Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label தத்துவ கவிதைகள். Show all posts
Showing posts with label தத்துவ கவிதைகள். Show all posts
Saturday, January 3, 2015
Tuesday, January 10, 2012
இது காதலின் தோல்வி அல்ல

உண்மை காதலில்
உறைந்திருப்பது அன்பு எனும் பொதுபண்பே !
ஆனால் காதலில் அன்பு மிகுந்திருப்பது
மிகுந்த சுயநலத்தோடு ஒரேஇடமே!
சொந்த பந்தம் தெரிவதில்லை ,
உற்ற நட்பும் உறைப்பதில்லை ,
சுற்றம் முற்றும் புரிவதில்லை ,
நினைவுகள் அற்று நடைபிணமாய் ,
நாதியற்று அனாதையாய் மாறுவதையும்
மறந்தேதான் தவிக்கின்றது .
வேற்று நினைவுகள் வருவதில்லை ,
ஒற்றை நினைவு மனதில் குடிபுகுந்து
வீட்டுக்குள்ளே அனாதையாய்
விலக்கி வைக்கும் காதலே !
ஒரு நொடியும் ஒரு யுகமாய் ,
ஒரு பொழுதும் ஒரு ஜென்மாய்
புலம்ப வைக்கும் காதலே !
தெளிவில்லா போதை மயக்கத்திலே
சுற்றித்திரியும் காதலே
சுடு சொல்லையும் சுகமாய் சுமக்கும்
வடுக்களையும் பரிசாய் நினைக்கும் காதலே !
காதல் பொய்த்து போனாலே
கடைசி யாத்திரையையும் சுகமக்குதே காதலே !
கடமையை மறக்குது காதலே
கவிதை படிக்குது காதலே
மனதில் துக்கம் சுமக்கும் காதலே !
இருந்தும் வாழ்த்தும் உண்மை காதலே!
உருகுலைத்தே போகவைக்கும் காதலே
ஆனால் நலமாய் வாழ்வும் ,
வாழ்த்தும் உண்மை காதலே !
இது காதலின் தோல்வி அல்ல ,
இருவர் உறவின் தோல்வி .
தெரிந்தும் யாரும் விடுவதுமில்லை
காதல் யாரையும் விட்டு வைப்பதுமில்லை.
- கவிதை பூக்கள் பாலா
Friday, November 26, 2010
மண்டியிட்டு காதலை பெறாதீர்கள்

மண்டியிட்டு காதலை பெறாதீர்கள்
மனம் கவர்ந்து காதலை பெறுங்கள்
மாற்றங்கள் உடையில் (வெளி தோற்றம் ) மாறலாம்
கொண்ட காதலில் மாறாதீர்கள்
உண்மைகள் காதலில் காலம் தாழ்த்தலாம்
ஆனால் காதலின் ஆயுள் முடிவற்றது
காதலில் காமங்கள் இடையிடையே வந்து போகலாம்
காமமே காதலை உயிர்பிக்காது .
(தத்துவம்மாதிரி இருக்குல்ல) - பாலா
இந்த போடோவுக்காக எழதியது
Subscribe to:
Posts (Atom)
