என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

மனிதன் பயணம் :

எப்படியோ எப்பொழுதோ இழந்திட்ட உணர்வுகள்
தனக்குள்ளே புதைத்தே தான் கடக்கின்றோம்
விளைவாய் விபரீதமாய் மன உலைச்சல்கள்,
வடிந்திடும் கனவுகள், உலவிடும் நினைவுகள்,
அசைத்துப்போடும் உணர்வுகள் தான் மனிதன்,
பயணிக்கு வாழ்க்கையில் சிலபிடிப்புகள் சில்லிடும்,
சிறகடிக்கும் மனது மீண்டும் பிறக்கும் மனிதனாய்,
மனம் மலர்ந்திடும் மகிழ்வாய் மாற்றிடும் கடமைகளை,
தொலைந்த மகிழ்வு தொடங்கிடும் கடமையோடு..
வாழ்க்கை மகிழ்வுக்கு பல பயணங்களாய் தொடரும்,
மனிதன் பயணம் ஒரு சுழச்சியே...

அடைமழை

அடைமழையில் ஆனந்தமானது,
சோம்பல் முறிக்கும் உடல்
மெத்தையில் சுகம்காணுது
ஓடாமல் ஓய்வுக்கொள்ளுது,
ஜன்னலோர மழைசாரல் கவிதையாகுது,
சூடான தேனீரும் செர்க்கமாகிறது,
சூரியனின்றி நேரம் கடிகாரமானது,
காலநேரங்கள் காலம்கடத்துது....

சற்றே தணிகிறது ..

சில்லென்ற மழைச்சாரல்
சிலிர்த்திட்ட காலைவேளை ,
காற்றோடு செல்ல சண்டையிடுகின்றது
மனங்களில் தண்ணீர் கவலை
சற்றே தணிகிறது ..
இரவென்றால் துணையாகும் உறக்கமும் கனவும் ,
விடிந்தால் விட்டு விலகிச்செல்லும் காரணம் யாதோ !

மழைகுளியல்:


தொடுவானம் தொட்டிலாக்கி,
அன்னைபூமியின் விரல்பிடித்து
சுற்றிவரும் நிலவுமகள்..
கிலுகிலுப்பை இடிகலாக்கி,
புன்னகைத்து மின்னலாக்கி,
வருணனை நீர்ச்சாரலாக்கி( ஷவர்)
மண்வாசனை களிம்பு பூசி
குளித்தெழுகிறாளோ வெண்மதியாள்..

- கவிதை பூக்கள் பாலா
Like

என்னவளே !

இலைகளின் நடுவே பூத்திடும் மலரை போல்
உந்தன் இருப்பிடம் எளிதில்
விழிகள் கண்டிடும் மாயமென்ன ?
உந்தன் புன்னகைதானே !
என்னவளே !

மழை...

இடைவிடாது அழுகிறாய் ,
இடையிடையே ஏங்கி விசும்புகிறாய்,
உன் கண்ணீரில் நாங்கள் மிதகின்றோம்,
தவறிழைத்தது நாங்கள் அல்லவோ !...