என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, January 21, 2011

இடம் தர மறுப்பதேன் ?



பூவே உன்னை நேசித்தேன்,
காதலி நினைவாலே !
அன்பு கொண்டு காதலிக்க,
அவளும் எங்கே இருகின்றாள்.
கனவில் நித்தம் கண்ணடிப்பவளே !
உன் முகம் காட்ட மறுப்பதேன் ?
இதயத்தில் தினம் தினம்
ஓவியம் வரைபவளே !
என் காதல் குடிபுக,
உன் இதயம் இடம் தர மறுப்பதேன் ?
...

Friday, January 14, 2011

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...














தமிழனுக்கு தலை நாளாம்
பொங்கல் எனும் திருநாளாம்,
உழுது வாழ்பவனுக்கு
உன்னதமான பெருந்நாளாம்,
கட்டி ஆண்டவனிடம் காளைகள்
சன்மானம் பெறும் நன்நாளாம்,
வெண்திரையில் கவர்ச்சி காட்டி
பெரும் கல்லாக்கட்டும் கலைநாளாம்,
பூமி மகளை பலவிதமாய்
அலங்கரிக்கும் மணநாளாம்,
விதவிதமாய் உடுப்பு போட்டு,
பொங்கிவரும் அழகை கண்டு,
பொங்கலே! பொங்கல்! என்று
வாழ்த்து சொல்லும் தைத்திருநாளாம்....
- இனிய பொங்கல் நல்வாழ்த்துகளோடு
கவிதை பூக்கள் பாலா
..

Thursday, January 13, 2011

தோழமைக்கு கொடுத்த (தொடுத்த ) பரிசு




















பரிசு கொடுக்க விரும்பினேன் தோழியே !
பலநூறை புரட்டி விட்டேன் ,
புரண்டு புரண்டு அழுது விட்டேன்.
விடை தெரியாது , விழி பிதுங்கி
கனநேரம் கண்ணயர்ந்தேன் , கனவிலும்
புன்னகைத்தாய் ! பரிசெங்கே என்றேதான்.

உன் புன்னகையின் ஒளியினிலே
புது ஞானம் பிறந்தடி தோழியே !
கவிதையின் ஊடே நம் நட்பு பிறந்ததால்
கவிதையை பரிசளித்தால் நலமன்றோ தோழியே ! ,
முழுமையாக முடிவெடுத்து ,
கவிதை தொடுக்க முனைதேன் தோழியே !.

என் தமிழில் வார்த்தைகள் பஞ்சமில்லை என்றாலும் ,
உன்முன்னே என் கற்பனை பஞ்சமானதடி தோழியே ! ,
பலம்கொண்டு பலமுறை, என்தமிழ் வார்த்தைகளை
பிரசவித்தேன் ஆனந்த வலிகொண்டே தோழியே !.,
ஆனாலும் ஏனோ இடை மறித்து பல்லித்தது ,
உன் அழகிற்கு இணை இல்லை என்றேதான் தோழியே !

பல தவங்கள் புரிந்தே பின்னே , புலப்பட்டது யாதென்று ,
உனை வர்ணிக்க இந்த ஒற்றை வரிபோதுமென்று தோழியே !
''என் தமிழ்தாய் ஈன்றெடுத்த தலை
பிரசவ குழந்தையடி நீ !''

ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்ல இயலாததையும்,
சிற்பியாலும் செதுக்க முடியாத சிற்பத்தை ,
இந்த ஒற்றை வரி சொல்லி இருக்கும் ,
நீ யார் என்றேதான் தோழியே !

இன்னுமா! புரியவிலை என் தோழியே !,
தலை பிரசவ குழந்தையை காணும் தாய்க்கு,
துச்சமடி உலகில் கிடைக்கும்(கொடுக்கும்)
பொருளனைத்தும் தோழியே !,
மறக்க முடியா பரிசு..........
இதுவல்லவோ !
என் அழகு தோழியே ! .....
- தோழமையுடன் கவிதை பூக்கள் பாலா

குறிப்பு : என்னிடம் பரிசு கேட்ட தோழிக்கு , நான் வடித்த கவிதை பரிசு
இதற்கு என் தோழியின் பதில் என்னவாக இருந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போன் .

..

Tuesday, January 11, 2011

இதுதானே நியதி !
















உதடுகள் சண்டையிட்டு வார்த்தை பிறந்தது,
கண்கள் பேசிக்கொண்டு காதல் மலர்ந்தது,
கைகள் இணைந்து நட்பு என்றது ,
உடல்கள் பிணைந்து (காம) பசி தீர்த்தது,
உயிர்கள் உறவாடி உறவை வளர்ந்தது,
குரலோசைகள் ஒன்றாகி உயர்வு கிட்டியது,
இன்பம் துன்பம் முட்டிவாழ்க்கை என்றது .
ஜெயித்தது உடன் ஒட்டி கொண்டது, .
இன்பம் இதுவல்லவோ வாழ்க்கை என்றது ,
துன்பம் போதுமட என்று சொல்லவைத்தது,
வாழ்க்கை, இதுதானே நியதி என்றது .....
- கவிதை பூக்கள் பாலா


...

Monday, January 10, 2011

நாவரசி (நிர்வாண நடனம் )


மெகா இரண்டு வாயிற் கதவுகள்
பாதுகாக்கும் நடன அரங்கில் ,
முப்பத்தி இரண்டு காவலர்கள்
சுற்றி தீவிர சோதனையிட,
பார்த்து பரவசப்பட ஜொள்
பார்வையாளர்களை அனுமதிட ,
நீண்ட பதுங்கு குகைக்குள்ளிருந்து
நிர்வாண நடனமாடுகிறாள் நாவரசி ......
- கவிதை பூக்கள் பாலா .


.........

Sunday, January 9, 2011

பார்த்து ரசிக்க....


வானில் பார்த்து ரசிக்க நிலவுண்டு ,
பூமியில் ரசிக்க நீ மட்டுமே எனக்குண்டு ,
நிலவு பார்த்து ரசிக்க ,
நீ என் வாழ்க்கை முழுக்க
என்னவளே !.........
- கவிதை பூக்கள் பாலா

Thursday, January 6, 2011

விண்னை தொடும் நம் காதல் .......



















உன்
விழிகளுக்கு,
எனை சுட்டெரிக்க பணித்த தேவதையே !
உன்னுடன் பிரிவில்லா உறவாடும்,
உன் உறவுகளிடம் வினவிப்பார் !

ன் கூந்தலில் குடி இருக்கும்
ரோஜாவை கேட்டு பார் ! ,
என் புன்னகையின் வலி புரியும்.

தோடுகளிடம் கேள்வி தொடுத்து பார் !,
உனை தொடரும் என்னிலையை,
தொடர்கதையாய் சொல்லும் .

ன் தோல் தழுவும் துப்பட்டாவை
முறுக்காமல் விட்டுப்பார் !,
தாவி எனை தழுவிக்கொள்ளும் .

ன் கால் தடங்களிடம்
உளவுச்செய்தி உளற சொல்லிப்பார் !,
உனை பல காலம் பின்தொடரும்
உளவாளி நான் என்று எச்சரிக்கும்.

ன் சுவாச காற்றிடமும்
கனிவாய் கதைத்து பார் !,
எனை கடக்கும் நேரம் அதன்
உடல்சுடும் உண்மையை உரைக்கும்.

நீ வடிக்கும் வியர்வையை
விரைவாக கேட்டு பார் !,
தீர்த்தமாய் என் தலை சுமைக்கும்
பக்தியை பறைசாற்றும் .

நீ கடக்கும் பாதையை
என் வாழ்க்கை வீதியாக்கிய காதல் ,
உன் இதயத்தில் சமாதி ஆகும் முன் ,
உன் காதலுக்கு விடுதலை கொடு ,
விரைவில்
விண்னை தொடும் நம் காதல் ............
கவிதை பூக்கள் பாலா

என் காதலுக்கு(கவிதைக்கு) வாழ்த்து சொல்லிட்டு போங்களேன் ....
என் கவிதைகள் தலை வணங்கி ஏற்கும்....