோர்த்து, இடையை வலம் வந்து
மடியில் தலை வைத்து உறங்கும் தோள்பை ,
கால்களில் கட்டுண்டு , கால்தொட்ட மமதையில்
சிரித்து சிரித்து சித்தரவதிக்கும் கால்கொலுசு,
தேவதையை சுமந்து பரவசமடையும் பாதணிகள் .
முழு நிலவு வந்ததால் முழுகி போன சூரியனும் ,
அதையும் தடுத்து விட மேகம் மிதமாக குடைபிடிக்க
கண்களில் பழைய காஷ்மீரை கண்டேன் .
விழிகள் துளை இடுவதை கண்டும் சிரித்தே
சிறைபடுத்தினால் என் உணர்வை ......
இதயம் தொடர்ந்து துடிக்கும் ........
கவிதை பூக்கள் பாலா ..
.

Friday, May 6, 2011

இன்னும் எத்தனை காலம்தான்..


வார்த்தைகள் வரவில்லை ,
வாக்கியங்கள் தொடுக்க முடியவில்லை ,
நம்மை சுற்றி ,
நாய்களும் , நரிகளும்,
மனித முகம்வேய்த்த ஓநாய்களுமே!
ஏமாறும் நொடி நோக்கி வளம் வருகின்றன ,
பூமி பிளக்கும் இயற்கையும் ,
வானை பிளக்கும் செயற்கையும் ,
கூறுபோடும் கொலைக்கலமான பூமி பந்து .
எல்லை தாண்டி செல்லும் பந்தாக என்று
மாறுமோ -அன்று
ஆனந்த படவோ , வருத்தப்படவோ ,
நாம் இருக்க போவதுமில்லை .
தெரிந்தும் ஏன் இந்த கொடுமைகள் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாகவும் சித்தரிக்கும் (எத்தளிக்கும் )
கொடுமைகள் இன்னும் எத்தனை காலம்தான்.........
.............கவிதை பூக்கள் பாலா
.

Wednesday, April 20, 2011

காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது









பூத்த புது மலராய் புன்னகைக்கும் என்னவளே !
புதிதாய் உன்னுள் வந்த மாற்றம் ஏனோ !
என்னை பற்றி அறிய நீ முடுக்கி விட்ட
உன் ஒற்றர்களின்(தோழிகளின்) சேதி வந்துவிட்டதோ !
நமக்கும் ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்ற ஆனந்தமோ !
காதலுக்குள் கால் பதித்த புதுமையான சுகமோ !
ஒற்றையாய் சுற்றி திரிந்த மனதிற்கு
ஜோடி கிடைத்த இன்பமோ !
காதல் சிறகடிக்கும் காதல் பறவையின்
ஜோடி பறவை நான்தானோ !
ஒன்று மட்டும் நானறிவேன்
என் காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது ....
- கவிதை பூக்கள் பாலா
..

Thursday, April 7, 2011

பூனைக்கு மணி கட்டுவது யார்

நண்பர்களே ! இது நமது தமிழின தலைவர் கலைஞ்சர் நடத்திய உண்ணாவிரத பேராட்டம் போன்றது என்று தவறாக நினைத்து விடாதீர்கள் .

அது மூடி மறைக்க இது உலகில் இந்தியாவின் நிலையை உயர்த்த வேண்டி இருக்கும் உண்ணாவிரதம் .

அரசியல் உண்ணாவிரதம், " செய்யும் மொள்ளமாரி தனங்களை மூடி மறைக்க " அந்த வரிசையில் தமிழனை காப்பாற்ற காப்பாற்ற என்று சொல்லி கொன்று குவித்த பின்பு தேர்தலுக்காக அரைமணி நேரமே இருந்து கின்னஸ் சாதனை படைத்தவர் நம்ம கலைஞ்சர் . இப்ப எதற்கு கலைஞ்சரை வம்புக்கு இழுக்கிறேன்னு பாக்கிறீங்களா ? காரணமா தான் .

காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அவருடைய சொந்த பிரச்சனைக்கோ அல்லது பதவி கேட்டோ உண்ணாவிரதம் இருக்கவில்லை . நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சகித்து கொள்ள முடியாத அளவிற்கு அரசியல் வாதிகள் ஊழலில் அடிக்கும் கொட்டம் நம்மளாலே தாங்க முடியல, யாரு இதை தட்டி கேட்பது , பூனைக்கு மணி கட்டுவது யார் என்று துடித்து கொண்டிருக்கும் நல்ல மனம் படைத்த நாட்டு மக்களின் எண்ண கொதிர்பிற்கு ஒரு வடிகாலாக அமைத்து விட்டது திரு அன்னா ஹசாரே அவர்களுடைய உண்ணாவிரதம் .

அவர் சொல்லி இருக்கும் ஒரு முக்கிய செய்தி எந்த அரசியல்வாதியும் வந்து ஆதரவு தெரிவித்து போடோவுக்கு போஸே கொடுக்க வேண்டாம் என்று கடுமையாக சொல்லி உள்ளார் . இதிலிருந்தே தெரியும் உண்மை நிலை என்னவென்று . இன்று திரு .அன்னா ஹசாரே அவர்கள் உருவாக்கி இருக்கும் இந்த தீ பொறியை நாம் ஊதி பெரிது படுத்தி கொழுந்து விட்டு எரிய செய்து நம் நாட்டில் நடக்கும் ஊழல் என்னும் கொடிய நோயை எரித்து சாம்பல் ஆக்க வேண்டும் . இந்த நோய் பரவ காரணமான கொசுக்களை (அரசியல் வாதிகள் , அரசு அதிகாரிகள் , பணம் கொழித்த பணமுதலைகளை ) விரட்ட வேண்டும் போக மறுத்தால் நோய் தடுக்கும் மருந்தை பலமாக தெளித்து முழுவதும் கொல்ல(திருந்த வேண்டும் இல்லை சிறையில் தள்ளி கொடுமையான தண்டனை வழங்க வேண்டும் ) அதற்கு அதிகாரம் மக்களுக்கும் வேண்டும் .

முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது திரு அன்னா ஹசாரே அவர்களுக்கு பக்க பலமாக இருந்து முயற்சி வெற்றி அடையும் வரை அவரையும் அவருடைய வேண்டுகோளையும் அரசு ஏற்கும் வரை மட்டுமே இல்லாமல் செயல் வடிவம் வந்து செயல் படும் வரை புரட்சி வெடிக்க வேண்டும் . நல்ல தருணம் இதுதான் . கொஞ்சம் அசந்தாலும் நம்மை நம் நாட்டை மீண்டும் நல்ல விலைக்கு விற்று நம்மை அடிமையாகி அவர்கள் கூஜா தூக்கி வயிறு வளர்த்து கொள்வார்கள் . முழித்து கொள்ளுங்கள் மக்களே ! .........

உங்கள் ஆதரவை உரக்க சொல்லுங்கள் தெரியாதவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் இன்று எந்த மீடியாவும் இந்த செய்தியை கொண்டு சேர்க்க மாட்டார்கள் . காரணம் உங்களுக்கே தெரியும் அனைத்து தமிழ் ஊடகங்களும் அரசியல் வாதிகளிடம் இருப்பதால் இதை ஒரு செய்தியாக கூட வெளியிட மாட்டார்கள் . அதனால் தயவு செய்து குருன் செய்தியாகவும் , மின்னஞ்சலாகவும் . துண்டு பிரசுரங்களாகவும் வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் . இது நமது பிரச்சணை நாம் தான் முன் நிற்க வேண்டும் .

பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எந்த விதமான ப்ளாக் வைத்திருந்தாலும் இந்த நிகழ்வை உங்கள் ப்ளாக்கில் காப்பி பேஸ்ட் செய்தாவது வெளியிடவும் . நாம் தான் இப்பொழது கொஞ்சமாவது நடுநிலையை நாட்டிற்கு கொண்டு சேர்க்கிறோம் . தயவு செய்து உங்கள் பிளக்கில் ஊழல் எதிர்ப்புக்கு ஒரு பதிவு போடவும் . செய்வீர்கள் ........ கண்டிப்பாக செய்வீர்கள் ..... நாம் எப்பொழுதும் நடுநிலையானவர்கள் என்பதை மீண்டும் பறை சாற்றுவோம்.

தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும் , வோட்டு போடவும் , இந்த பதிவு பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம் எந்த சுயநலமும் இல்லாமல் .............கேட்கிறேன் ..............

புதுடில்லி: ஊழல் ஒழிப்பிற்கான லோக்பால மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு குறித்து முறையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட அவகாசம் கேட்டதால் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடர்கிறது.
செய் அல்லது செத்து மடி என்று ஆவேசமாக குறிப்பிட்ட ஹசாரே, 'எனது இந்த போராட்டத்திற்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகிழ்ச்சி தருகிறது. இதுவரை எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துள்ளன; அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த போரட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு மிக முக்கியம். எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் ஊழல் செய்தால் அவர்களை எவ்வித முன் அனுமதி இன்றியும் விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் மசோதா ஒன்றே ஊழலை ஒழிக்க வழி' என்றார்.
இதற்கிடையில் மும்பையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் இந்தியா கேட் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றபோது அதை போலீசார் தடுத்தனர். தடையை மீறி அவர்கள் ஊர்வலம் சென்றனர். ஊழலுக்கு எதிரான இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஊர்வலங்களும் உண்ணாவிரதமும் நடைபெறுகின்றன.

ஊழலில் சிக்கியவர்கள் யாரும் தப்பி விடக்கூடாது , ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க உதவும் மசோதா உருவாகும் தருணத்திலேயே கடுமையாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையுடன் நாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை துறக்க தயாராகி வரும் காந்திய சிந்தனைவாதி அன்னா ஹசாரேக்கு க்கு நாடு முழுவதும் பலத்தரப்பு மக்களும் தங்களுடைய ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளனர்.

3வது நாளாக இவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தைத் தொடர்ந்து ஊழல் ஒழிப்பு லோக்பால் மசோதாவை உருவாக்க ஒரு கூட்டுக்குழு ஏற்படுத்த மத்திய அரசு சம்மதித்துள்ளது.இத்துடன இவரது கோரிக்கை நியாயமானது என்றும் , மக்கள் பிரதிநித்துவம் கேட்டும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர் கண்டிருக்கும் களம் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளன. அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இவர் இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இழுத்து சென்ற அரசியல்வாதிகள் பரிசுத்தமில்லாதவர்கள் என வர்ணிக்கிறார்.


இவரின் போராட்டம் ஏன் ? : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக லோக்பால் சட்டம் இயற்றும் நடவடிக்கையில், மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கான வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, ஊழல் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமென்றும், இந்த வரைவு மசோதா தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சரவை குழுவில், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பிரதிநிதித்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும், காந்திய தொண்டருமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் துவக்கியுள்ளார்.

டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 3 வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க டில்லி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளானவர்கள் இவரது மேடை அருகே கூடி வருகின்றனர். அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அரசியல்வாதிகளை புறந்தள்ளி விட்டார்.


ராணுவ வீரராக இருந்தவர்: கிசான் பபத் பபாரோ ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட மகாராஷ்ட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்திக் கிராமத்தை சேர்ந்தவர். இவரது வயது தற்போது 71. ஆரம் இளம்பிராயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு டிரைவராக இருந்த போது எதிர்பாராத விபத்து காரணமாக ராணு பணியை விட்டு பொதுநலச்சேவையில் ஈடுபட்டார். நதிநீர் இணைப்பு, தகவல் உரிமை பெறும் சட்டம், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளார். உயரிய பத்மபூஷண் விருது பெற்றுள்ளார்.


அரசியல்வாதிகள் பின்னால் தமிழக மக்கள்: அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு தமிழகத்தில் இதுவரை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது வியப்பாக உள்ளது. ஊழலுக்கு எதிராக சரியான விழிப்புணர்வு, தமிழக மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை; ஊழலால் ஏற்படும் கடும் விளைவுகளை தமிழக மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளை நம்பி அவர்கள் பின்னால் அலையும் தமிழக மக்கள், ஊழலுக்கு எதிரான இத்தகைய போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.


அடுக்கடுக்காக பிரமிக்க வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம். இப்பட்டிப்பட்ட செய்திகள் காந்தியவாதியான அன்னா ஹசாரேவின் கோபத்தை, ஆவேசத்தை நியாயப்படுத்தத்தான் செய்கிறது. காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழல் ஒழிப்பு மசோதாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.


அவருக்கு சாதாரண மக்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது . பொதுநலத்துக்காக போராடும் அன்னா ஹசாரேவுக்கும் நமது வாசகர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

Tuesday, April 5, 2011

நமக்கு பேரு ''இந்திய குடிமகன்...


தே
ர்தல் வந்து,
நம்ம வீடு வீடா தேடுது ,
தெரியாத முகமெல்லாம்
நம்முன்னே நாணுது ....

னங்கொண்ட தலைகளெல்லாம்
இப்ப தலை கீழா நடக்குது ..........
ட்டி வச்சா ஆனவமெல்லாம் ,
அடிபட்டது போல் ஆகுது ....

டங்காம திரிஞ்சதெல்லாம், ஐயோ !
பாவமுன்னு சொல்ல வைக்குது....
டக்காத கால்களெல்லாம் ,
நடை பயணம் போகுது ........

டிப்பிலே உச்சம் தொட்டு ,
நாய் நரியெல்லாம் நாடகமும் நடத்துது .....
கொசுக்கூட செல்லாத இடமெல்லாம் ,
கொடிநடையா கால்கள் நடக்குது ......

தேன் சொட்டும் வார்த்தையாலே ,
நம்ம திகைக்கத்தான் வைக்குது ........
கைவனும் இப்ப உயிர் நண்பன்னு ,
தழுவி ஊரைத்தான் ஏய்க்குது....
தெல்லாம் அரசியல்ல சகஜமுனு ,
தத்துவமா வாய் கிழியுது ........

யிரை குடித்த ஊழலெல்லாம்,
உலகெல்லாம் நாருது.......
நாற்றத்தின் நடுவிலேயும் ,
பழிவாங்கல் இதுவென்று ,
நமட்டு சிரிப்பு சிரிக்குது .....

வீழ்ந்த மக்களை எல்லாம் ,
விலை கொடுத்து வாங்குது....
னம் பொறுக்கா கதரியோரை,
காவல் கொண்டு குடையுது ....

டமையை சாதனை என்று ,
தம்பட்டம் தான் அடிக்குது ,,,,
தை கூட செய்யாத சிலது ,
குறை சொல்லி திரியுது .......

குற்றங்கள் பல செய்தால் ,
குத்தகை வேட்பாளர் ஆகுது ,,,,,
டிச்சதுல சில்லறைய ,
செலவினமா காட்டுது ......

வேண்டியவன் இவனென்றும் ,
நம் இன, மதத்தோன் இவனென்றும்,
நம்மளும் ஓட்டு போடுது ........
போட்ட பின்னாடி, அடிமை என்றே
எண்ணி வாடுது ........

வாக்குறுதி எல்லாம் இப்ப ,
வக்கற்று போகுது .......
நாதியற்ற நாட்டுல ,
நமக்கு பேரு
''இந்திய குடிமகன் ;;......
---
பேச தெரிந்தும் ஊமையாய்
கவிதை பூக்கள் பாலா

Monday, March 28, 2011

தேர்தல் சிறப்பு கருதி இந்த பதிவு :

இது என்னுடைய கவிதை அல்ல, இது வரை இங்கு வேரு யாருடைய கவிதையும் பதிவிட்டதில்லை. முதல் முறையாக நடப்பு அவலத்தை அழகாக வடித்ததால் இங்கே பதிவிட்டேன் அவ்வளவே கவிதை ஆக்கம் ( kavithai for karuna)


கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!



தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!



சொல்லிச் சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.



சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!



பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!



தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே!



இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் - உனை எப்போதும் மறவாது தமிழினம்!



தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது! தலைவன் நீ என்ன செய்தாய்!



தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து, முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!



பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க! எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும் வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்



குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன் சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!



தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன் மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம் ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!



இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன் அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள் இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!



தமிழனை குறைவாக எடைபோட்டாய்! தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்! முடிந்தது உன் ஆட்சி! மடிந்தது உன் சூழ்ச்சி!



அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்! அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை அப்படியே பொசுக்கட்டும்! ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்! அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்! அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்! அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!



சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

நன்றி : http://tamilmakkalkural.blogspot.com/2010/09/india-today-kalaignar-karunanidhi.html

Wednesday, March 23, 2011

புன்னகையின் வலிமைதானோ ! ...


நீ சில்லறையாய் சிதறவிட்ட
சிரிப்பொலியை ...
சிதறாமல் சிறைபிடிக்க
கையேந்தும் என் அனிச்சை செயல் ......
உன்னிடத்தில் உறவாடும்
என் காதல் தான் காரணமோ ......

கட்டி அனைத்து தழுவவில்லை
காதல் ரசம் பேசவில்லை
முத்தம் கூட முயன்றதில்லை
உன்பின்னே அலைந்ததில்லை
உன் வாசம் தேடி வந்ததில்லை
இருந்தும் உன் காதல் எப்படி ......

என்னை கடக்கையிலே
இதழ்யோரம் நீ வடித்த
புன்னகையின் வலிமைதானோ !
பெண்மைகள் சுற்றி பலரிருந்தாலும்
உன்னை மட்டும் சுருட்டி வைத்த
என் விழி தானோ ....
உன் காந்த விழிக்கு ஏற்ற
இழு விசையும் நான் தானோ !

இறுகிய என் இதய கதவும் ........
இன்று மண்ணில் குழைத்து
நீ செய்யும் வடிவம் தானோ ! என் நிலை ...
மாற்றங்கள் வந்ததடி என்னுள்ளே
உன் புன்னகையின் வலிமையாலே ........
கவிதை பூக்கள் பாலா

Wednesday, March 16, 2011

அவன் களவானி பயல் தானே !


சிறு வயது சாபங்கள் .....
சிலநேரங்களில் பலித்து விடும் போல ,
ஆம் , அறியாத வயதினிலே ,
அறிந்து செய்த சிறு சிறு திருட்டு தனம்
சாபத்தை பெற்று தந்தது ,
களவானி பயலுக்கு வாக்கப்பட போறே என்று !,
விளையாட்டாய் சிரிந்து மகிழ்ந்த நான் ,
இன்றும் அதே புன்னகையில் .....
சாபம் பலித்து விட்டதே என்று .......
இதய பெட்டகத்தில் பாதுகாத்த என் காதலை ,
களவாடி இதயத்தில் பதுக்கிக்கொண்டான்
என்னவன், அவன் களவானி பயல் தானே !
- கவிதை பூக்கள் பாலா
..

Saturday, March 5, 2011

காதல் நம் காதல் ஆகும்...


என் கண்ணுக்குள் வாழ்பவள் நீ
கவிதையில் கலந்திருப்பவள் நீ
உணர்வில் உறைந்திருப்பவலும் நீ
என்னில் நிறைதிருப்பவள் நீ
என் வாழ்வில் வசந்தமும் நீ
உன் காதல் விடை சொல்லும்
என் வாழ்வும் நீ என்று ..........
உன் காதல் வரம் வேண்டி தவமிருக்கும் என் காதல்
பதில் கொடு காதல் நம் காதல் ஆகும் .......
- கவிதை பூக்கள் பாலா ..

Tuesday, February 15, 2011

தொடர்வண்டியில் துடித்த இதயம் - துடிப்பு - 2

தொடர்வண்டியில் துடித்த இதயம் - துடிப்பு -1


கண்களாலே
கவிபடித்த என் இதயம் ,
புரியாத இன்பத்தில் ஆனந்த கூத்தாடியது .
தழதழக்க நினைத்த நாவிற்கு ,
தடையுத்தரவு போட்டது உள்மனது .
குயிலே குரலெடுத்து கூவமாட்டாயா ?
ஏங்கி தவித்தான் என் சேவியேன் .

செவ்விதழ்கள் நடனமாடி செந்தேனை
வார்த்தையாய் வடித்தாள் செந்தாமரை..
உணர்வுகொண்ட என்செவியோன்
சிந்தாமல் கையேந்தி,
தன்னகத்தே பதுக்கிக்கொண்டான் .
" பூங்கா நகரம் எத்தனை நிறுத்தம் அடுத்து வரும் "
இதுவே தேவதை இதழ்கள் வடித்த தேனின் சுவை .
பதிலுரைத்தேன் பாதி நினைவில்
அடுத்த நிறுத்தம் " என்று .....
பதிலுக்கு மின்னலாக வெட்டிச்சென்ற
தேவதையின் புன்னகை,
மின்னலின் மின்சாரமாய் .....
"இடையில் கோட்டை நிறுத்தம் வரும்மல்லவா ? "
வஞ்சி கொடியாள்,
வார்த்தையால் தர்க்கம் செய்தாள் ...
பெண்ணே உன் இடையழகால் கோட்டை என்ன ?
கொடிகளும் உன் பாதம் தழுவும் ,
என் நினைவலைகள் ..
கற்பனையில் தடம் புரண்டது ....
கொடியிடையாள்,
நெற்றியில் கடலலைகளை உருவாக்கி ,
என் பதிலுக்கு காத்திருப்பது புரிந்தது ...
"ஆம் " என்றே நாணத்தில்
தலையசைத்துப் புன்னகைத்தேன் .

பாலைவனத்தில் பயணிக்கும்,
இரண்டு ஒட்டகத்தின் நிலைதானோ ......
இடைஞ்சல் இல்லா இந்த அறை.
என் வார்த்தை பூக்களைத் தொடுத்து,
வஞ்சியின் கழுத்தில் மாலை சூட நினைத்தாலும் ,
அழகின் அழகு மயக்கத்தில் வார்த்தைகள் தடுமாற ...
உள்ளம் உள்ளுக்குள்ளே போரிட்டது.......
என்ன என்று வினவியே,
வில்வித்தை செய்தாள் தன் விழியால் ...
- இதயம் தொடர்ந்து துடிக்கும் .....
- கவிதை பூக்கள் பாலா ...

Sunday, February 13, 2011

காதலர் தின நல் வாழ்த்துக்கள்

காதல் உலகில் என்றும் காதலித்து கொண்டே இருக்கும் உயிரினங்கள் வாழும் மட்டும் ....................

Thursday, February 10, 2011

தொடர்வண்டியில் துடித்த இதயம் ......




கண்ணிற்கு கடைசி முனை காட்டும்
நெரிசலற்ற தொடர்வண்டி நிறுத்தம்.
தொடரந்து சென்ற என் பார்வை சில்லிட்டு சிலிர்த்தது.
துள்ளிச் செல்லும் புள்ளிமானா ,
சுடிதார் சுமந்த சுவர் சித்திரமா !,,
திகைத்து நின்றது எனது கண்கள்.
பறந்து செல்லும் தொடர்வண்டியில்
பயணிக்க நினைக்கையில்
பாவை அவள் இடைமறித்தால் தன் அழகுக்கொண்டு .
ஆட்டம் கண்ட சுயநினைவு,
சுற்றித்திரிந்தது நிழலாக அவள் நினைவாக....

ஒயிலாக நடைபோட்டு
ஒட்டியாணம் அணியா இடையசைத்து
ஒய்யாரமாய் வண்டிக்குள் வந்தமர்ந்தாள்.
வண்டியின் அறைக்குள்,
அவள் பார்வைகள் பரிமாறும் இடம் தேடி அமர்ந்து,
என் உடல்களும் உதவின நண்பனாய்.

சிறுவயது நண்பர்களோடு தொடர்வண்டி ஓட்டிய
நினைவுகள் வந்து செல்ல,
தொடர்வண்டி தன் பயணத்தை தொண்டையை கணித்துக் கொண்டே தொடங்கியது ....
சித்திரத்தின் சிறப்பு கருதி,
இறுதி வடிவம் தீட்டும் ஓவியனாய்,
ஆடைகளை சரிசெய்தால் சிற்றிடையாள்.
சீறிப்பாய்ந்த காற்றும், அவள் தேகம் பட்டு தென்றலாய் கவி படித்தது ஏனோ !. ஐவிரல்கள் துணைக்கொண்டு,
மென்மையாய் வருடி தூங்க வைத்தாள் முடியிழைகளை.
----- தொடரும் ..
- கவிதை பூக்கள் பாலா ...
குறிப்பு : கவிதை தனமா எழுத முயச்சிக்கின்றேன் .........குற்றம் குறையைசுட்டவும் , ஓகே என்றால் கொஞ்சமா கொட்டவும் வாங்கிக்கிறேன்.......

Tuesday, February 8, 2011

என் காதலில் வாழ்வதும் நீயே!





















காதலியே என் விழி உனை கண்டபின்னே!
காணும் காட்சி எல்லாம் நீயே !
கனவிலும் கண்ணடிப்பவள் நீயே !
விழி தேடும் தேடல் எல்லாம் நீயே !
பேசும் போது பேச்சின் ஊடே நீயே !
படிக்கும் புத்தகமெல்லாம் நீயே !
எழுதும் எழுத்தெல்லாம் நீயே !
இன்ப துன்பமெல்லாம் நீயே !
வாழும் வாழ்வெல்லாம் நீயே !
உயர்ந்தால் உயர்வில் நீயே !
வீழ்ந்தால் என் மரணத்திலும் நீயே !
என் காதலில் வாழ்வதும் நீயே !
- கவிதை பூக்கள் பாலா
..

Thursday, February 3, 2011

உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !














நட்புக்கு
பொருள் விளங்க நாம் இருவர் ,
என்றேதான் சொல்லி வந்த உறவுக் கூட்டம்,
எதற்கு இந்த நட்பு இப்போ,
விட்டு தொலையேன் உறவுகள் சாடல் .

வாழ்க்கை சக்கரத்தை திருப்பி சுற்றி
கண்ணயர்ந்த வேளையிலே
நம் நட்பு பாதை திரைப் படமாய்,
நினைவுத் திரையில் ,
நொறுக்கு தீனி , விளையாட்டு மட்டுமே
பெரிதாய் தெரிந்த பள்ளிப் பருவம்.
நான் வரவில்லை என்றால் ரிக்சாவில்
கூட அமர மறுத்த நல்ல தோழனாய் ,
என் காச்சலுக்காக நொறுக்கு தீனியை
மறந்து உபவாசம் இருந்த உற்றதோழனாய் ,
நம் நட்பை கண்டு உள்ளம் பூரித்த,
நம் உறவு கூட்டம் .

வீட்டில் அடம் பிடித்து ,
சேர்ந்தெழுதிய நுழைவு தேர்வு ,
என் மதிப்பெண்ணுக்கும் நீ ஒருவனாய்
செலுத்திய கடவுள் நேர்த்திகடன்.
உறவுகளின் சிறு சந்தேக கண்ணோடே
கடந்து சென்ற நம் கல்லூரி வாழ்க்கை ...

இன்ப துன்பம் சேர்ந்தே இருந்த
நம் நட்பின் ஊடே ,
சிறு சலனமும் கண்டதில்லை
இதுநாள் வரையில் ...
நம் நட்பின் எல்லை நாமறிவோம்
வாலிப கண்ணியம் காத்தே .....
நல் வாழ்க்கை துணையோடு, நாம்
பயணிக்கின்றோம் இல்வாழ்க்கை பயணம் ,

கண்ணில் சுடுநீர் கசிய
நீ சொல்லிய வார்த்தை(வாழ்க்கை) யதார்த்தம் ...
"உன்னவனுக்கு உன்மீது நம்பிக்கை அதிகம்,
அதனால் என்மீது வருத்தம் .
என்னவளுக்கு என்மீது காதல் அதிகம் ,
அதனால் உன் மீது வருத்தம் (கோவம்) .
நம் நட்பிக்கு நம்மீது நம்பிக்கை அதிகம்
அதனால் நம் நட்பை குறைத்து கொள்ளலாம் .
உன்வாழ்க்கை நலமாய் இருக்கும் ."
என்னை உருக்குலைத்த வார்த்தைகள் தோழா !

இப்போதும் நம் நட்பே வென்றதடா என் தோழா !
என்வாழ்க்கை நலமாய் இருக்கும் என்றாயே !
நட்பு ,
நட்பை வாழவைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கும்.......
மேலும் உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !

- கவிதை பூக்கள் பாலா
...

Wednesday, February 2, 2011

கொலை பொருள் அறியவே அவா..





















முச்சந்தியில நிக்கவச்சி ,
கழுத்துக்கு கலர் கலரா மலையெல்லாம் போட்ட மனிதா !
கவுரவமுன்னு பதிலுக்கு தலையாட்டி நின்னபோது ,
என் தலை மட்டும் தரையில தனியா !
ஒன்று மட்டுமே புரியவில்லை ,
என் முச்சந்தி கொலை எதற்கு ?
என் தவறால் யார் கற்பும் பறிபோனதோ !,
இல்லை கொலை குற்றம் செய்தேனோ !,
கொள்ளை கொள்ளையாய் அடித்தேனோ !
தீர்ப்பு எழுதாமலே கொடும் தண்டனையா ?
சாவிற்கு பயப்படேன் மனிதா !
கொலையின் பொருள் அறியவே அவா !!
சாமிக்கு பலியிட்ட ஆட்டின் ஆன்மா !
-- கவிதை பூக்கள் பாலா .

குறிப்பு : இதே மாதிரிதான் சில மனிதனின் ஆன்மாவிற்கும் சந்தேகம் கொலைபொருள் விளங்காமலே இன்றைய நிலையில் மாண்டு போகின்றது தீவிரவாதம் என்ற பெயராலே .....
...

Monday, January 31, 2011

நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........



















டற்கரை
ஓரம் எங்க வீடு ,
கடலுக்குள்ளே எங்க வாழ்வு ,
கட்டுமரம் எங்க வாழ்வோடு ,
நித்தம் கடலில துடுப்போடு ,
கடலுக்குள்ளே எங்க சோறு ,
கரைச் சேர்த்ததான்
வாழும் சான் வயிறு ,

டலில தெரியல எல்லை கோடு
காற்று அடிப்பதில் தெரியுதா? அண்டைநாடு,
உயிருக்கு பயந்தே படகுல பயணம் ,
சிங்களவன் காளானா வருவத நினைத்து ,
மனிதத்த தின்னும் சிங்கள பேய்கள் ,
நித்தம் பசிக்கு தின்ன தமிழன் உயிரா !

ரையில உயிர்கள் சொந்தத்த எதிர்ப்பார்க்குது ,
கொடுமையின் அழுக்குரல்கள் கரையேறி சாகுது ,
நடுக்கடலில மிதக்கும் எங்களின் தீரம் ,இப்ப
கரைதட்டி போனதே சிங்கள நாய்களின் வெறியலே!
வழிப்பறி செய்யுது சிங்கள கடற்படை கடலிலே !
பிழைக்க வழியேது தெரியாம துடிக்குது மீனவ குடும்பமே !
விஷத்த கக்கி ஈழத் தமிழன கொன்ன சிங்கள் பாம்பு ,
நாக்க நீட்டி தமிழக மீனவன கொன்னு நோட்டம் போடுது .

மிழினம் காப்போம் தாளுல மின்னுது ,
தரம்கெட்ட தமிழக அரசியல் சவக்குழிய தேடுது ,
வோட்டுக்கு மட்டுமே தமிழக மீனவன், அவன்
சடலத்தைக் காட்டி வோட்டு வேட்டையும் நடக்குது ! ,
உறவுகளை இழந்த உணர்வற்ற தமிழகம்,
இன்னமும் முழிக்கல டாஸ்மார்க் மயக்கத்துல,
உணர்வுகள் தள்ளாடுது மானாட மயிலாட ,
இலவசங்கள் பல்லிளிக்குது பிணத்துக்கு வாய்கரிசி போட.

த்தியில சீட்டு இல்லைன்னா தன் சீட்டுதான் தங்கள ,
நடவண்டிய தள்ளிகிட்டு டெல்லியில பிசைஎடுக்க பறக்குது ,
தமிழன் பிணவாடை அடிச்சாலும் , மூர்ச்சையாகி நின்னாலும்,
விதவிதமா அறிக்கை விட்டே தினம் ஆளத்தான் கொல்லுது .
தமிழா! நீ முழிக்கலன்னா மண்ணோடு மண்ணாயிடுவ ,
நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........
- கண்டன குரலோடு கவிதை பூக்கள் பாலா

கண்ணீர் பெருகும் மீனவன் பாடல் :


.... கண்டிப்பாக வீடியோவை ஒருமுறையாவது பார்க்கவும்...
...

Friday, January 28, 2011

நம்பிக்கை பொய்த்தவன் தேடல்...

















விண்ணை தொட முயன்று
மூர்ச்சையாகி போனவனை,
மண்ணை தழுவ நினைத்த நிமிடம்,
வாரி தன்னுள் அணைத்துக்கொண்டது,
நம்பிக்கை பொய்த்தவன் தேடல் ...
- கவிதை பூக்கள் பாலா ...

வாந்தி : பில்டிங் ஸ்ட்ராங் , பேஸ் மட்டம் வீக்கு
.....

Tuesday, January 25, 2011

நீ மண்ணோடு சென்றிடுவாய் .......



















சுதந்திர நாடுதான் நம்ம நாடு ,இதில்
நேர்மைக்கு சுதந்திரம் இல்லையேன்னு தோனுது .
குடியரசு தான் இன்று நம்மள ஆளுது ,
இதுல குடிமக்கள் தான் தினமும் வாடுது .
அன்னியன விரட்ட வேகமோ இருந்தது,
அவன் அன்னியம் ( அடுத்தவன் )என்பதாலா ,
என்று எண்ணி நொந்து போகுது .













உள்ளுக்குளே
இருந்து கிட்டு ,
குடியரசு என்ற பெயரோட,
நம்ம உசுரத்தான் வாங்குது.
நடப்பதெல்லாம் குடும்ப சண்டை,
பேச்செல்லாம் பெருசாதான் இருக்குது
செய்யும் செயல்கள்தான்
மானம் கெட்டு போகுது ,
பாசம், பாகம் சரி இல்லையே,
யாருக்கும் துணிவில்லையே என்று
மக்கள் மனம் போராடுது ,
தெருவில் நின்று போராட
வக்கற்று தான் போனது ,
போராட நினைத்தாலும்
ஏளனமும் செய்யுது .

உள்குத்தா நடப்பதால
உடம்பெல்லாம் வலிக்குது,
இருந்தாலும் நாம இந்தியன்னு வெளியில
பல்ல இளிக்கத்தான் தோனுது ,
இத ஒன்ன வச்சிக்கிட்டு
மக்களையும் ஏய்க்குது ,
இதற்கு பேரு குடியரசு(மக்களாட்சி)
அதுக்கொரு நாளும் வச்சி கொண்டாடுது .

கொள்ளையடிப்பவன் கூடாரமா !
குடியரசு என்றோ மாறி போச்சுது ,
குட்ட குட்ட குனியும் காலம்
மலையேறி போச்சுதுன்னா,
கொள்ளையடிப்பவனை எல்லாம்
கொல்லபுரம் கழுவசொல்லும் காலம்
வெகு தொலைவில்லை என
எச்சரிக்க தோனுது .

முழித்துக்கொள் குடியரசே !( மக்களாட்சி )
இல்லை நீ மண்ணோடு சென்றிடுவாய் .......
... வாழ்த்துக்களோடு கவிதை பூக்கள் பாலா ....
..

Sunday, January 23, 2011

என்னை கழட்டித்தான் விட்டு புட்டான் ( லேட்டஸ்ட் காதல் )















குட்டி சுவற்றில் நின்னுகிட்டு ,
சைட்டு தான் போட்ட மச்சான்.
குரங்கு குட்டி கரணம் போட்டு ,
பேருந்து சாகசம் செஞ்ச மச்சான்
தினந் தினம் காதல் பல வேடம் போட்டே தான்,
நண்பகிட்ட பிச்சை எடுத்து,
பைகொல்லம் ஓட்டி வந்தான்.
மொபைல்ல பல விதமா,
மொக்கையெல்லாம் போட்ட மச்சான்,
முட்டி மோதி காதலுன்னு,
கண்ணடிக்க வச்சிப்புட்டான்.
ஊர் ஊரா சுத்தி வந்து,
கடைசில என்ன கவுத்துப் புட்டான் .
பின்னே நண்பன்தான்னு என்ன யேச்சிப் புட்டான் .
இப்ப என் தோழி சூப்பருன்னு,
என்னை கழட்டித்தான் விட்டுப் புட்டான்.
அவன் நண்பனை எனக்கு அறிமுகம் செய்யாமலே !
- கவிதை பூக்கள் பாலா
குறிப்பு : அடிக்க வரவங்க ஒட்டு போட்டுட்டு வாங்க தெளிய வச்சி அடிக்கலாம்
..

Friday, January 21, 2011

இடம் தர மறுப்பதேன் ?



பூவே உன்னை நேசித்தேன்,
காதலி நினைவாலே !
அன்பு கொண்டு காதலிக்க,
அவளும் எங்கே இருகின்றாள்.
கனவில் நித்தம் கண்ணடிப்பவளே !
உன் முகம் காட்ட மறுப்பதேன் ?
இதயத்தில் தினம் தினம்
ஓவியம் வரைபவளே !
என் காதல் குடிபுக,
உன் இதயம் இடம் தர மறுப்பதேன் ?
...

Friday, January 14, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...














தமிழனுக்கு தலை நாளாம்
பொங்கல் எனும் திருநாளாம்,
உழுது வாழ்பவனுக்கு
உன்னதமான பெருந்நாளாம்,
கட்டி ஆண்டவனிடம் காளைகள்
சன்மானம் பெறும் நன்நாளாம்,
வெண்திரையில் கவர்ச்சி காட்டி
பெரும் கல்லாக்கட்டும் கலைநாளாம்,
பூமி மகளை பலவிதமாய்
அலங்கரிக்கும் மணநாளாம்,
விதவிதமாய் உடுப்பு போட்டு,
பொங்கிவரும் அழகை கண்டு,
பொங்கலே! பொங்கல்! என்று
வாழ்த்து சொல்லும் தைத்திருநாளாம்....
- இனிய பொங்கல் நல்வாழ்த்துகளோடு
கவிதை பூக்கள் பாலா
..

Thursday, January 13, 2011

தோழமைக்கு கொடுத்த (தொடுத்த ) பரிசு




















பரிசு கொடுக்க விரும்பினேன் தோழியே !
பலநூறை புரட்டி விட்டேன் ,
புரண்டு புரண்டு அழுது விட்டேன்.
விடை தெரியாது , விழி பிதுங்கி
கனநேரம் கண்ணயர்ந்தேன் , கனவிலும்
புன்னகைத்தாய் ! பரிசெங்கே என்றேதான்.

உன் புன்னகையின் ஒளியினிலே
புது ஞானம் பிறந்தடி தோழியே !
கவிதையின் ஊடே நம் நட்பு பிறந்ததால்
கவிதையை பரிசளித்தால் நலமன்றோ தோழியே ! ,
முழுமையாக முடிவெடுத்து ,
கவிதை தொடுக்க முனைதேன் தோழியே !.

என் தமிழில் வார்த்தைகள் பஞ்சமில்லை என்றாலும் ,
உன்முன்னே என் கற்பனை பஞ்சமானதடி தோழியே ! ,
பலம்கொண்டு பலமுறை, என்தமிழ் வார்த்தைகளை
பிரசவித்தேன் ஆனந்த வலிகொண்டே தோழியே !.,
ஆனாலும் ஏனோ இடை மறித்து பல்லித்தது ,
உன் அழகிற்கு இணை இல்லை என்றேதான் தோழியே !

பல தவங்கள் புரிந்தே பின்னே , புலப்பட்டது யாதென்று ,
உனை வர்ணிக்க இந்த ஒற்றை வரிபோதுமென்று தோழியே !
''என் தமிழ்தாய் ஈன்றெடுத்த தலை
பிரசவ குழந்தையடி நீ !''

ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்ல இயலாததையும்,
சிற்பியாலும் செதுக்க முடியாத சிற்பத்தை ,
இந்த ஒற்றை வரி சொல்லி இருக்கும் ,
நீ யார் என்றேதான் தோழியே !

இன்னுமா! புரியவிலை என் தோழியே !,
தலை பிரசவ குழந்தையை காணும் தாய்க்கு,
துச்சமடி உலகில் கிடைக்கும்(கொடுக்கும்)
பொருளனைத்தும் தோழியே !,
மறக்க முடியா பரிசு..........
இதுவல்லவோ !
என் அழகு தோழியே ! .....
- தோழமையுடன் கவிதை பூக்கள் பாலா

குறிப்பு : என்னிடம் பரிசு கேட்ட தோழிக்கு , நான் வடித்த கவிதை பரிசு
இதற்கு என் தோழியின் பதில் என்னவாக இருந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போன் .

..

Tuesday, January 11, 2011

இதுதானே நியதி !
















உதடுகள் சண்டையிட்டு வார்த்தை பிறந்தது,
கண்கள் பேசிக்கொண்டு காதல் மலர்ந்தது,
கைகள் இணைந்து நட்பு என்றது ,
உடல்கள் பிணைந்து (காம) பசி தீர்த்தது,
உயிர்கள் உறவாடி உறவை வளர்ந்தது,
குரலோசைகள் ஒன்றாகி உயர்வு கிட்டியது,
இன்பம் துன்பம் முட்டிவாழ்க்கை என்றது .
ஜெயித்தது உடன் ஒட்டி கொண்டது, .
இன்பம் இதுவல்லவோ வாழ்க்கை என்றது ,
துன்பம் போதுமட என்று சொல்லவைத்தது,
வாழ்க்கை, இதுதானே நியதி என்றது .....
- கவிதை பூக்கள் பாலா


...

Monday, January 10, 2011

நாவரசி (நிர்வாண நடனம் )


மெகா இரண்டு வாயிற் கதவுகள்
பாதுகாக்கும் நடன அரங்கில் ,
முப்பத்தி இரண்டு காவலர்கள்
சுற்றி தீவிர சோதனையிட,
பார்த்து பரவசப்பட ஜொள்
பார்வையாளர்களை அனுமதிட ,
நீண்ட பதுங்கு குகைக்குள்ளிருந்து
நிர்வாண நடனமாடுகிறாள் நாவரசி ......
- கவிதை பூக்கள் பாலா .


.........

Sunday, January 9, 2011

பார்த்து ரசிக்க....


வானில் பார்த்து ரசிக்க நிலவுண்டு ,
பூமியில் ரசிக்க நீ மட்டுமே எனக்குண்டு ,
நிலவு பார்த்து ரசிக்க ,
நீ என் வாழ்க்கை முழுக்க
என்னவளே !.........
- கவிதை பூக்கள் பாலா

Thursday, January 6, 2011

விண்னை தொடும் நம் காதல் .......



















உன்
விழிகளுக்கு,
எனை சுட்டெரிக்க பணித்த தேவதையே !
உன்னுடன் பிரிவில்லா உறவாடும்,
உன் உறவுகளிடம் வினவிப்பார் !

ன் கூந்தலில் குடி இருக்கும்
ரோஜாவை கேட்டு பார் ! ,
என் புன்னகையின் வலி புரியும்.

தோடுகளிடம் கேள்வி தொடுத்து பார் !,
உனை தொடரும் என்னிலையை,
தொடர்கதையாய் சொல்லும் .

ன் தோல் தழுவும் துப்பட்டாவை
முறுக்காமல் விட்டுப்பார் !,
தாவி எனை தழுவிக்கொள்ளும் .

ன் கால் தடங்களிடம்
உளவுச்செய்தி உளற சொல்லிப்பார் !,
உனை பல காலம் பின்தொடரும்
உளவாளி நான் என்று எச்சரிக்கும்.

ன் சுவாச காற்றிடமும்
கனிவாய் கதைத்து பார் !,
எனை கடக்கும் நேரம் அதன்
உடல்சுடும் உண்மையை உரைக்கும்.

நீ வடிக்கும் வியர்வையை
விரைவாக கேட்டு பார் !,
தீர்த்தமாய் என் தலை சுமைக்கும்
பக்தியை பறைசாற்றும் .

நீ கடக்கும் பாதையை
என் வாழ்க்கை வீதியாக்கிய காதல் ,
உன் இதயத்தில் சமாதி ஆகும் முன் ,
உன் காதலுக்கு விடுதலை கொடு ,
விரைவில்
விண்னை தொடும் நம் காதல் ............
கவிதை பூக்கள் பாலா

என் காதலுக்கு(கவிதைக்கு) வாழ்த்து சொல்லிட்டு போங்களேன் ....
என் கவிதைகள் தலை வணங்கி ஏற்கும்....