என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, November 14, 2014

கடுகானாலும் வானம் கடந்து நிற்கும்

பிடித்தவரை இடறி நின்று
சாதித்து சிகரம் தொட்டாலும்
மனம் ஏனோ முழுமையடைவதில்லை ....
வெற்றி இனிப்பதில்லை
வெற்றிடமாய் காணும்
திசை எல்லாம் ...
சிறிய புன்முறுவல் ,
சின்னதாய் முகமலர்ச்சி
காணத்துடிக்கும் நெடிப்பொழுதும்
மரணத்தையே தோற்கடிக்கும்
வலி குடல் கவ்வும் ,
இதயம் சுடுகாடாய் எரியும்
கைதட்டல்கள்
கடைசி இசையாய்
காது நுகரும்
வாழ்த்துக்கள் ஒப்பாரியாய்
ஓநாயாய் ஓலமிடும்....

இதயம்தொட்டவர்  கரம் பற்றி
 வெற்றிக் கனி
பறிக்கும் நிமிடம்
கடுகானாலும் 
வானம்  கடந்து நிற்கும்
 இன்பம் இமயம் தொடும் ....

- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 13, 2014

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினத்தில அவங்களுக்கு போட்டியா ?
ஏன் ? இப்படி எல்லாம் அவங்கள சந்தோசமா பாத்துகங்க
நாளைக்கு அவங்க கூட நேரம் அதிகமா செலவிடுங்க .
குழந்தைகளோட குழந்தையா மன ரீதியா மாறிடுங்க..
நினைவுகளை  பகிந்துக்  கொள்ளுங்கள்........

Tuesday, November 11, 2014

காதல் உயிரென இன்னும் தொடர்வது ...........

சந்தோஷ நிமிடம் நாம்
பேசிய முதல் வார்த்தை
கடின காலம் கண்டித்து
நீ நடத்திய மெளனயுத்தம்
நிறைவு நேரம் உன்துயர்
துடைத்து நீ என் நெஞ்சில்
புதைந்த அரவணைப்பு
இறுகிய நிமிடம்
துக்கம் தாளாது நீ சிந்திய கனம்
கரம் இருந்தும் துடைக்க துப்பில்லா
நான் துடித்தது
சினம்நிறைத்தது
சிந்தனை இருந்தும் தெரிந்தும்
வீம்பாய் சிறையில் சிக்கியது
பொறுமை புரையோடியது
கண்டும் காணாது
நீ நடத்திய நாடகம்
உண்மை என நம்பியது
வலிகள் நிறைத்தது
உன் நினைவில் நான்
இல்லாமல் போனது
உணர்ச்சி நிறைத்தது
நீ கொண்ட
காதல் உயிரென
இன்னும் தொடர்வது ...........
- கவிதை பூக்கள் பாலா

 

இதழின் ஓரம் சிவந்த தடம் ......

தழின் ஓரம்
சிவந்த தடம்
காரணம் யாதென்று
வினவும் பார்வைகள்

கலங்கப் பார்வை
ஏளனப் பார்வை
ஏக்கப் பார்வை
காமப்பார்வை
கனிவுப்பார்வை
நக்கல் பார்வை
காரணம் ஒன்றேதான்

சினம் தடம் பதித்தது
பற்கள் உதவியது .........

- கவிதை பூக்கள் பாலா

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?....
--------------------------------------------------------
ஆயிரம் உறவுகள் உண்டிங்கே சுற்றி
அதில் அர்த்தம் பொதிந்தவை எத்தனை
என்றெண்ணி வடிக்கும் நோக்கில்
சிந்தனை சிக்கி
சிலந்தி கூட்டினுள் நானானேன்

ஒவ்வொன்றும் தனித்திசைகள்
தனக்கொன்று கோட்பாடுகள்
பார்வைகள் பலாயிரம்
பறக்கும் வலிமைகள் பலவாரு
விரும்பியனைத்தாள் விருப்பமாவோம்
வெட்டி எறிந்தால் விலகி நிற்போம்
உண்மையென்றால் உருகிப்போவோம்
உணர்வுயென்ரால் உயிராயிருப்போம்
உருகுலைத்தால் உதாசினமாக்குவோம்
நடிபென்றால் நாகரீகமாய் நகர்வோம்
நாடிப்பிடித்து, ரத்தசோதனை நடத்தி
இனமொழியளர்ந்து சுயநலம் சீர்தூக்கி
சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........
- கவிதை பூக்கள் பாலா

Monday, November 10, 2014

வலிகள் மட்டும் மாறாமல் தொடர்கின்றது..........

இதயம் ஏனோ கனக்கின்றது
காரணம் புரிந்தும் புரியாமல் இருக்கின்றது
விவரம் அறியா குழந்தை போல்
விரல்சூப்பி வில்லங்கம் புரிகிறது
உணர்வும் அறிவும் சண்டையிடுகின்றது
வலிகள்  மட்டும் மாறாமல் தொடர்கின்றது
- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 6, 2014

வயது அறுபது ஆனால் என்றும் நீ பதினாறு .....

குழந்தையாய்
திரையில் அறிமுகமாகி
சகலத்தையும் கற்றாய்
திரைத்துறையில்
சகலகலாவல்லவனானாய் .........
இமயம் முதல் குமரி வரை
திரைத்துறையில் நீந்தி
மகாநதியாய்  வலம்வந்தாய் ......
மாற்றங்கள் எதுவானாலும்
துணிந்து செயல்பட்டாய்
செவாலியர் சிவாஜியின்
செல்லக்குழந்தையானாய்
வேடங்கள் பல கண்டு
வீறுநடை போட்டு
ரசிகனை தொண்டனாய் மாற்றாமல்
தனிப்பாதை உனதாக்கி
இந்திய திரைவானில்
தன்னிகரில்லா இந்தியன்
திருமகன் நீயானாய்..
வயது அறுபது ஆனால்
என்றும் நீ பதினாறு
பிரபஞ்ச நட்சத்திரமாய் என்றும்
ஒளிர்வாய் நவரச உலகநாயகனே !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- கவிதை பூக்கள் பாலா