என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, October 28, 2010

விதை



மண்ணிட்டு என்னை புதைத்து விட்டனர்,
உயிர்ப்பெற்று மண்ணில் செடியாய் பிறந்து விட்டேன்.
வளர்ந்து மரமாகவும் உருப்பெற்றேன்,
பூக்களை சுமந்து கன்னியானேன்.
மன்மத வண்டுகளோடு காதலும் கொண்டேன்,
பிள்ளைகளாய் காய்களை பெற்றெடுத்தேன்.
(மனித )கயவர்கள் வந்து பறித்தபோது தவித்துபோனேன்,
மீண்டும் மீண்டும் பெற்றெடுத்தேன் .
பறித்து எனை வெறுமையாக்கினர்,
பசுமை மறைந்து கருத்துபோனேன்.
தனித்து முதுமையில் தளர்ந்துப் போனேன்,
நினைத்து தினமும் வாடிப்போனேன்.
பார்த்து பதரிய கயமை உலகம்
கொன்று என்னை கூறு போட்டது .......
- பாலா

கனவு நாயகி

அசைந்தாடும் பூச்சரமே !
ஆட்டுவிக்கும் அள்ளி இனமே !
உருபெற்ற கற்பனையே !
எனை உயிர்பிக்கும் உடலழகே !
கண்ணடிக்கும் விண்மீனே !
கன்னியான வெண்ணிலவே !
வர்ணிக்கும் தாஜ்மஹலே !
வடித்தெடுத்த கலைச்சிற்பமே !
எழுதி வைத்த கவிதையே
எழுதாத கற்பனையே !
இரவின் கனவே !
இன்பத்தின் எல்லையே !
பிரமனின் ரசனையே !
இளமையின் கனவு நாயகியே !
- பாலா

Saturday, September 18, 2010

அந்த யாரினில் நானிருபேனா !















இரத்தம் தோய்ந்த உன் உதடுகளின்
நித்தம் ஒரு கவிதை படிக்க ஆசை ,
உன் கண்சிமிட்டும் கரு விழியில் ,
எனை கண்டெடுக்க ஆசை ,
உன் விரல்களோடு நடனமாடும் கூந்தலிலே தென்றலாக குடியிருக்க ஆசை,
உந்தன் செவிகளில் ஊஞ்சலாடும்
தோடுகளாக நானிருக்க ஆசை ,
உன் முன்னழகின் மயக்கத்திலே
என் மதியிழக்காமல் காதலிக்கவே ஆசை ,
மலைகளின் வளை போன்ற இடையினிலே
குழந்தையாய் அமர்திருக்க ஆசை ,
உன் வருகையை பறை சற்றும் கொலுசோசை
இசைதனில் லையத்திருக்க ஆசை ,
உன் பூம்பாதம் தாங்கிகொள்ளும்
மலராக என்றும் நானிருக்க ஆசை ,
உன் தேகத்தின் அழகுதனை அருளிய
பிரமனுக்கு நன்றி சொல்லவே ஆசை ,
உனக்கு யார்மீது ஆசை நானறியேன் பெண்ணே !,
இருந்தாலும் ,அந்த யாரினில் நானிருபேனா !
அறிந்து கொள்ள உனை பின்தொடரவே ஆசை .

Friday, September 17, 2010

நண்பேண்டா ! என் நண்பேண்டா !

நண்பேண்டா ! என் நண்பேண்டா ! என்று அறிமுகம் செய்த போது
அகம் மகிழ்ந்தேன் நண்பா !
அடிஆளோடு கந்துவட்டிகாரன் வந்து,
என் அகம் நேக நைய புடைத்த போது தான் விளங்கியது ,
நீ சொல்லியத்தின் அர்த்தம் .

Wednesday, September 8, 2010

இவள்தான் என் காதலியோ !!!

கண்ட கனவுகள் எல்லாம் நிஜங்கள் ஆவதில்லை !,
கண்ட காட்சி எல்லாம் ஆழ் மனதில் நிற்பதில்லை !
கண்ட பெண்ணெல்லாம் காதலியாய் மாறுவதில்லை !
கண்ட நிமிடம் முதல் உன்னை மட்டும் ஏனோ !
என் மனம் மறக்கவில்லை !!!!

Wednesday, September 1, 2010

என்னவனே !!!

என்னுள் நாணத்தை விதைத்தவனே !
மயக்கும் விழி காட்டி , என் நினைவை தொலைத்தவனே !
ஈர்க்கும் பேச்சழகில் என் இதயத்தை வருடுபவனே !
என் இளகிய மனதில் , இதமாக இம்சைப்பவனே !
வெண்மையான மனதிலே காதல் வண்ணங்களை தெளிப்பவனே !
குடும்ப காவலர்களை கண்னர்த்தி,என் இதயத்தை களவாடியவனே !
களவு போன இதயம், இருக்கும் இடமறிந்தும் ,
மீட்டெடுக்க முயலாமல் என்னை மதி மயக்கியவனே !
காணாத பல கனவை கண்ணுக்குள் நுழைத்தவனே !
உணராத உணர்ச்சிகளை உடலெங்கும் உண்டாக்கியவனே !
உண்மையான பாசங்களை, பாசாங்காய் எனக்கு உருமாற்றியவனே !
நட்பு எனும் வைரஸ்சை என்னுள் செலுத்தி,
எனக்கு காதல் நோயை கொடுத்தவனே! என்னவனே !!! - பாலா

கடிகாரமும் புலம்புகிறது ( இந்திய அரசியல்வாதிகளால் )


கடிகாரமே ! உனக்கு பாராபட்சம் ! என் இந்திய அரசியல்வாதிகள் மீது ,
சரியான நேரத்தை கட்டுவதில்லை !, உன்னால் தான்
நாங்கள் காலம் தவறி அனைவரையும் காக்க வைக்கிறோம் .
நேரம் தவறி தவறி எம்மக்களை வாட்டி வதைக்கிறோம் .
எங்கள் தவறுக்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டும் .
கடிகார உள்மனசு பேசுகிறது . இந்த முறை உங்கள் தவறுகளுக்கு
பொறுப்பேற்க ஆள் கிடைக்க வில்லையோ !!!