
சிறு வயது சாபங்கள் .....
சிலநேரங்களில் பலித்து விடும் போல ,
ஆம் , அறியாத வயதினிலே ,
அறிந்து செய்த சிறு சிறு திருட்டு தனம்
சாபத்தை பெற்று தந்தது ,
களவானி பயலுக்கு வாக்கப்பட போறே என்று !,
விளையாட்டாய் சிரிந்து மகிழ்ந்த நான் ,
இன்றும் அதே புன்னகையில் .....
சாபம் பலித்து விட்டதே என்று .......
இதய பெட்டகத்தில் பாதுகாத்த என் காதலை ,
களவாடி இதயத்தில் பதுக்கிக்கொண்டான்
என்னவன், அவன் களவானி பயல் தானே !
- கவிதை பூக்கள் பாலா
..
தெரியாமல் எ டுத்தால்தான் திருட்டு
ReplyDeleteதங்கள் கவிதையைப் படித்தால் இதயத்தை நீங்கள்
விரும்பி தூக்கிக் கொடுத்ததுபோல் அல்லவா உள்ளது
அது எப்படி திருட்டாகும்?
அவன் எப்படி களவாணி ஆவான்?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அருமையான கவிதை..
ReplyDeleteஇதய பெட்டகத்தில் பாதுகாத்த என் காதலை ,
ReplyDeleteகளவாடி இதயத்தில் பதுக்கிக்கொண்டான்
என்னவன், அவன் களவாணி பயல் தானே
ஹி ஹி ஆமாம் கண்டிப்பாக களவாணி தான் ஆனா செல்ல களவாணி. கவிதை நல்லா இருக்கு நண்பா
களவானி.. களவானி.. ஒருவேளை அப்படி இருக்குமோ.??? ஒருவேளை இப்படி இருக்குமோ.??? இல்ல அவரு களவானியாவே இருக்கட்டும்
ReplyDeleteRamani @
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி , உங்களுக்கு தோழி ரேவா கமெண்ட் பதில் சொல்லும் என்று நினைக்கிறன் நண்பரே , ஆம் செல்ல கலைவாணி
வேடந்தாங்கல் - கருன் @
ReplyDeleteநன்றி நண்பரே
"ஹி ஹி ஆமாம் கண்டிப்பாக களவாணி தான் ஆனா செல்ல களவாணி."
ReplyDeleteஇவ்வளவு சரியா சொல்றீங்க நன்றி .......நன்றி
தோழி
தம்பி கூர்மதியன் @
ReplyDeleteஇல்ல அவரு களவானியாவே இருக்கட்டும்
நன்றி நண்பரே !
அருமை..வாழ்த்துக்கள்
ReplyDeleteமதுரை சரவணன் @
ReplyDeleteநன்றி நண்பரே !