என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label வாழ்த்து கவிதைகள். Show all posts
Showing posts with label வாழ்த்து கவிதைகள். Show all posts

Wednesday, January 14, 2015

''பொங்கலோ பொங்கல் ''

''பொங்கலோ பொங்கல் ''
வாழ்த்துக்களோடு உங்கள்
  கவிதை பூக்கள் பாலா
-------------------------------------------

பழையன கழிதலும், புதிய புகுதலும்
போகிப்பண்டிகையாய் அன்று. ....
கொண்டாட்டத்திற்கு எரித்தலும்,
ஓசோனில் ஓட்டையுமாச்சி இன்று...

கொண்டாட்டம் வேண்டும்
வடிவம் மாற்றலாமே !
வீதியை ஊரை நாட்டை
தூயமையாக்கலாமே இன்று
சேர்ந்து கொண்டாட்டம்
போடலாமே நன்று....

தமிழனில் திருநாள்
உழைப்பவன் பெருநாள்
விவசாயின் பொன்னாள்
விளைச்சலின் திருநாள்
கதிரவன் மகிழும்நாள்
வணங்கி போற்றும்நாள்

பொங்கலோ பொங்கல் என்றே
மனதிலும் சந்தோசம் பொங்கும் நாள்..
தமிழனின் கொண்டாட்டங்களில்
என்றும் முதன்மையான
பொங்கல் திருநாள்......

பொங்கலோ பொங்கல் என்று
ஆனந்தம் பொங்கட்டும்
தமிழன் தலை நிமிரட்டும்
விடியல் பிறக்கட்டும்
புதுப்பானை படையலும் போல
புதுமைகள் சிறக்கட்டும்,
குடும்பங்கள் தழைக்கட்டும்
சந்தோசம் பெருகட்டும்..........

வாழ்த்துக்களோடு உங்கள்
- கவிதை பூக்கள் பாலா

Wednesday, December 31, 2014

2014 திருமகளே... பிரிய விடைகளோடு

வினவாத இரவும் வினவிய ஆண்டு,
வாழ்வின் விளிம்பையும் உணர்த்திய ஆண்டு,
கொல்லவும் பிழைக்கவும் வைத்த ஆண்டு,
ஏமாற்றமும், மாற்றமும் நிறைந்தாண்டு,
வலிகளும் நம்பிக்கையும் தந்த ஆண்டு,
உறவுகளின் தரம்புரிந்த இன்னொராண்டு,
நட்பும் நடிப்பும் விளங்கிய மற்றொராண்டு,
கனவுகள் நிசத்தை நோக்கிய ஆண்டு,
குருட்டு நம்பிக்கை குதறிய ஆண்டு,
நிறைந்த நல்நட்புகள் மலர்ந்த ஆண்டு,
வெறுப்பும் நிறைவும் கலந்த ஆண்டு,
பணம் என்னை பந்தாடிய ஆண்டு,
இருந்தும் நம்பிக்கை தொலையாத ஆண்டு,
என் மரியாதை என்னை காத்த ஆண்டு,
வளமாய் மனம்மாற்றி கரைச்சேர்த்த ஆண்டு,
கனிந்த இதயங்கள் பூத்த ஆண்டும் நீயே
விடைப் பெறுகிறாய் வாழ்த்தினை தந்து.....
நன்றியோடு உனை மறவேன் சென்று வா


2014 திருமகளே... பிரிய விடைகளோடு
கவிதை பூக்கள் பாலா

Thursday, November 6, 2014

வயது அறுபது ஆனால் என்றும் நீ பதினாறு .....

குழந்தையாய்
திரையில் அறிமுகமாகி
சகலத்தையும் கற்றாய்
திரைத்துறையில்
சகலகலாவல்லவனானாய் .........
இமயம் முதல் குமரி வரை
திரைத்துறையில் நீந்தி
மகாநதியாய்  வலம்வந்தாய் ......
மாற்றங்கள் எதுவானாலும்
துணிந்து செயல்பட்டாய்
செவாலியர் சிவாஜியின்
செல்லக்குழந்தையானாய்
வேடங்கள் பல கண்டு
வீறுநடை போட்டு
ரசிகனை தொண்டனாய் மாற்றாமல்
தனிப்பாதை உனதாக்கி
இந்திய திரைவானில்
தன்னிகரில்லா இந்தியன்
திருமகன் நீயானாய்..
வயது அறுபது ஆனால்
என்றும் நீ பதினாறு
பிரபஞ்ச நட்சத்திரமாய் என்றும்
ஒளிர்வாய் நவரச உலகநாயகனே !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- கவிதை பூக்கள் பாலா

Friday, October 24, 2014

மரபுக் கவிதைகளாய் ஒளி பரவட்டும் ....

ன்பின் உறவாள் சுமக்கும் கருவிலும்
இனம் காணா ஒளி பரவட்டும் .......
குழந்தையின் அடையாள பெயரிலும்
அந்நியன் வார்த்தை சூட்டி தமிழை இகழா ஒளி பரவட்டும் .......
அழகையும் ஆடம்பரதையும் உட்கொண்டு சிசுவின்
உயிமையான தாய்ப்பால் மறுக்கா ஒளி பரவட்டும் .......
கல்வியைச் சுமையாக்கி குழந்தையை
பொதிச்சுமக்கும் விலங்காக்கிடா ஒளி பரவட்டும் .......
தாய்மொழி மறத்திட்டு, அந்நியன் மொழித் திணித்து
ஆராதிக்கும் மனப்பாங்கை மாற்றும் ஒளி பரவட்டும் .......
சிந்தனையை முடமாக்கி, புத்தகத்தை பிரதி எடுக்கும்
கல்விமுறை மாற்றத்தை  நோக்கி ஒளி பரவட்டும் .......
பருவத்தின் மாற்றங்கள் உண்டாக்கும் பாலின ஈர்ப்புகளை,
காதலென்று நினைக்கா பாலியல் கல்வி ஒளி பரவட்டும் .......
முதலாளிகளின் கூலிகளாக்கும் கல்விமுறையை
தூக்கியெரியும்  சமூக விழிப்பு ஒளி பரவட்டும் .......
 அன்பின் ஆழமறிந்து, காமம் எல்லையுணர்ந்து
வாழ்க்கை முறையறிந்து வாழும் ஒளி பரவட்டும் .......
குடும்ப உறவுகளுக்குள், சமூக நலன்களுக்குள்
நாட்டின் பற்றின் மேல் ஒளி பரவட்டும் .......
இன மதங்களின்  வன்மங்கள் குறைய
ஒரே கடவுள், அது அன்பே ! என்ற ஒளி பரவட்டும் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாக எண்ணா 
ஒளி பரவட்டும் .......
மனித மாண்புகளை மதிக்கும்
இரக்கம்  இதயத்தில் மலர ஒளி பரவட்டும் .......
தீவிரவாதத்தை திராணி இல்லாமலாக்கும்
அகிம்சை என்னும் ஒளி பரவட்டும் .......
எழுத்துக்களில் துணிவு, கருத்தில் தெளிவு ,
புரிதலோடு விவாதம் செய்யும் ஒளி பரவட்டும் .......
தமிழில் பிழையின்றி, இலக்கண நன்கறிந்து ,
தமிழின் அழகறிந்து, படைப்புகளை எழுதும்
தமிழ்பேரரிஞ்சர்களின் புகழ் ஒளி பரவட்டும் .......
பேச்சு தமிழில்  ஆர்வ கோளாரில் அரைகுறையாய் கிறுக்கும்
என்போன்றோருக்கு  அறிவு வளர ஒளி பரவட்டும் .......
 
 தமிழை முறையாய் இலக்கண மரபு
பயின்று மரபுக் கவிதை எழுதி , சான்றோரின் பரிசீலனைக்கு
பிறகு அச்சு பூக்களை தொடுத்து மாலையாக்கி
தமிழன்னைக்கு மாலைச் சூட புத்தக வடிவிலே வடித்தெடுத்து
 உங்களின் எண்ண விழிகள் வியக்கும் வண்ணம்
வார்த்தை வார்த்தெடுக்கப் பட்டு,
மரபுக் கவிதைகளாய்  ஒளி பரவட்டும் .......என்னும்
தன் இரண்டாம் படைப்பாய்
தோழி. கவிஞர் நளினி முத்து
தமிழன்னைக்கு படைத்திருக்கிறார்.
விரைவில் உங்கள் பார்வைக்கு,
உங்கள் பேராதரவை எதிர்நோக்கி..........
உங்கள் ஆதரவு  வரவேற்பு   ஒலி பரவட்டும் .......

- நட்புடன் கவிதை பூக்கள் பாலா
ஒளி பரவட்டும் புத்தக வெளியீடு விரைவில் என்ற ஒலி பரவட்டும்


Friday, January 14, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...














தமிழனுக்கு தலை நாளாம்
பொங்கல் எனும் திருநாளாம்,
உழுது வாழ்பவனுக்கு
உன்னதமான பெருந்நாளாம்,
கட்டி ஆண்டவனிடம் காளைகள்
சன்மானம் பெறும் நன்நாளாம்,
வெண்திரையில் கவர்ச்சி காட்டி
பெரும் கல்லாக்கட்டும் கலைநாளாம்,
பூமி மகளை பலவிதமாய்
அலங்கரிக்கும் மணநாளாம்,
விதவிதமாய் உடுப்பு போட்டு,
பொங்கிவரும் அழகை கண்டு,
பொங்கலே! பொங்கல்! என்று
வாழ்த்து சொல்லும் தைத்திருநாளாம்....
- இனிய பொங்கல் நல்வாழ்த்துகளோடு
கவிதை பூக்கள் பாலா
..