என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label காதல் நோய். Show all posts
Showing posts with label காதல் நோய். Show all posts

Tuesday, February 14, 2012

காதல் இனிமையானது




உலக காதலர்கள் அனைவருக்கும் காதலர்
தின வாழ்த்துக்கள்...



















காதல்
......
உலகம் முழக்க ஒற்றை சொல்
ஒலிக்கும் விதங்கள் வேறாகலாம்,
ஆனால் உணர்வுகள் ஒன்றன்றோ .

விழிகளின் வழியோ !
செவிகளின் வழியோ !
எழுத்தின் வழியோ !
நினைவுகள் வழியோ !
கேட்காமல் வருவது
காதல் ....

றவு என்றோ !
நட்பென்ரோ !
உணர்வென்றோ
உயிர் என்றோ !
வழிதேடி
உள்புகும் காதல் .....

பிடிப்பதை மட்டும் யோசிக்கும்
கண்டதை எல்லாம் யாசிக்கும்
சுயம் மறந்து வாழ்விக்கும்
வாழ்வின் நாட்களை கொன்ழழிக்கும்
உள்ளம் ஏதும் புரியா பூரிக்கும்
வாழ்வின் உச்சம் தொட்டதாக
எண்ணி கொண்டாடும்
வலிகள் இல்ல காதல் இருக்கும் வரை ......

காதல் இனிமையானது .....

- கவிதை பூக்கள் பாலா



Wednesday, September 1, 2010

என்னவனே !!!

என்னுள் நாணத்தை விதைத்தவனே !
மயக்கும் விழி காட்டி , என் நினைவை தொலைத்தவனே !
ஈர்க்கும் பேச்சழகில் என் இதயத்தை வருடுபவனே !
என் இளகிய மனதில் , இதமாக இம்சைப்பவனே !
வெண்மையான மனதிலே காதல் வண்ணங்களை தெளிப்பவனே !
குடும்ப காவலர்களை கண்னர்த்தி,என் இதயத்தை களவாடியவனே !
களவு போன இதயம், இருக்கும் இடமறிந்தும் ,
மீட்டெடுக்க முயலாமல் என்னை மதி மயக்கியவனே !
காணாத பல கனவை கண்ணுக்குள் நுழைத்தவனே !
உணராத உணர்ச்சிகளை உடலெங்கும் உண்டாக்கியவனே !
உண்மையான பாசங்களை, பாசாங்காய் எனக்கு உருமாற்றியவனே !
நட்பு எனும் வைரஸ்சை என்னுள் செலுத்தி,
எனக்கு காதல் நோயை கொடுத்தவனே! என்னவனே !!! - பாலா