
நானும் ஒரு மனித இனமே !
வெண்மேகம் கன்னி பெண்ணாக
வானவெளியில் வலம்வந்தேன் ,
கதிரவன் காமத்தில் கருவுற்று கார்மேகமானேன் ,
காற்றின் மருத்துவத்தால் மழைத்துளியை பெற்றெடுத்தேன் ,
மகிழ்ச்சியை கொண்டாட,
உறவுகள் வானவேடிக்கை நடத்துது
பல கல்வி பயிலவே பூமிக்கு பயணப்பட்டேன் ,
இன்னல்களை கடந்தேதான் பூமிக்குள சென்றடைந்தேன்
சென்றடைந்த இடத்தை வைத்து,
மனித இனங்கள் எங்களையும் தரம் பிரித்தனர் ,
புனித தீர்த்தமாய் தலை சுமந்தவருமுண்டு ,
சாக்கடையாய் முகம் சுளிந்தவரும் உண்டு ,
கதிரவன் வந்து சூடான முத்தமிட்டு
ஆவியாய் அலைய விட்டான் வான்வெளியில்
மண்ணுலகில் மறித்து போனேன் ..............
- பாலா
No comments:
Post a Comment