என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா...

சொல்லாத துயரங்களில் சென்னை அழுவுதடா,
சூடான சென்னை என்ற பெயரும் மாறுதடா,
குடித் தண்ணீருக்கே அன்று குழாயடி சண்டையடா,
தண்ணீர் பிடிப்பதற்கே இன்று பாத்திரம் இல்லையடா,
நீரில் மிதந்தாலும் குடிக்க நல்ல தண்ணியில்லையடா,
குடிமக்கள் குதுகலிக்க சரக்கு தட்டுபாடில்லையடா
சூழும் தண்ணீரிலும் சுருட்டும் ஜென்மங்களடா,
சுற்றிக்கொஞ்சம் பாரடா நம்மக்கள் பாவமடா,
முடிந்த உதவிகள் செயலில் இறங்கி செய்திடுடா,
இடைஞ்சல் செய்யாமல், இயற்கையை வையாமல்,
இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா....


- கவிதை பூக்கள் பாலா
Like

தோழமைகளே !


மீண்டும் உங்களுடன் இணைகிறேன்....
மழையின் பிடியில் சென்னை...
எனக்காய், எங்களுக்காய் ...
வாடிய , வேண்டிய அன்பு நெஞ்சங்களே !
நெகிழ்ந்தே போனோம் உங்கள் அன்பிலே...
மனிதம் இறந்ததாய் நானே பலமுறை எழுத்தி இருக்கிறேன்
ஆனால் அது நம் மண்ணின் மகிமை ...
உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லி
தனிமை பட விரும்பவில்லை..
சந்தோசம் உங்கள் அன்பிலே விரைவில் 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மீண்டுவிடும்...

- உங்கள் கவிதை பூக்கள் பாலா
தொடுவானமும் பயப்படுகிறது
தன்னை தொட்டுவிடுமோ !
இந்த மழை வெள்ளம் என்றே....


Thursday, December 24, 2015

கூறுபோடும் ஈனபிறவிகளே

மின்மினி பூச்சிகளாய்
வெள்ள அறிக்கைகள் வெற்றுகூப்பாடுகள்,
ஊசலாடும் உயிரையும் உதாசினபடுத்திய
உயர்அதிகார மமதை வர்க்கங்களே...
மின்னாத ஏழ்மையின் வாழ்க்கை இன்றும்,
மெழுகுவர்த்தி துணையோடு
மெழுகாய் கரைகின்றதே...
கரம்கொடுக்கும் கரங்களுக்கு
கறைப்படுத்தி நீ முகம் காட்டுகிறாய்,
போலியான உன்வேஷம்
மழை வெளுத்துகாட்டியதே....
நீலிக்கண்ணீரும் காட்சிகளும்,
பொய்ஆடையின்றி நிர்வாணமாய்
அரங்கேற்றியதும் மழைவெள்ளமே...
குதறிப்போட்ட எங்கள் வாழ்க்கையை
கூறுபோடும் ஈனபிறவிகளே,
ஈமசடங்கிலும் ஈக்களாய்
மொய்க்கின்றாயே இனிப்பைதேடி...
விடியுமோ வாழ்க்கை என்றே
ஏக்கத்திலேயே ஏமாற்றமாய் ,
எரிமலையாய் எரிகிறதே
வயிறும், நினைவுகளும்....
- கவிதை பூக்கள் பாலா
LikeComment

மாற்றத்தில் கரம்கொடுத்து காவியம் படைப்போம்:



வீருநடைபோடு விடியலை நோக்கி,
விடிந்திடும் என்றே நம்பிக்கைக் கொள்ளு,
நாட்டின் நிலையறிந்து வீதியில் இறங்கு,
உன்நலம் காக்கவே கருத்தினில் கொள்ளு,
கொள்ளையே கொள்கையாய் அடிமைகளின் நிலையில்
கொடுமைகளை கண்டே களத்தினில் நில்லு,
ஒற்றுமை இங்கே முழுமையாய் கூடு,
கொட்டமடிக்கும் கூடாரங்களை ஒழித்திட எண்ணு
மாற்றதின் நிலைகளை கூவியே சொல்லு,
நடிப்பில் திளைத்து நாட்டை பிளக்கும்
நயவஞ்சக அரசியலை நடுவீதியில் கொல்லு,
நாட்டின் நலமே நமதென மனம்பொங்கு,
மாற்றத்தில் கரம்கொடுத்து காவியம் படைப்போம்...
வென்று தமிழகம் காத்திட்டேன் என்ன சொல்லு,
நெஞ்சை நிமிர்த்து போராட்டம் தொடங்கு...

- கவிதை பூக்கள் பாலா
இதமான மனநிலை இல்லாதபோதும்,
இருப்பதாய் நினைக்கும் மனமிருந்தால்,
வாழ்க்கை சுமூகமாய் கடந்துவிடும்...
சில்லென்றகாற்றும்,
சிலித்திடும் தேகமும்,
சினமழிக்கும் வேலையாய்,
சிந்தையில் குடிக்கொள்ளட்டும்....